Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 31 ஆகஸ்ட், 2018

SMARTPHONE அதிகம் சூடாவதைத் தடுக்கும் 7 வழிகள்!



நமது மொபைல் போனில் நடக்கும் மின்னணு பொருட்களின்செயல்பாடுகள் மூலமே வெப்பமானது உருவாகிறது
         இந்த அதிகமான வெப்பத்தை தாங்கும் வகையில்தான்மொபைல் பாகங்களும் வடிவமைக்கப்படுகின்றன என்றாலும் கூடமொபைலின் வேகமும், செயல்பாடும் இதனால் குறைவதை உணரலாம்.உங்கள் போன் அதிகம் சூடாகிறது என்றால்நீங்கள் கவனிக்க வேண்டியவிஷயங்கள் இவைதான்

மல்ட்டி டாஸ்க்கிங்:

             இசை கேட்டுக்கொண்டே கேம்ஸ் விளையாடுவதுஒரே நேரத்தில்பல ஆப்ஸ்களை இயக்குவது போன்றவற்றால் போனின் செயல்பாடுஅதிகமாக இருக்கும் போதுஉங்கள் போன் புராசசர் வேகம் குறையும்போனின் வெப்பம் அதிகரிக்கும்அதுவும் உங்கள் போனில் இருப்பதுகுறைந்த திறனுள்ள ரேம் என்றால்இந்த பிரச்னையை தவிர்க்கவேமுடியாதுஎனவே 2 ஜி.பிக்கும் குறைவான ரேம் கொண்ட போன்களில்மல்ட்டிடாஸ்க்கிங்கை குறைப்பது நல்லதுபல நேரங்களில் ஆப்ஸ்களைஒரே நேரத்தில் இயக்க வேண்டிய அவசியம் நிச்சயம் ஏற்படும்எனவேஅதனைத் தவிர்க்க முடியாது என்றாலும்நேரத்தைக் குறைப்பதன்மூலம் போன் வெப்பமடைவதைத் தவிர்க்கலாம்.

ஆப்ஸ்

சார்ஜிங்:

உங்கள் போனை எப்போதுமே 100% பேட்டரியுடன் தான் வைக்கவேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லைஎனவே 80 முதல் 90% அளவுக்கு பேட்டரி அளவு இருந்தாலே ஓகேசார்ஜ் போடும் போது நாம்செய்யும் இன்னொரு தவறுபேட்டரி ஃபுல் ஆன பிறகும் கூட,சார்ஜிங்கிலேயே விட்டுவிடுவதுஇரவு முழுவதும் போனை சார்ஜ்செய்வதுதான் பலரது பழக்கம்இந்த ஓவர் சார்ஜிங்கும்போன் சூடாகஒரு காரணம்தான்போன் பேட்டரி அளவை 30% முதல் 90% வரைஎப்போதும் வைத்திருப்பதேபேட்டரியின் ஆரோக்கியத்திற்கு நல்லது.

 

போன் கவர்:

புது போன் வாங்கியதுமேஒரு ஃப்ளிப் கவர் வாங்கி மாட்டுவதுதான் ஊர்வழக்கம்அது போனின் பாதுகாப்பிற்கு நல்லதேஅதே சமயம்போனின்வெப்பம் குறையாமல் இருக்கவும் இவை ஒரு காரணமாக அமைகின்றனநீண்ட நேரம் கேம் விளையாடும் போதோஅல்லது இணையம்பயன்படுத்தும் போதோ மொபைல் அதிகம் சூடாகி விடும்அதுபோன்றசமயங்களில் உங்கள் போன் கவரை கழற்றி விடுங்கள்.

மொபைல் பேட்டரி மற்றும் சார்ஜர்:

ஏதாவது பழுது ஏற்பட்டு மொபைல் போனின் பேட்டரியை மாற்றும்போதுஎக்காரணம் கொண்டு போலியான அல்லது மலிவானபேட்டரிகளை வாங்கி மாட்டாதீர்கள்அது உங்கள் போனிற்கே ஆபத்தாகஅமையலாம்போலி பேட்டரிகள் எளிதில் சூடாகி விடும்.

மொபைல் சார்ஜர் விஷயத்திலும் இது பொருந்தும்உங்கள் மொபைல்போனோடு வந்த சார்ஜரை தவிர்த்துவேறு ஏதேனும் தரமில்லாதசார்ஜர்களை பயன்படுத்துவதும் போனின் வெப்பத்திற்கு காரணம். USB கேபிளுக்கும் இது பொருந்தும்.

சுற்றுப்புற வெப்பநிலை:

உங்கள் மொபைல் .சி அறையில் இருக்கும் போது இருந்தவெப்பநிலைக்கும்வெளியே இருக்கும் போது இருக்கும்வெப்பநிலைக்கும் இடையே நிறைய வித்தியாசம் இருக்கும்நமதுசுற்றுப்புற வெப்பநிலையும் போனின் வெப்பத்திற்கு காரணம்எனவேவெப்பம் அதிகமாக இருக்கும் இடங்கள்இயந்திரங்கள் ஆகியவற்றின்அருகே உங்கள் மொபைல் போன் பயன்பாட்டை தவிர்க்கலாம்நேரடியாக சூரிய ஒளி படும் இடங்களில் உங்கள் மொபைலை வைக்கவேண்டாம்.

வேண்டாத ஆப்ஸ்:

சில ஆப்ஸ்கள் உங்கள் போனின் ஜி.பி.எஸ்மெமரிவைஃபைடிஸ்ப்ளேஸ்பீக்கர் உள்ளிட்ட பல விஷயங்களை ஆக்டிவ்வாக வைத்திருக்கும்இதனால் அதிகம் மின்சக்தி வீணாவதோடுபோனின் வெப்பமும்அதிகமாகும்எனவே இதுபோன்ற ஆப்ஸ்களை தவிர்த்து விடுங்கள்ஆன்லைன் கேம்கள் பெரும்பாலும் இந்த ரகங்கள்தான்எனவே ரேம்குறைந்த போன்களில் கேம்களுக்கு தடை போட்டு விடுங்கள்.

வைஃபைஇணையம்ப்ளூடூத்:

வைஃபைப்ளூடூத்

அதிக நேரம் வைஃபை மூலம் அல்லது மொபைல் டேட்டா மூலம்டவுன்லோட் செய்வது போனை சூடாக்கும்எனவே சிறியஇடைவெளிகளுக்கு பிறகு டவுன்லோட் செய்யலாம்ப்ளூடூத் நீண்டநேரம் ஆன்-ல் இருப்பதையும் தவிருங்கள்!


இது மட்டுமின்றி போன் சார்ஜ் ஆகிக்கொண்டிருக்கும் போதேபயன்படுத்துவதுமொபைல் டிஸ்ப்ளே ஒளி அளவை அதிகம் வைப்பதுபேக்கிரவுண்ட் ஆப்ஸ் பயன்பாடுகள் போன்ற விஷயங்கள் அனைத்தும்மின்சக்தியை வீணாக்குபவைஇவற்றை முடிந்தளவு குறைத்தாலேஅடிக்கடி போனை சார்ஜ் செய்ய அவசியமிருக்காதுஎனவே உங்கள்பேட்டரியின் ஆயுள் பாதிக்கப்படாமல் இருக்கும்.