Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 23 ஆகஸ்ட், 2018

பத்து நிமிடங்கள் முன்னதாக..!!



🕕 காலை 6 மணிக்கு எழுபவரா நீங்கள்?

5.50-க்கு எழுந்து பழகுங்கள்.

கூடுதலாகக் கிடைக்கிற பத்து நிமிடத்தில், அமைதியான காலை நேரத்தில் உங்களின் அன்றைய வேலைக்கான ஆற்றலின் கதவுகள் அகலத் திறப்பதை உணர்வீர்கள்.

அறிவியல் பக்கம் -

9 நிமிடத்தில் நாற்காலியை தயாரிக்கும் ரோபோ..!!

சிங்கப்பூரில் நயாங் தொழில் நுட்ப பல்கலைக்கழகம் நாற்காலி தயாரிக்கும் ரோபோக்களை உருவாக்கியுள்ளது. அது 8 நிமிடம் 55 வினாடிகளில் மர நாற்காலியை தயாரித்து முடிக்கிறது. ரோபோக்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெளிநாடுகளில் ஆஸ்பத்திரிகள், ஓட்டல்கள் போன்றவற்றில் பணிபுரியும் ரோபோக்கள் தற்போது பொருட்கள் தயாரிக்கும் நிலைக்கு உயர்ந்துள்ளன. அளவாக வெட்டி தயாராக வைக்கப்பட்டிருந்த மரச்சட்டங்களை எடுத்து ஸ்குரூ ஆணிகள் மூலம் அவற்றை நேர்த்தியாக பொருத்துகிறது. அதற்காக ரோபோவுக்கு 2 கைகளும் சமமான அளவில் உருவாக்கப்பட்டுள்ளன. அதில் இருக்கும் எந்திர விரல்கள் மிக அழகாக நாற்காலி தயாரிக்கும் வேலையை செய்கின்றன. பல்கலைக்கழக உதவி பேராசிரியர் பாம் குயாங் குவாங் தலைமையிலான குழுவினர் இந்த ரோபோவை உருவாக்கியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக