Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 1 செப்டம்பர், 2018

இதே நாளில் அன்று

வரலாற்றில் இன்று.. உலக கடித தினம்..! ஆகஸ்ட் 01

வாழ்வை வளமாக்கும் சிந்தனைகள் !

'வெற்றிக்கும் தோல்விக்கும் வித்தியாசம் அதிகம் இல்லை. கடமையை செய்தால் வெற்றி! கடமைக்கு செய்தால் தோல்வி!." உலக கடித தினம்



📝 ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 1ஆம் தேதி கடிதம் எழுதும் தினமாக உலக அளவில் கொண்டாடப்படுகிறது. உலக கடித தினம் என்று அழைக்கப்படும் இந்த நாள் கையால் கடிதம் எழுதும் முறையை பாராட்டும் விதமாக கொண்டாடப்படுகிறது.

📝 உலக கடித தினம் என்பது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ரிச்சர்ட் சிம்ப்கின் என்பவரால் 2014-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இன்றைய கணிப்பொறி உலகில் கடிதம் எழுதுவது என்பது ஒரு தனிப்பட்ட அனுபவமாகும். எனவே அதனை கொண்டாடும் விதமாக இத்தினத்தை அறிமுகப்படுத்தினார்.
செம்பை வைத்தியநாத பாகவதர்


🎵 கர்நாடக இசை உலகில் கொடிகட்டிப் பறந்த செம்பை வைத்தியநாத பாகவதர் 1896ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி கேரள மாநிலம் பாலக்காடு அருகேயுள்ள செம்பை என்ற கிராமத்தில் பிறந்தார்.

🎵 தஞ்சை இசை விழா, கரூர் சங்கீத திருவிழா என தமிழகத்தின் பல இடங்களிலும் கச்சேரி நடத்தும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. பல சபாக்கள், இசை விழாக்களில் பாடினார். இவருக்கு 'காயன காந்தர்வ", 'சங்கீத கலாநிதி", 'பத்ம பூஷண்" ஆகிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

🎵 சங்கீத உலகில் அழியாப் புகழ்பெற்ற செம்பை வைத்தியநாத பாகவதர் தனது 78-வது வயதில் (1974) மறைந்தார். இவரது நினைவைப் போற்றும் விதமாக 1996-ல் அஞ்சல்தலை வெளியிடப்பட்டது. ஆண்டுதோறும் குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் இசை விழா நடத்தப்பட்டு, அதில் தேர்ந்தெடுக்கப்படும் கலைஞருக்கு 'செம்பை விருது" வழங்கப்படுகிறது.
புலித்தேவர்


🐅 இந்திய விடுதலைப் போராட்டத்தை தமிழகத்தில் தொடங்குவதற்கு முன்னோடியாக திகழ்ந்த புலித்தேவர் 1715ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி பிறந்தார். இவருடைய இயற்பெயர் 'காத்தப்பப் பூலித்தேவர்" என்பதாகும். 'பூலித்தேவர்" என்னும் பெயர் 'புலித்தேவர்" என்று அழைக்கப்பட்டது.

🐅 இந்திய விடுதலை வரலாற்றில் 'வெள்ளையனே வெளியேறு" என்று முதல் முறையாக 1751ஆம் ஆண்டில் வீர முழக்கமிட்டவர். இதனால் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படும் சிப்பாய்க்கலகத்திற்கு (1857) முன்னோடியாகக் கருதப்படுகிறார்.

🐅 தமிழ்நாடு அரசு, திருநெல்வேலி மாவட்டம் சிவகிரி வட்டம் பகுதியிலுள்ள நெல்கட்டும்செவல் எனும் ஊரில் புலித்தேவர் நினைவைப் போற்றும் வகையில் புலித்தேவர் நினைவு மாளிகை, திருமண மண்டபம் ஆகியவைகளை அமைத்துள்ளது.
முக்கிய நிகழ்வுகள்

✍ 1877ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி தமிழரசி குறவஞ்சி, கருணீக புராணம் போன்ற நூல்களின் ஆசிரியரான தமிழறிஞர் அ.வரதநஞ்சைய பிள்ளை பிறந்தார்.