குறிப்பு: படங்கள் அனைத்தும் மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே
இது
போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள்
போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம்
சேனல்-லில் இணைந்து கொள்ளவும்
விவோ நிறுவனம் தொடர்ந்து அதிநவீன ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. மேலும் சியோமி நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்த மி 11 மற்றும் மி 11 ப்ரோ ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக விவோ நிறுவனம் தனது விவோ எக்ஸ்60 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
TheMobileIndian வலைத்தளம் தகவலின்படி வரும் ஜனவரி 20-ம் தேதி விவோ எக்ஸ்60 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் சற்று உயர்வான விலையில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் 4200 எம்ஏஎச் பேட்டரி இடம்பெறும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 55 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். மேலும் இந்த சாதனத்தில் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் உட்பட பல்வேறு சிறப்பான வசதிகளும் உள்ளன.
விவோ எக்ஸ்60 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.53-இன்ச் E3 AMOLED டிஸ்பிளே வடிவமைப்பை அடிப்படையாக கொண்டு வெளிவரும். மேலும் 2376 x 1080 pixels தீர்மானம், எச்டிஆர் 10+, 120Hz refresh rate உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.
விவோ எக்ஸ்60 ப்ரோ பிளஸ் சாதனத்தில் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 12ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இருப்பதாக அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்படும்.
இந்த சாதனத்தின் கேமரா பற்றிய சரியான தகவல் இன்னும் வெளிவரவில்லை, இருந்தபோதிலும் இதன் பின்புறம் மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட அம்சங்களுடன் இந்த சாதனம் வெளிவரும்.
விவோ எக்ஸ்60 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனில் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
Get instant updates for new posts, panchangam & rasi palan!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக