Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 25 ஜனவரி, 2022

வேலைவாய்ப்பு இல்லாமல் தவிக்கும் ஆப்கானிஸ்தான் மக்கள்.. தாலிபான்கள் நிர்வாகத்தில் ஓட்டை..!

  9,00,000 பேர்

தாலிபான்கள் பல போராட்டங்களுக்குப் பின்பு ஆப்கானில்தானை கைப்பற்றிய நாளில் இருந்து அந்நாட்டில் பல்வேறு பிரச்சனைகளை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். ஒருபக்கம் மக்களுக்கான சுதந்திரம் பெரும் கேள்வியாக இருந்தாலும், வாழ்வாதாரம் கூடத் தற்போது பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது.

சமீபத்தில் ILO அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்புகள் படி அந்நாட்டில் வேலைவாய்ப்பு இல்லாமல் தவிப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகத் தெரிகிறது.

ஆப்கானிஸ்தான்

2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதில் இருந்து அந்நாட்டில் சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் வேலைவாய்ப்பை இழந்து வருமானத்தையும் இழந்து தவித்து வருகின்றனர். இதோடு இதில் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளது பெண்கள் தான் எனச் சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.

9,00,000 பேர்

தற்போதைய நிலை தொடர்ந்தால் ஆப்கானிஸ்தான் நாட்டில் 2022 பாதியில் சுமார் 9,00,000 பேர் வேலைவாய்ப்பை இழக்கும் சூழ்நிலை உருவாகும். இது இந்நாட்டின் வர்த்தகம், பொருளாதாரத்தைப் பெரிய அளவில் பாதிக்கும் என ILO அமைப்பு ஆப்கானிஸ்தானை ஆளும் தாலிபான்களை எச்சரித்துள்ளது.

பொருளாதாரம்

ஆப்கானிஸ்தான் நாட்டைத் தாலிபான்கள் கைப்பற்றிய பின்பு நிர்வாக மாற்றம், பொருளாதாரச் சரிவு, பெண்களுக்குப் பணியாற்ற அனுமதி மறுப்பு போன்ற பிரச்சனைகளால் பலர் அடுத்தடுத்து வேலைவாய்ப்புகளை இழந்து வருகின்றனர். இதன் வாயிலாக அந்நாட்டின் பொருளாதாரம் -14 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.

பெண்களுக்குத் தடை

இதேபோல் தாலிபான் ஆப்கானிஸ்தான் ஆட்சியைக் கைப்பற்றிய பின்பு பெண்களுக்கு வேலைவாய்ப்பு, கல்வி, எனப் பல கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டது. இதனால் பெண்கள் வேலைவாய்ப்பு அளவீடு 16 சதவீதம் சரிந்துள்ளது, இது 2022 மத்தியில் 28 சதவீதமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தாலிபான் ஆட்சி

தாலிபான் ஆட்சியில் ஆப்கானிஸ்தான் நாட்டின் முக்கிய வர்த்தகப் பிரிவான விவசாயம், மக்களுக்கான சேவை, கட்டுமானம் ஆகிய அனைத்து முக்கியமான துறைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, வேலைவாய்ப்புகளையும், வர்த்தகத்தையும் இழந்துள்ளது.

பசியில் வாடும் மக்கள்

இதுவரையில் உலக நாடுகளில் இருக்கும் ஆப்கானிஸ்தான் நாட்டுக்குச் சொந்தமான சொத்துக்களைப் பயன்படுத்த அனுமதிக்காத நிலையில், ஆப்கானிஸ்தான் கடுமையான நிதிநெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. சுமார் 2.2 கோடி மக்கள் தற்போது பசியில் வாடி வருவதாகப் பொருளாதார வல்லுனரான அப்துல் நசீர் ரிஷ்டியா தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக