Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 25 ஜனவரி, 2022

டாடா நெக்ஸான் இவி-க்கே சவாலா!! எலக்ட்ரிக் காரின் வருகையை மீண்டும் உறுதிப்படுத்திய ஓலா எலக்ட்ரிக்!

 டாடா நெக்ஸான் இவி-க்கே சவாலா!! எலக்ட்ரிக் காரின் வருகையை மீண்டும் உறுதிப்படுத்திய ஓலா எலக்ட்ரிக்!

ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் சிஇஓ பாவிஷ் அகர்வால் தனது நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் கார் குறித்த தகவலினை வெளியிட்டுள்ளார். அதனை பற்றி விரிவாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

டுவிட்டரில் பெரும்பாலான நேரங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் ஓலா எலக்ட்ரிக் நிறுவன சிஇஓ பாவிஷ் அகர்வால் என்பது நம் அனைவருக்குமே நன்றாக தெரியும். அவ்வப்போது ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் மற்றும் அதன் எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தொடர்பான பதிவுகளை பதிவிடும் இவர் நெட்டிசன்களின் பதிவுகளுக்கும் தனது கருத்தினை தெரிவிப்பார்.

இந்த வகையில் சமீபத்தில் பாவிஷ் அகர்வாலை குறிப்பிட்டு, ஆகாஷ் திவாரி என்பவர் தனது கருப்பு இவி குடும்ப படத்தை பதிவிட்டுள்ளார். இதற்கு பதிலளித்த பாவிஷ் அகர்வால், உங்களுடைய அடுத்த கார் ஓலா எலக்ட்ரிக் காராக இருக்கலாம் என பதிவிட்டுள்ளார். ஆகாஷ் திவாரியிடன் கருப்பு நிறத்தில் ஒரு ஓலா எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரும், ஒரு டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் கார் உள்ளது.

டாடா நெக்ஸான் இவி-க்கே சவாலா!! எலக்ட்ரிக் காரின் வருகையை மீண்டும் உறுதிப்படுத்திய ஓலா எலக்ட்ரிக்!

இதனை தான் அவர் தனது கருப்பு இவி குடும்பம் என பதிவிட்டுள்ளார். இந்த பதிவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் கார்கள் பிரிவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் ஹேண்டில் பக்கத்தையும் ஆகாஷ் திவாரி குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நமது தமிழகத்தில் தொழிற்சாலையை கொண்டுள்ள ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் தற்போதைய ஒரே ஒரு எலக்ட்ரிக் வாகனமாக எஸ்1 விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


பாவிஷ் அகர்வாலின் தற்போதைய ட்விட்டின் மூலம் எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உடன் விரைவில் எலக்ட்ரிக் காரும் இணையவுள்ளது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 2021 அக்டோபர் மாதத்தில் இதேபோன்று நெட்டிசன் ஒருவரின் மூலமாக ஓலா எலக்ட்ரிக் காரின் வருகை வருகிற 2023ஆம் ஆண்டில் இருக்கும் என்கிற தகவல் நமக்கு பாவிஷ் அகர்வாலின் வாயிலாக கிடைத்தது.

அப்போது, டுவிட்டரில் பாவிஷ் அகர்வாலின் பதிவு ஒன்றிற்கு கீழே நெட்டிசன் ஒருவர், "பெட்ரோல், டீசல் அல்லது எலக்ட்ரிக் காரில் எதை வைத்திருப்பார் இவர் (பாவிஷ் அகர்வால்)?" என கேள்வியெழுப்பி இருந்தார். இதற்கு உடனடியாக தனது பதிலை கொடுத்த பாவிஷ் அகர்வால், "தன்னிடம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வரையில் எந்த காரும் இல்லை. இப்போது ஹைப்ரீட்.

2023இல் எனது அடுத்த கார் எலக்ட்ரிக் ஆக இருக்கலாம். ஓலாவின் எலக்ட்ரிக் கார்." என தெரிவித்தார். ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்திற்கு இந்தியாவிலேயே தற்போதைக்கு தமிழகத்தில், ஓசூரில் மட்டுமே ஒரு பிரம்மாண்ட தொழிற்சாலை உள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டில் திறக்கப்பட்ட இந்த 'எதிர்கால தொழிற்சாலை'இல் இப்போதைக்கு எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மட்டுமே தயாராகிப்பட்டு வருகின்றன.

உலகின் மிக பெரிய எலக்ட்ரிக் இருசக்கர வாகன தொழிற்சாலையாக விளங்கும் இதில் பெரும்பகுதியான தொழிலாளர்கள் பெண்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஓலா எஸ்1 இ-ஸ்கூட்டருக்கு முதன்முதலாக முன்பதிவுகள் கடந்த 2021 ஜூலை மாதத்தில் துவங்கப்பட்டன. ரூ.499 என்கிற மிக குறைந்த முன்தொகை ஓலாவின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மேலும் விளம்பரமாக அமைந்தது.

ஓலா எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு முதல் 24 மணிநேரத்திலேயே சுமார் 1 லட்ச முன்பதிவுகள் குவிந்ததாக ஓலா எலக்ட்ரிக் சார்பில் அப்போது தெரிவிக்கப்பட்டது உங்களில் சிலருக்கு நினைவிருக்கலாம். ஆரம்ப நிலை எஸ்1 மற்றும் சற்று பிரீமியம் தரத்திலான எஸ்1 ப்ரோ என்கிற இரு விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மொத்தம் 10 விதமான நிறத்தேர்வுகளில் கிடைக்கின்றன.

இவற்றில் 8.5 கிலோவாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் 3.97kWh பேட்டரி தொகுப்புகள் பொருத்தப்படுகின்றன. ஓலா எஸ்1 ஸ்கூட்டரின் விலை ரூ.99,999 ஆகவும், எஸ்1 ப்ரோ ஸ்கூட்டரின் விலை ரூ.1,29,999 ஆகவும் தற்சமயம் உள்ளன. இவை எக்ஸ்-ஷோரூம் விலைகளாகும், இவை மாநிலத்திற்கு மாநிலம் அந்தந்த அரசாங்கள் வழங்கும் மானியங்கள் & சலுகைகளை பொறுத்து வேறுப்படக்கூடும்.

முன்பதிவுகள் துவங்கப்பட்டு கிட்டத்தட்ட 5 மாதங்கள் கழித்து கடந்த 2021 டிசம்பர் 16ஆம் தேதியில் இருந்துதான் எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கப்பட்டன. முதல் 100 எஸ்1 ஸ்கூட்டர்கள் ஓசூரில் உள்ள தொழிற்சாலையில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் நகரங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்யப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக