Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 5 ஜனவரி, 2021

இனி வாட்ஸ்அப் போதும்.. வங்கி சேவையை பெற.. வாடிக்கையாளர்கள் செம ஹாப்பி..!

வாடிக்கையாளர் அல்லாதவருக்கும் வாட்ஸ்அப் சேவை

டிஜிட்டல் வளர்ச்சியானது நாளுக்கு நாள் வளர்ந்து வரும் நிலையில், இது வங்கித் துறையிலும் பெரும் வளர்ச்சி கண்டு வருகின்றது. குறிப்பாக சில வங்கிகள் வாட்ஸ் அப் மூலம் வங்கி சேவையை வழங்கி வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக நாம் இன்று பார்க்கவிருப்பது பேங்க் ஆப் பரோடா வாட்ஸ் அப் மூலம் வங்கி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளதை பற்றிதான்.

இந்த வாட்ஸ் அப் சேவையின் மூலம் அதன் வாடிக்கையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அல்லாதவர்களும் சேவைகளை பெற முடியும்

வாடிக்கையாளர் அல்லாதவருக்கும் வாட்ஸ்அப் சேவை

அதெல்லாம் சரி வாடிக்கையாளர்கள் சேவையை பெற முடியும் என்றால் அது வழக்கமான ஒரு சேவை தான். ஆனால் வாடிக்கையாளர் அல்லாதவரும் சேவையை பெற முடியும் என்பது புதிய விஷயமாக உள்ளதே எப்படி? சரி வாருங்கள் பார்க்கலாம். எப்படி இந்த சேவையை பெற்றுக் கொள்ள முடியும் என்று.

வாட்ஸ் அப் எண்?

பேங்க் ஆஃப் பரோடாவின் வாட்ஸ் அப் மூலம் வங்கி சேவையை பெற, அதன் வாடிக்கையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர் அல்லாதவர்களும், உங்கள் தொலைபேசியில் பாங்க் ஆஃப் பரோடாவின் வாட்ஸ்அப் நம்பரை சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வங்கியின் வாட்ஸ்அப் எண் 84 33 888 777 ஆகும்.

என்னென்ன சேவைகள் பெற முடியும்?

இந்த வாட்ஸ்அப் வங்கி சேவையின் மூலம் உங்களது வங்கி இருப்பு விசாரணை, மினி ஸ்டேட்மெண்ட், காசோலை நிலை விசாரணை, செக் புக் கோரிக்கை, டெபிட் கார்டை பிளாக் செய்வது, வங்கியின் தயாரிப்பு மற்றும் சேவைகள் குறித்த தகவல்கள் டிஜிட்டல் தயாரிப்புகளுக்கு பதிவு செய்தல் அல்லது விண்ணப்பித்தல் போன்றவற்றை இதன் மூலம் பயன்பெற முடியும்.

வாடிக்கையாளர்களுக்கு பயன்

இதுகுறித்து இவ்வங்கியின் இயக்குனரான குரானா, சமீபத்திய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி எளிய மற்றும் புதுமையான வங்கி தீர்வுகளை மேம்படுத்துவதில் நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். சமூக ஊடகங்களின் முக்கியத்துவம் அதிகரித்து வருவதால், வாட்ஸ்அப் வங்கி, எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் வங்கி தேவைகளை பூர்த்தி செய்ய ஏராளமான வசதிகளை வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த வங்கி சேவையானது எளிதான அணுகல் மற்றும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வசதிகளுக்கும் பயன்படும்.

ஆன்ட்ராய்டு மற்றும் ஐபோனில் சேவை

ஆன்ட்ராய்டு மற்றும் ஐபோன் இரண்டிற்கும் இவ்வங்கியின் சேவை கிடைக்கிறது. வங்கி தொடர்பான எந்த ஒரு கேள்விகளுக்கும், பரோடா வாடிக்கையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அல்லாதவர்களும் அணுகலாம். அதெல்லாம் சரி எப்படி இந்த சேவையை பெற வேண்டும். வாருங்கள் பார்க்கலாம்.

எப்படி பெறுவது

முதலில் உங்களது மொபைலில் பரோடாவின் வாட்ஸ்அப் எண் 84 33 888 777-ஐ சேமிக்க வேண்டும். பின்னர் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி இந்த எண்ணில் HI என்ற செய்தியை அனுப்ப வேண்டும். இந்த சேவை மூலம் பல வங்கி சேவைகளை நீங்கள் பெற முடியும். இந்த சேவையை நீங்கள் 24 மணி நேரமும் பெற முடியும். இதே மற்ற வங்கி வாடிக்கையாளர்கள் கூட, வங்கி சேவைகள், ஏடிஎம் மற்றும் வங்கி கிளைகள் உள்ள இடங்களை பற்றி தெரிந்து கொள்ள முடியும்.

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!