Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 11 ஜனவரி, 2022

ரயில் பயணிகளின் கவனத்திற்கு.! வெயிட்டிங் லிஸ்ட் பயணிகளுக்கு தடை.. மீறினால் ரூ.500 அபராதமா?

 காத்திருப்பு டிக்கெட்டில் பயணிக்கும் பயணிகளின் கவனத்திற்கு

நீங்கள் ரயிலில் பயணம் செய்யப் போகிறீர்கள் என்றால் இந்த செய்தி உங்களுக்கு மிகவும் முக்கியமானது. ரயில் பயணத்தின் போது உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டை வைத்திருப்பது இப்போது உங்களுக்கு எவ்வளவு மிகவும் முக்கியமானது என்பதை நாங்கள் உங்களுக்குச் சொல்கிறோம். ஆம், நீங்கள் படித்தது சரிதான், இனி உங்களுடைய உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்கள் மட்டுமே உங்களை வீண் அபதாரத்தில் இருந்து காப்பாற்றப் போகிறது என்பதைக் கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். காத்திருப்பு டிக்கெட்டுகள் தொடர்பான விதிகள் மாற்றப்பட்டுள்ளது.

காத்திருப்பு டிக்கெட்டில் பயணிக்கும் பயணிகளின் கவனத்திற்கு

இந்திய ரயில்வே காத்திருப்பு டிக்கெட்டுகள் தொடர்பான விதிகளை தற்போது மாற்றியமைத்துள்ளது என்பதை நாங்கள் உங்களுக்குச் சொல்கிறோம். வெயிட்டிங் டிக்கெட் என்ற காத்திருப்பு டிக்கெட்கள் மீது இந்த புதிய விதிகள் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது. புதிய விதிகளின் படி, காத்திருப்பு டிக்கெட்டுடன் பயணம் செய்யும் நபர் பிடிபட்டால், இனி அவர் இந்திய ரயில்வே நிர்வாகத்திற்கு அபராதம் செலுத்த வேண்டும். இந்திய நாட்டில் பண்டிகைக் காலம் தொடங்கியுள்ள, நிலையில் பயணிகள் இந்த விதிகளைத் தெரிந்துகொள்வது பயனளிக்கும்.

பண்டிகை காலத்தில் இப்படி ஒரு புதிய அதிரடி விதியா?

பண்டிகை காலம் துவங்கும் சூழ்நிலையில், ரயில்களில் பயணிக்க விரும்பும் பயனர்கள் முன்கூட்டியே முன் பதிவு செய்து, அவர்களுக்கான இருக்கைகளை உறுதிப்படுத்தியிருப்பார்கள். இன்னும் சிலர் காத்திருப்பு பட்டியலில் இருந்தாலும் டிக்கெட் கிடைக்க வாய்ப்புள்ளது என்ற நம்பிக்கையில் அவர்களின் பயணத்திற்கான டிக்கெட்டை முன்பதிவு செய்து காத்திருப்பார்கள். இவர்களுக்கான இருக்கைகள் RAC பட்டியலில் இருக்கும் போது இவர்கள் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், வெயிட்டிங் லிஸ்ட் பட்டியலில் உள்ள பயணிகள் இனி கவனமாக இருக்க வேண்டும்.

RAC மற்றும் WL என்றால் என்ன? இவற்றிற்கு இடையே என்ன வேறுபாடு உள்ளது?

இந்திய ரயில்வே IRCTC இன் இணையதள தகவலின் படி, ஒரு பயணி தனது பயணத்திற்காக முன்பதிவு செய்யும் போது, இருக்கையோ அல்லது பெர்த்தோ இல்லாத சூழ்நிலையில் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்படுகிறார்கள். இவர்களின் டிக்கெட் எண் WL என்ற வார்த்தையைப் பின்தொடர்ந்து வரும். WL என்பது அந்த பயணி காத்திருப்பு பட்டியலில் உள்ளார் என்பதைக் காட்டுகிறது. அதேபோல், பயணிகளின் நிலை RAC எனக் குறிக்கப்பட்டால், இரண்டு RAC டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு ஒரு பெர்த் இரண்டு இருக்கைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம்.இதன்படி ஒரே பெர்த்தில் 2 பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

புதிய ஆண்டில் புதிய விதிமுறைகளை அறிமுகம் செய்யும் IRCTC

பண்டிகை காலம் என்பதனால், பலர் ரயில்களில் பயணிக்கவிருப்பதால் பெரும் கூட்ட நெரிசல் இப்போதே காணப்படுகிறது. பயணிகள் அவர்களின் பயணத்தை எளிதாக்கிக்கொள்ளக் காத்திருப்பு பட்டியலில் இருந்தாலும் கூட அந்த டிக்கெட் வைத்து நின்று கொண்டே பயணிக்கிறார்கள். இந்த மாதிரியான சிக்கல்களைத் தவிர்க்க இந்திய ரயில்வே இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. இதேபோல், இந்திய ரயில்வேயால் பல புதிய விதிகளும், புதிய ரயில்களும் இந்த ஆண்டு தொடங்கப்பட்டுள்ளன என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

காத்திருப்பு டிக்கெட்டுகளில் பயணம் செய்யத் தடையா?

உங்கள் தகவலுக்கு, புதிய விதிகளின் கீழ், முக்கியமாகக் காத்திருப்பு டிக்கெட்டுகளில் பயணம் செய்வதற்கு முழுமையான தடை உள்ளது என்பதை உங்களுக்கு ரயில்வே நிர்வாகம் இப்போது வெளிப்படையாகத் தெரிவித்துள்ளது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். டிக்கெட் சோதனைக்காக ரயில்வே சார்பில் சிறப்புப் பிரசாரம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் காத்திருப்பு டிக்கெட்டுகளுடன் தினமும் நான்காயிரம் முதல் 6 ஆயிரம் பயணிகள் ரயில்வே டிக்கெட் பரிசோதகர் மூலம் பிடிபடுகின்றனர்.

ரயில் நிலையங்களில் தீவிரமான சோதனை.. சிக்கினால் ரூ.500 செலுத்த வேண்டுமா?

போபால் ரயில்வே கோட்டத்தின் பல்வேறு ரயில் நிலையங்களிலும் இப்போது தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த புதிய விதிமுறையின் படி, இப்போது காத்திருப்பு டிக்கெட்டுடன் பயணம் செய்யும் பயணிகள் பிடிபட்டால், அவர் ரூ. 500 செலான் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விதி இப்போது அனைத்து காத்திருப்பு பட்டியலில் பயணிக்கும் பயணிகளுக்குப் பொருந்தும் என்பது கவனிக்கத்தக்கது. இதேபோல், இந்திய ரயிலில் இனி பயணிக்கும் பயணிகளுக்குப் போர்வை, படுக்கை விரிப்புகள் மற்றும் தலையணை பயன்படுத்தும் வசதிகள் மீண்டும் இப்போது கிடைக்கிறது.

நீண்ட காலத்திற்குப் பின் புதிய விருப்பத்துடன் களமிறங்கிய 'அந்த' சேவை

நீண்ட தூர ரயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கு ஒரு நற்செய்தி. இனி மீண்டும், ரயில்களில் போர்வை, விரிப்புகள், தலையணை உள்ளிட்ட பல வசதிகளை மீண்டும் இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. ஆனால், இம்முறை இந்த சேவை பயணிகளுக்கு இலவசமாக வழங்கப்படாது என்பது கவனிக்கத்தக்கது. இவற்றுக்குப் பயணிகள் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், இந்த முறை நீங்கள் செலுத்தும் கட்டணத்திற்கான பொருட்களை நீங்கள் வீட்டிற்கே எடுத்துச் செல்லலாம் என்பது சிறப்பானது. இந்த புதிய சேவை எப்படிச் செயல்படும் என்று பார்க்கலாம்.

போர்வை, விரிப்பு மற்றும் தலையணை கொண்ட கிட் இன் விலை என்ன தெரியுமா?

போர்வை, தலையணை கொண்ட அனைத்து பொருட்களையும் சேர்த்து இந்திய ரயில்வே தனது பயணிகளுக்கு முழுமையான கிட்களை வழங்கவுள்ளது. இதன் விலை ரூ. 300 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முழுமையான கிட் வாங்குவது கட்டாயமில்லை, தேவைப்படும் பயனர்கள் மட்டும் இதை வாங்கி பயன்படுத்திக்கொள்ளலாம். அல்லது இந்த சேவையை விரும்பும் பயணிகள் மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். பயணிகளும் தங்கள் தேவைக்கு ஏற்ப பொருட்களை வாங்க முடியும் மற்றும் இந்த சேவையின் மற்றொரு சிறப்பு அம்சம் என்னவென்றால், இவற்றை நீங்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம்.

இந்த ஸ்லீப்பிங் கிட்களை எப்படி டிக்கெட் உடன் வாங்குவது?

கடந்த ஆண்டு, கொரோனா பாதிப்பைக் கருத்தில் கொண்டு, ரயில்களில் போர்வைகள், விரிப்புகள், தலையணைகள் வழங்கும் வசதி நிறுத்தப்பட்டது. இந்த வசதியை ரயில்வே துறையிடம் பயணிகள் நீண்ட நாட்களாகக் கோரி வந்தனர். இப்போது மக்களுக்கு முழுமையான கிட் வழங்கும் வசதியை ரயில்வே வழங்குகிறது. முழு ஸ்லீப்பிங் கிட்டின் விலை ரூ. 300 ஆக இருக்கிறது. முழு கிட்டாக இல்லாமல் போர்வைக்கு 180 ரூபாயும், தலையணைக்கு 70 ரூபாயும், தாளுக்கு 40 ரூபாயும் பயணிகள் செலுத்த வேண்டும் என்பது கவனிக்கத்தக்கது. முன்பதிவு செய்யும் போதே இவற்றை உங்கள் டிக்கெட்டுடன் நீங்கள் இணைத்துக் கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக