Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

புதன், 6 ஜனவரி, 2021

Indian Railways: Train டிக்கெட் விலை உயர்கிறதா? எவ்வளவு?

 Indian Railways: Train டிக்கெட் விலை நாளை முதல் உயர்கிறதா? எவ்வளவு?

ஜனவரி 6 முதல் ரயில் பயணம் செய்வதற்கு சற்று கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். கோவிட் -19 தொற்றுநோயால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில்களை விரைவில் மீண்டும் தொடங்குகிறது இந்திய ரயில்வே. இருப்பினும், ஜனவரி 6 முதல், பல ரயில்களின் கட்டணம் அதிகரிக்கப்படுகிறது. ரயில்களில் பயணிகளின் நெரிசலைக் குறைக்க வேண்டும் என்பதால் இருக்கைகளை முன்பதிவு செய்வது கட்டாயமாகும்.

ஆன்லைனிலோ (Online) அல்லது டிக்கெட் கவுண்டருக்கோ சென்று பயணச்சீட்டை வாங்கலாம். இந்திய ரயில்வேயின் புதிய வழிகாட்டுதல்களின்படி, ஒரு பயணி எவ்வளவு தொலைவு பயணம் செய்தாலும், முன்பதிவு செய்வது கட்டாயம் ஆகும். டிக்கெட் முன்பதிவு செய்யாமல் ரயில்நிலையத்திற்குள் நுழையவே முடியாது.

அனைத்து டிக்கெட்டுகளின் (Ticket) விலைகளிலும் முன்பதிவு கட்டணம் 15 ரூபாய் அதிகமாகிறது. ஜம்மு-காஷ்மீர், உதம்பூர் உட்பட பல இடங்களுக்கான ரயில் சேவைகளையும் இந்தியன் ரயில்வே தொடங்கியுள்ளது. பிப்ரவரி 1 முதல் இந்த ரயில்கள் இயக்கப்படும். பாட்னா, துர்க், வாரணாசி, அஜ்மீர் (Patna, Durg, Varanasi, Ajmer) மற்றும் புதுடெல்லி (New Delhi) செல்லும் பயணிகளுக்கு இந்த ரயில் சேவைகள் அதிக நன்மை அளிப்பதாக இருக்கும்.  

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!