புதன், 1 ஏப்ரல், 2020

6ம் வீட்டில் சூரியன் இருந்தால் உண்டாகும் பலன்கள்...!!

🌞 ஜோதிடத்தில் ஒரு மனிதனுக்கு அடிப்படை தேவையாகிய நல்ல வலுவான உடலமைப்பு ஏற்படுவதற்கு காரணமாகிறார் சூரிய பகவான் என்று கூறப்படுகிறது. ஜோதிடத்தில் அகங்காரத்தையும், மமகாரத்தையும் குறிக்கும் கிரகம் சூரியன் என பாரம்பரிய ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன.

🌞 சூரிய பகவான், அக்கினியை அதிதேவதையாகக் கொண்டவர். கதிரவன், ரவி, பகலவன், ஞாயிறு, அருக்கன், அருணன், ஆதவன், புண்டரீகன், ஆதித்யன், செங்கதிர், தினகரன், பரிதி, பாஸ்கரன், பிரபாகரன், திவாகரன் என பல பெயர்கள் இவருக்கு உண்டு.

🌞 6-ம் வீட்டை நோய் ஸ்தானம் என்று கூறுவார்கள். சூரியனுடன் தீய கிரகங்கள் சேர்ந்து கூட்டாக இருந்தால் நீண்ட, தீர்க்க முடியாத வியாதிகள் உண்டாகும். சூரியனுடன் நல்ல கிரகங்கள் சேர்ந்திருந்தால் அல்லது பார்த்தால், ஜாதகர் நிர்வாகத் திறமை உள்ளவராக இருப்பார்.

🌞 லக்னத்திற்கு 6-ம் இடத்தில் பரிதி எனப்படும் சூரியன் நின்றால் அந்த ஜாதகக்காரர்கள் தெய்வத்தால் காக்கப்படுவார்கள்.

6ல் சூரியன் இருந்தால் என்ன பலன்?

👉 செல்வத்தை குவிய வைத்திருப்பவர்கள்.

👉 உயர் பதவி வகிக்கக்கூடியவர்கள்.

👉 பகைவர்களை வெல்லக்கூடியவர்கள்.

👉 நல்ல ஜீரணசக்தி உடையவர்கள்.

👉 நற்பணிகளை மேற்கொள்பவராக இருப்பார்கள்.

👉 சண்டைகளில் விருப்பம் உடையவர்கள்.

👉 ஜாதகரின் குடும்பம் பெரியதாக இருக்கும்.

👉 சம்பிரதாயங்களுக்கு கட்டுப்படாதவர்கள்.

👉 அரசாங்கத்தின் மூலம் பொருள் விரயம் ஏற்படும்.

👉 சிற்றின்ப வேட்கையை அதிகம் கொண்டவர்கள்.

👉 மனைவியின் உடல்நலனில் அவ்வப்போது பிரச்சனைகள் உண்டாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்