Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 30 நவம்பர், 2017

கர்நாடக ஸ்டைல் காரசாரமான பருப்பு உருண்டை செய்வது எப்படி?

நுஜ்ஜிணுன்டே ரெசிபி கர்நாடகவின் பாரம்பரிய உணவாகும். இதை காலை உணவாகவோ அல்லது ஸ்நாக்ஸ் ஆகவோ இதை தயாரிப்பர். இதில் நுஜ்ஜூ என்பதற்கு உடைத்த பருப்பு என்றும் உண்டே என்பதற்கு உருண்டைகள் என்றும் பொருள். எனவே தான் இந்த நுஜ்ஜின உண்டே என்பதற்கு உடைத்த பருப்பு உருண்டைகள் என்று அழைக்கப்படுகிறது.

இந்த கர்நாடக ஸ்டைல் காரசாரமான ஸ்நாக்ஸ் ஆனது துவரம் பருப்பு கொண்டு செய்யப்படுகிறது. இந்த ரெசிபியை துவரம் பருப்பு மற்றும் கடலை பருப்பு கொண்டும் செய்யலாம். உருண்டையானது குக்கர் அல்லது இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைக்கப்படுகிறது. இந்த ஸ்நாக்ஸ் கொழுப்பு குறைந்த உடலுக்கு நன்மை அளிக்கக்கூடிய ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் ஆகும்.

இந்த வேக வைத்த பருப்பு உருண்டைகள் மோர் குழம்பு போன்ற தயிர் ரெசிபிக்கு சூப்பரான சைடிஸாக இருக்கும். இங்கே வெந்தயம் இலைகள் பயன்படுத்தப்படுகிறது. இது உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பயன்படுத்தலாம் அல்லது இல்லாமலும் செய்யலாம். இதற்குப் பதிலாக கேரட் மற்றும் கொத்தமல்லி இலைகளை பயன்படுத்தினால் சுவை இன்னும் பலமடங்கு அதிகரிக்கும்.

இந்த நுஜ்ஜின உண்டே ரெசிபியை எளிதாகவும் விரைவாகவும் வீட்டிலேயே செய்து விடலாம். இது ஒரு ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் என்பதால் குழந்தைகளுக்கு செய்து கொடுப்பது நல்லது. உங்கள் காலை உணவிற்கான இந்த ஆரோக்கியமான ஸ்நாக்ஸ்யை எப்படி செய்வது என்பதை காணலாம்.

நுஜ்ஜிணுன்டே ரெசிபி /கர்நாடக ஸ்டைல் காரசாரமான பருப்பு உருண்டை செய்வது எப்படி /நுஜ்ஜின உண்டே ரெசிபி /வேக வைத்த பருப்பு உருண்டை ரெசிபி 


Recipe Type: காலை உணவு 
Serves: 20 உருண்டைகள் 

INGREDIENTS 

துவரம் பருப்பு - 1 பெளல் 
தண்ணீர் - 1/2 லிட்டர் +3 கப் 
முழு பச்சை மிளகாய் (சிறியது) - 10-20 (மிளகாயின் காரத்தன்மைக்கு ஏற்ப சேர்த்து கொள்ளவும்) 
இஞ்சி (தோலுரித்து) - 4 (1அங்குலம் அளவிற்கு) 
தேங்காய் துருவல் - 1 கப் 
தேங்காய் துண்டுகள்(நன்றாக நறுக்கியது) - 1/2 கப் 
வெந்தயம் இலைகள் - 2 கப் 
உப்பு - தேவைக்கேற்ப 
சீரகம் - 2 டேபிள் ஸ்பூன் 
எண்ணெய் - கீரிஸிங் 

HOW TO PREPARE

1. துவரம் பருப்பை கலப்பதற்கு ஒரு பெளலில் எடுத்து கொள்ளவும் 
2. இப்பொழுது 3 கப் தண்ணீர் சேர்த்து ஊற வைக்கவும். 5-6 மணி நேரம் கழித்து தண்ணீரை வடிகட்டி விடவும் 
3. முழு மிளகாயை மிக்ஸி சாரில் போட்டு கொள்ளவும் 
4. இப்பொழுது இஞ்சி துண்டுகளையும் அதனுடன் சேர்த்து கொள்ளவும். 
5. ஊற வைத்த துவரம் பருப்பில் ஒரு கைக்கரண்டி அளவு எடுத்து மிக்ஸி சாரில் சேர்க்கவும். 
6. கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும். 
7. அதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளவும் 
8. பிறகு மறுபடியும் ஒரு கைக்கரண்டி துவரம் பருப்பை அதே மிக்ஸி சாரில் போடவும். 
9. கொர கொரப்பாக அரைத்து அதையும் பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளவும் 
10. இந்த மேற்கண்ட முறையை நீங்கள் ஊற வைத்த துவரம் பருப்பு முழுவதையும் அரைக்கும் வரை செய்யவும். 
11. இது முடிந்ததும் தேங்காய் துருவலை சேர்க்கவும் 
12. பிறகு அதனுடன் நறுக்கிய தேங்காய் துண்டுகளையும் சேர்த்து கொள்ளவும் 
13. பிறகு வெந்தயம் இலைகள் மற்றும் உப்பு சேர்க்கவும்
14. எல்லாவற்றையும் நன்றாக கலக்கவும் 
15. பிறகு அதனுடன் சீரகம் சேர்த்து நன்றாக கலக்கி தனியாக எடுத்து வைக்கவும். 
16. ஒரு இட்லி பாத்திரத்தில் 1/2 லிட்டர் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும் 
17. இட்லி தட்டை அதன் மேல் வைக்க வேண்டும். 
18. இட்லி தட்டில் உள்ள குழிகளை எண்ணெய்யை கொண்டு தடவ வேண்டும். 
19. இப்பொழுது பருப்பு கலவையை கொஞ்சம் எடுத்து கைகளால் நீள் வட்ட வடிவில் பந்து மாதிரி உருட்ட வேண்டும். 
20. இந்த பந்துக்களை இட்லி தட்டில் வைக்க வேண்டும் 
21. இப்பொழுது இட்லி பாத்திரத்தை மூடியால் மூடி 15 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து வேக வைக்கவும் 
22. மெதுவாக மற்றும் கவனமாக மூடியை திறந்து ஆவியுடன் கூடிய உருண்டைகளை எடுக்கவும். 
23. பிறகு அதை ஒரு தட்டிற்கு மாற்றி பரிமாறவும். 

 NUTRITIONAL INFORMATION 

பரிமாறும் அளவு - 1 உருண்டை 
கலோரிகள் - 70 
கொழுப்பு - 0.9 கிராம் 
புரோட்டீன் - 1 கிராம் 
கார்போஹைட்ரேட் - 10 கிராம் 
சுகர் - 1 கிராம் 
நார்ச்சத்து - 1.6 கிராம் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக