Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 31 ஆகஸ்ட், 2018

இன்றைய (31-08-2018) ராசி பலன்கள்


மேஷம்

உத்தியோகஸ்தரர்களுக்கு முன்னேற்றமான சூழல் உண்டாகும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். புதிய வேலை பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்விற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சுபச் செய்திகளால் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்


அசுவினி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

பரணி : சிந்தனைகள் மேலோங்கும்.

கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.
---------------------------------------




ரிஷபம்

 கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் நீங்கி அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். குடும்பத்தினருடன் விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்து கொள்வீர்கள். நினைத்த காரியத்தை சிறப்பாக செய்து  பாராட்டுகளைப் பெறுவீர்கள். பயணங்களால் திருப்தியான சூழல் அமையும்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்


கிருத்திகை : அன்பு அதிகரிக்கும்.

ரோகிணி : பெருமை உண்டாகும்.

மிருகசீரிடம் :பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
---------------------------------------




மிதுனம்

 பயணங்களால் இலாபம் அதிகரிக்கும். உறவினர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. செய்யும் காரியங்களில் தாமதம் ஏற்பட்டாலும் சாதகமான பலன்கள் கிடைக்கும். கடந்த கால நினைவுகளால் பதற்றமான சூழல் அமையலாம். திட்டமிட்ட பணிகளை நீங்களே முடிப்பது நன்மை பயக்கும்.


அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்


மிருகசீரிடம் : இலாபம் அதிகரிக்கும்.

திருவாதிரை : விவாதங்களை தவிர்க்கவும்.

புனர்பூசம் : பதற்றமான நாள்.
---------------------------------------




கடகம்

 எதிர்பார்த்த தனவரவுகள் கைகூடும். வசதி வாய்ப்புகள் மேம்படும்.  உத்தியோகஸ்தரர்களுக்கு இருந்து வந்த எதிர்ப்புகள் மறையும். பிரிந்து சென்றவர்கள் விரும்பி வருவார்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியமும் தைரியமும் அதிகரிக்கும்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : காவி  நிறம்


புனர்பூசம் : வசதி வாய்ப்புகள் மேம்படும்.

பூசம் : எதிர்ப்புகள் மறையும்.

ஆயில்யம் : தைரியம் பிறக்கும்.
---------------------------------------




சிம்மம்

 வாக்குவன்மையால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வாகனம் மற்றும் வீடு சம்பந்தமான செலவுகள் உண்டாகும். அடுத்தவர்களின் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்லவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்


மகம் : அனுகூலம் ஏற்படும்.

பூரம் :செலவுகள் அதிகரிக்கும்.

உத்திரம் : அனுசரித்து செல்லவும்.
---------------------------------------




கன்னி

 தொழிலில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்க காலதாமதமாகும். உத்தியோகஸ்தரர்களுக்கு சில காரிய தடங்கல்கள் உண்டாகும். புத்திரர்களிடம் நிதானத்துடன் செயல்படவும். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதற்கு காலதாமதமாகும்.
சந்திராஷ்டம தினம் என்பதால் கவனம் தேவை.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை


உத்திரம் : இலாபம் கிடைக்க காலதாமதமாகும்.

அஸ்தம் : தடங்கல்கள் உண்டாகும்.

சித்திரை : பாக்கிகள் வசூலாகும்.
---------------------------------------




துலாம்

 குடும்பத்தில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். புதியவர்களின் அறிமுகம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த வருத்தங்கள் நீங்கும். புதிய பயணங்கள் மேற்கொள்வது தொடர்பான  செயல்பாடுகளில் அதிக கவனம் காட்டுவீர்கள்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்


சித்திரை : ஆதரவான நாள்.

சுவாதி : வருத்தங்கள் நீங்கும்.

விசாகம் : ஆதாயம் கிடைக்கும்.
---------------------------------------




விருச்சகம்

 சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். மற்றவர்களின் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. சொத்து தொடர்பான செயல்களில் நிதானம் வேண்டும். எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது.


அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள்


விசாகம் : வெற்றி கிடைக்கும்.

அனுஷம் : நிதானம் வேண்டும்.

கேட்டை : நன்மை உண்டாகும்.
---------------------------------------




தனுசு

 சுபச் செய்திகளால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் அமையும். பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும்.  நண்பர்களின் உதவிகள் கிடைக்கும்.


அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்


மூலம் : கலகலப்பான நாள்.

பூராடம் : சாதகமான பலன்கள் கிடைக்கும்.

உத்திராடம் : உதவிகள் கிடைக்கும்.
---------------------------------------




மகரம்

 ஆன்மீக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். திருமண முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். தொழிலில் இருந்து வந்த இடையூறுகள் நீங்கும். தொழிலை மேம்படுத்துவது பற்றிய  எண்ணங்கள் மேலோங்கும்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம் 


உத்திராடம் : ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும்.

திருவோணம் : சுபிட்சமான நாள்.

அவிட்டம் : இடையூறுகள் நீங்கும்.
---------------------------------------




கும்பம்

 வழக்குகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். தடை, தாமதங்களை கடந்து வெற்றி காண்பீர்கள். வீண் அலைச்சல்கள் உண்டாகும்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்


அவிட்டம் : சாதகமான முடிவு கிடைக்கும்.

சதயம் : வெற்றி கிடைக்கும்.

பூரட்டாதி : அலைச்சல்கள் உண்டாகும்.
---------------------------------------




மீனம்

 மன உறுதியும், நம்பிக்கையும் அதிகரிக்கும். சொத்து சம்பந்தமான பிரச்சனைகள் சரியாகும்.  உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். குடும்ப பெரியவர்களுடன் ஏற்பட்ட மனவருத்தங்கள் நீங்கும்.  வாகனங்கள் மூலம் இலாபம் கிடைக்கும்.


அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை  நிறம்


பூரட்டாதி : நம்பிக்கை அதிகரிக்கும்.

உத்திரட்டாதி : மனவருத்தங்கள் நீங்கும்.

ரேவதி : இலாபம் உண்டாகும்.
---------------------------------------