Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 12 ஜனவரி, 2022

விவாகரத்திற்கான முக்கிய காரணம் என்ன? லொள்ளு பார்ட்டி - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

-------------------------------------------------------------------
சிரிக்கலாம் வாங்க...!!
-------------------------------------------------------------------
பாபு : தேவைப்பட்டா தான் நம்ம டாக்டர் ஆபரேஷன் செய்வாரு... 
கோபு : அப்புறம் ஏன் இப்போ உனக்கு ஆபரேஷன் பண்ணினாரு?
பாபு : அவருக்கு பணம் தேவைப்பட்டால் தான் பண்ணுவாருன்னு சொல்ல வந்தேன்...
கோபு : 😆😆
-------------------------------------------------------------------
விமல் : என்னோட மாப்பிள்ளைக்கு ரொம்ப குசும்பு...
கமல் : ஏன்..? என்னாச்சு..?
விமல் : அறுபதாம் கல்யாணத்துலயும் அதே பொண்ணுக்கு தான் தாலி கட்டணுமான்னு கேட்டாரு...!
கமல் : 😨😨
-------------------------------------------------------------------
மாம்பழம்...!!
-------------------------------------------------------------------
🍋 150 கிராம் மாம்பழத்தில் 86 கலோரிகள் அடங்கியுள்ளன. எனவே, உடல் எடையை அதிகரிக்க மாம்பழம் சாப்பிட்டால் சுலபமாக எடையை அதிகரிக்கலாம்.

🍋 கர்ப்பமான பெண்களுக்கு இரும்புச் சத்து அதிகளவில் தேவைப்படுவதால், அவர்கள் மாம்பழம் உண்ணுவது மிகவும் அவசியம். 

🍋 மாம்பழத்தில் உள்ள பெக்டின், புரோஸ்டேட் புற்று நோய் வருவதையும் தடுக்கும்.

🍋 மூளையின் செயல்களை பாதுகாத்து மேம்படுத்த மிகவும் முக்கியமான வைட்டமின் பி6, இது மாம்பழங்களில் ஏராளமாக இருக்கிறது.
-------------------------------------------------------------------
லொள்ளு பார்ட்டி...!!
-------------------------------------------------------------------
மேனேஜர் : சுப நிகழ்ச்சியில் ஏன் வாழை மரம் கட்டப்படுகிறது?

சந்தானம் : கீழே விழாமல் இருப்பதற்காக...

மேனேஜர் : விவாகரத்திற்கான முக்கிய காரணம் என்ன? 

சந்தானம் : கல்யாணம் தான்...

மேனேஜர் : மகாத்மா காந்தி எப்போது பிறந்தார்?

சந்தானம் : அவரது பிறந்த நாளன்று...

மேனேஜர் : ஷாஜகான்.. யாருக்காக தாஜ்மகாலை கட்டினார்?

சந்தானம் : சுற்றுலா பயணிகளுக்காக...

மேனேஜர் : திப்பு சுல்தான் எந்த போரில் இறந்தார்?

சந்தானம் : அவரது கடைசி போரில் இறந்தார்...

மேனேஜர் : இந்திய சுதந்திரத்திற்கான பிரமாணம் எங்கே கையெழுத்திடப்பட்டது? 

சந்தானம் : பேப்பரின் அடிப்பகுதியில் கையெழுத்திடப்பட்டது...
-------------------------------------------------------------------
இன்றைய கடி...!!
-------------------------------------------------------------------
தக்காளி அழுகாம இருக்கனும்னா என்ன செய்யணும்னு தெரியுமா...?
.
.
.
.
.
கிச்சு கிச்சு மூட்டி சிரிக்க வைக்கணும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக