Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 28 நவம்பர், 2017

பிஎஸ்என்எல் அதிரடி: கூடுதல் நன்மைகளை வழங்கும் வண்ணம் ரூ.187/-ல் திருத்தங்கள்.!

கடந்த இரண்டு வாரங்களாக, தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் அவரகளின் கட்டணத் திட்டங்களை மறுசீரமைத்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக ஏர்டெல் மற்றும் ஐடியா செல்லுலார் போன்ற தனியார் இயக்குநர்கள், தற்போதுள்ள திட்டங்களுக்கு ஏற்ற மாதிரியான புதிய திட்டங்களை அறிமுகப்படுத்திய வண்ணம் உள்ளனர்.
இதனை தொடர்ந்து தற்போது, ​​அரசுக்கு சொந்தமான தொலைத் தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் (பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்) நிறுவனம் அதன் ரூ.187/- என்ற கட்டண திட்டத்தின் நன்மைகளில் சில பிரதான மாற்றங்களை செய்துள்ளது.

ஏர்டெல் மற்றும் ஐடியா திட்டங்களை குறிவைத்து

கடந்த மாதம், பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் (வட்டத்திற்கு ஏற்றபடி விலை மாறுபடும்) ரூ.187/- திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த திட்டமானது தனியார் தொலைதொடர்பு இயக்குனர்களான ஏர்டெல் நிறுவனத்திடம் இருந்து கிடைக்கும் ரூ.199/- மற்றும் ஐடியா வழங்கும் ரூ.197/- போன்ற திட்டங்களை குறிவைத்து அறிமுகமானது.

நன்மைகள் பிஎஸ்என்எல்-ன் ரூ.187 திட்டத்தின் நன்மைகளை பொறுத்தமட்டில், 1ஜிபி அளவிலான டேட்டா, ஹோம் வட்டத்திலான வரம்பற்ற குரல் அழைப்பு, இலவச காலர் ட்யூன் ஆகிய நன்மைகளை மொத்தம் 28 நாட்களுக்கு வழங்கியது. தற்போது இந்த திட்டம் மறுசீரமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ரூ.186/-க்கு 


எங்களுக்கு கிடைத்த தகவலின்படி, பிஎஸ்என்எல் நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.186/-க்கு இந்த திட்டத்தை வழங்கி வருகிறது. ஆபரேட்டர் இந்த திட்டத்தை அக்டோபர் 21, 2017 அன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

90 நாட்களுக்குள் மட்டுமே 


இது 90 நாட்களுக்குள் மட்டுமே கிடைக்கும் ஒரு விளம்பர திட்டமாக மேற்கோளிடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில், இந்த திட்டமானது அக்டோபர் 21, 2017 முதல் ஜனவரி 18, 2018 வரை மட்டுமே செல்லுபடியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எந்த வட்டத்திற்கும் அழைப்பு


இப்போது இந்த திட்டத்தின் கீழ், வரம்பற்ற தேசிய ரோமிங் குரல் அழைப்பு நன்மைகளும் கிடைக்கும். அதாவது நீங்கள் மற்ற வட்டங்களுக்கான அழைப்புகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது. பிஎஸ்என்எல் அதன் செயல்பாடுகளை வைத்திருக்கும் எந்த வட்டத்திற்கும் அழைப்புகளை செய்யலாம் என்று நிறுவனம் கூறியுள்ளது

டெல்லி மற்றும் மும்பையில் சேவை கிடையாது 


நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்கலாம், பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மெட்ரோ - அதாவது டெல்லி மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் - சேவை கிடையாது. மற்றொரு அரசுக்கு சொந்தமான நிறுவனமான எம்டிஎன்எல் நிறுவனம் தான் அந்த வட்டாரங்களில் செயல்படுகிறது. எனவே, அந்த வட்டங்களுக்கு நீங்கள் அழைக்கும்போது, ​​குரல் அழைப்புகள் நிலையான விகிதங்களில் கட்டணம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

எந்த மாற்றமும் இல்லை 


ஆக திருத்தப்பட்ட பிஎஸ்என்எல் திட்டமான ரூ.187/- ஆனது தற்போது, வரம்பற்ற குரல் அழைப்பு, இலவச வெளிச்செல்லும் ரோமிங் அழைப்புகள், 1 ஜிபி அளவிலான தரவு மற்றும் இலவச காலர் ட்யூன் ஆகியவற்றை உள்ளடக்கியது. திட்டத்தின் செல்லுபடியாகும் 28 நாட்கள் என்பதிலும் எந்த மாற்றமும் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக