Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 22 ஆகஸ்ட், 2018

விதை விதைக்கும்போது கவனிக்க வேண்டியவை!!


 Image result for விதை விதைக்கும்போது கவனிக்க வேண்டியவை!!
🌿 காய்கறிகள், கீரைகள் போன்ற பல விதைகளை விதைக்கும்போது சிலவற்றை முக்கியமாக கவனிக்க வேண்டும். அதைப் பற்றி இங்கு காண்போம்.
🌿 மண் இறுகி உள்ள நிலத்தில் விதைப்பை தவிர்க்க வேண்டும். மண்ணின் தன்மைக்கேற்ப பலன் கொடுக்கும் விதைகளை விதைக்க வேண்டும்.
🌿 விதைக்கும்போது விதைகளை மிக மிக அருகில் விதைக்கக்கூடாது.
🌿 மேலும், ஆழமாக விதைகளை விதைக்கக்கூடாது. விதை மண்ணில் மூடி இருந்தால் போதும்.
🌿 விதைத்தப்பின் நீரை அதிகமாக ஊற்றக்கூடாது. விதை மக்கிதான் முளைக்கும் அதிக ஈரம் இருந்தால் முளைக்காது.
🌿 கீரை விதையை தூவிவிட்டு மண்ணை கிளறி விட வேண்டும். பின் மெதுவாக மண்ணை அழுத்தி விட வேண்டும்.
🌿 இதன் மூலம் விதையும், மண்ணும் ஒட்டும் முளைப்பு நன்றாக இருக்கும். மண்ணில் கீரை விதை விதைத்த பின் நீரை தெளித்து விட வேண்டும். 
🌿 தொட்டியாக இருந்தால் அதன் ஓரத்தில் நீர் ஊற்ற வேண்டும். நிழலில் வைக்கக்கூடாது.
🌿 மண்ணில் வளர்வதை விட தொட்டியில் நாட்டு விதைகளின் வளர்ச்சி குறைவாக தான் இருக்கும்.
🌿 நாட்டு விதையை விதைக்கும் முன் பஞ்சகாவியாவில் இரண்டு மணி நேரம் ஊற வைத்து, பின் காய வைத்து விதைத்தால் வளர்ச்சி நன்றாக இருக்கும்.
🌿 தக்காளி, கத்தரி, மிளகாய் விதைகளை கண்டிப்பாக நாற்று விட்டு தான் பின் எடுத்து நடவு செய்ய வேண்டும். கீரை விதை விதைக்கும் முறையில் இதனை விதைக்க வேண்டும்.
🌿 விதைகளை நாட்டு மாட்டு கோமியத்தில் ஊற வைத்து பின் அதனை காய வைத்து சுரைக்குடுவையில் வைத்து எத்தனை வருடம் வேண்டுமாலும் சேமிக்கலாம்.
🌿 மண்ணில் மாட்டு சாணியை கலந்த பின் விதைத்தால் விதை விரைவாக மக்கி முளைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக