Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 25 நவம்பர், 2017

பிஎஸ்என்எல் அதிரடி: 1ஜிபி/நாள்; 90 நாட்கள் செல்லுபடி கொண்ட ரூ.392/- அறிவிப்பு.! பிஎஸ்என்எல் அதிரடி: 1ஜிபி/நாள்; 90 நாட்கள் செல்லுபடி கொண்ட ரூ.392/- அறிவிப்பு.!

அரசாங்கம் நடத்தும் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் (பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்), தமிழ்நாடு வட்டாரத்தில் அதன் புதிய திட்டமொன்றை அறிமுகம் செய்துள்ளது.
இந்த புதிய எஸ்டிவி 392 ஆனது, பிஎஸ்என்எல் கேமிங் ஆஃபர் என்ற பெயரை பெற்றுள்ளது. பெயருக்கு ஏற்ற வண்ணம் அட்டகாசமான நன்மைகளையும் வழங்குகிறது. இந்த திட்டமானது, பிஎஸ்என்எல்-ன் ட்ரிப்பிள் ஏஸ் திட்டமான ரூ.333/- வழங்கும் அதே நன்மைகளை வழங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

90 நாட்களுக்கு செல்லுபடி

பி.எஸ்.என்.எல் நிறுவனத்திலிருந்து தொகுக்கப்பட்டுள்ள இந்த கேமிங்ஆபர் ஆனது 2017 ஆம் ஆண்டு நவம்பர் 14-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும். இந்த திட்டம் ரீசார்ஜ் செய்யப்பட்ட நாளில் இருந்து 90 நாட்களுக்கு செல்லுபடியாகும்.
நாள் ஒன்றிற்கு 1ஜிபி இந்தத் திட்டத்தின் நன்மைகளை பொறுத்தமட்டில், 56 நாட்களுக்கு செல்லுபடியாகும் நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான 3 ஜி டேட்டாவை வழங்குகிறது. அத்துடன் வாடிக்கையாளர்களுக்கு டிஸ்னி கேமில் இருந்து இலவச கேம்களையும் வழங்குகிறது.

ஆண்ட்ராய்டு / ஆப்பிள் இந்த பிஎஸ்என்எல் கேமிங் எஸ்டிவி 392 திட்டமானது ஆண்ட்ராய்டு / ஆப்பிள் சாதன கொண்ட பிஎஸ்என்எல் 3 ஜி பயனர்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். இந்த பேக் ஆனது - விண்டோஸ், பிளாக்பெர்ரி மற்றும் இதர பீச்சர் போன்கள் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு பொருந்தாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஆக்டிவேட் செய்தபின்னர் இந்த திட்டத்தின் ஆக்டிவேஷன் ஆனது சி- டாப் அல்லது வெப் போர்ட்டல் மூலம் செய்யப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆக்டிவேட் செய்தபின்னர் "டிஸ்னி கேம்ஸிலிருந்து டவுன்லோட் / பிளே கேம்" என்ற இணைப்புடன் கூடியதொரு செய்தியைப் பெறுவீர்கள். ஆண்ட்ராய்டு பயனர்கள் அவர்களின் கைபேசிகளுடன் இணக்கத்தன்மையுடன் உள்ள இரண்டு கேம்ஸ்களை பதிவிறக்கம் செய்ய விருப்பம் கிடைக்கும்.

ஆன்லைனில் விளையாடும் விருப்பத்தை பெறலாம் ஒருவேளை தரவிறக்கம் செய்யப்பட்ட கேம்ஸ் உங்கள் கருவியுடன் இணங்காத பட்சத்தில், எச்டிஎம்எல்5 கேம்ஸ் கொண்டு ஆன்லைனில் விளையாடும் விருப்பத்தை பெறலாம். இந்த திட்டத்தின் வேலிடிட்டி முடியும் முன் ஒரு பயனர் இரண்டு விளையாட்டுகள் மட்டுமே பதிவிறக்க முடியும். இணக்கமான ஸ்மார்ட்போன் இல்லாத மற்றும் எச்டிஎம்எல் கேம்களை இயக்கும் வாடிக்கையாளர்கள் நான்கு கேம்ஸ் வரை விளையாடலாம். 

அதிவேக தரவு முன்பே கூறியபடி, இந்த திட்டத்தின் கீழ் 56 நாட்களுக்கு செல்லுபடியாகும் 1ஜிபி அளவிலான அதிவேக தரவை மட்டுமே பெற முடியும். அந்த வரம்பை மீறிய பின்னர் தரவு வேகமானது 80 கிலோபிட்களாக குறைக்கப்படும். டிஸ்னி கேம் சர்வீஸின் செல்லுபடியாகும் காலமும் 56 நாட்கள் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக