--------------------------------------------------------
கலக்கலான காமெடிகள்...!!
---------------------------------------------------
மனைவி வாட்ஸ்அப் மெசேஜில் - ஆபீஸ்ல இருந்து வர்றப்ப காய்கறி வாங்க மறந்துடாதீங்க. சவிதா உங்களுக்கு ஹாய் சொல்லச் சொன்னா.
கணவன் : எந்த சவிதா?
மனைவி : ஒரு சவிதாவும் இல்லை. மெசேஜ் படிக்கிறீங்களா இல்லையான்னு செக் பண்ணி பாத்தேன்.
கணவன் : நான் சவிதா கூடத்தான் இருக்கேன். நீ சொல்லறது எந்த சவிதாவை?
மனைவி : எங்க இருக்கீங்க?
கணவன் : காய்கறி மார்க்கெட்ல.
மனைவி : நான் வர்றேன் அங்கயே இருங்க.
மனைவி : (பத்து நிமிஷம் கழிச்சு) நான் வந்துட்டேன் நீங்க எங்க இருக்கீங்க?
கணவன் : நான் ஆபீஸ்ல இருக்கேன். வந்துட்டேல்ல வேணுங்கற காய்கறியை நீயே வாங்கிக்கோ.
மனைவி : 😳😳
---------------------------------------------------
தாத்தா : நீ என் தங்கக் குட்டியாம்... தாத்தா சொல்றதைக் கேட்பியாம்... நான் உன் புத்தகப் பையைத் தூக்கிட்டு வருவேனாம்... பாப்பா நடந்து வருவியாம்.
பாப்பா : வேண்டாம் தாத்தா... என் பையைத் தூக்கி நீ கஷ்டப்பட வேணாம். நானே என் பையைத் தூக்கிக்கிறேன். நீ என்னைத் தூக்கிக்கிட்டு வந்தாப் போதும்...
தாத்தா : 😄😄
---------------------------------------------------
அன்பு...!!
---------------------------------------------------
படிப்பு ஒருவனை அறிவாளியாக மாற்றும். ஆனால் அன்பு மட்டுமே ஒருவனை மனிதனாக மாற்றும்.
மருந்தே இல்லாமல் நோயை குணப்படுத்தும் ஆற்றல் அன்பு ஒன்றுக்கு மட்டுமே உண்டு.
அன்பின் எதிர்பார்ப்புகள் பொருளோ, பணமோ இல்லை. பாசத்துடன் ஒரு பார்வை... அக்கறை நிறைந்த சில வார்த்தைகள் அவ்வளவு தான்.
---------------------------------------------------
விடுகதைகள்...!!
---------------------------------------------------
1. நான்கு கால்கள் உள்ளவன், இரண்டு கைகள் உள்ளவன், உட்கார்ந்து கொண்டிருப்பான், உட்கார இடம் கொடுப்பான். அவன் யார்?
2. எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல். அது என்ன?
3. கூட்டுக்குள் குடியிருக்கும் குருவி அல்ல, கொலை செய்ய பாயும் வீரனுமல்ல. அது என்ன?
4. முதுகிலே சுமை தூக்கி முனகாமல் அசைந்து வரும். அது என்ன?
5. மழை காலத்தில் குடை பிடிப்பான், மனிதனல்ல. அவன் யார்?
விடை :
1. நாற்காலி
2. விக்கல்
3. அம்பு
4. நத்தை
5. காளான்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக