Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 11 ஜனவரி, 2022

ஏன்டா பேரு வச்சது குற்றமா?- அவரது பெயர் காரணமாக டுவிட்டரில் உலகப் புகழ்: பேர கேட்டா நெருங்க மாட்றாங்க!

 கோவிட் கபூர் என்று பெயர்


பொதுவாக பேரும் புகழோடு வாழ வேண்டும் என ஆசிர்வாதம் செய்வது வழக்கும். இங்கு இந்த நபருக்கு யார் ஆசிர்வாதம் செய்தார்கள் என தெரியவில்லை காரணம் அவர்கள் ஆசிர்வாதம் ஊர்ஜிதமாக பலித்து இருக்கிறது. இவரது பெயர் காரணமாகவே புகழும் கிடைத்திருக்கிறது. அதன்படி தற்போது அவர் பேரும் புகழுமாக இருக்கிறார். இவர் எந்த நாட்டை சேர்ந்தவரும் இல்லை இந்தியாவை சேர்ந்தவர் தான் அவர் பெயர் கோவிட் கபூர் ஆகும். கோவிட் கபூர் என்ற பெயர் காரணமாகவே இவர் மிகவும் பிரபலமாகி இருக்கிறார்.

கோவிட் கபூர் என்று பெயர்

கோவிட் கபூர் என்று இவர் பெயரை கேட்டதும் பலர் ஆச்சரியப்படுவதோடு சிலர் பயத்துக்கும் உள்ளாகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார். கொரோனா காலத்திற்கு பிறகு அவர் சமீபத்தில் முதல்முறையாக வெளிநாடுகளுக்கு செல்ல துவங்கி இருக்கிறார். அவங்கும் அவருக்கு இதே நிலை தான். டுவிட்டரில் பிரபலமாகியுள்ள கோவிட் தற்போது My Name is Kovid and I am Not a Virus என குறிப்பிட்டுள்ளார் . 

வெளிநாட்டு பயணங்கள் ஜாலியாக இருக்கப் போகின்றன

அதேபோல் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அவர் Future Foreign Trips are Going to be Fun (வெளிநாட்டு பயணங்கள் ஜாலியாக இருக்கப் போகின்றன) என பதிவிட்டுள்ளார். கோவிட் வெளிநாட்டுக்கு போகிறாரா என்ற கேள்விகளோடு இதை வைரஸ் உடன் ஒப்பிட்டு பலரும் கிண்டல் செய்கின்றனர். இந்த பதிவிற்கு 40,000 லைக்குகள் 4000 ரீடுவிட்கள் கிடைத்திருக்கிறது. 

வித்தியாசமான அணுகுமுறைகள்

கோவிட் கபூர் என அவரது பெயரை கேட்டு பலரிடமும் கிடைக்கும் வித்தியாசமான அணுகுமுறைகளை கண்டு அவர் அதை வியாபார யுக்தியாக மாற்றத் தொடங்கி இருக்கிறார். ஹாலிடிபை எனும் பயண நிறுவனத்தின் இணை நிறுவனராக கோவிட் இருக்கிறார். ஆரம்பத்தில் இவரது பெயரை கேட்ட பலருக்கும் இது ஆச்சரியமாக இருந்துள்ளதை நினைத்து அவர் கஷ்டத்துக்கு உள்ளாகி இருக்கிறார். பின் காலப்போக்கில் அதை நகைச்சுவையான அணுபவமாக மாற்றி இருக்கிறார்.

கோவிட்-க்கு இன்னும் நிறைய பயணம் தேவை

அதை வியாபார உத்தியாக மாற்றும் வகையில் சமீபத்தில் Kovid Positive Since 1990 I am Kovid that Wants More Travel என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். கோவிட்-க்கு இன்னும் நிறைய பயணம் தேவை என குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து ஆச்சரியம் அடைந்த பயனர்கள் பல வகையில் வெவ்வேறு கருத்துகளை பதிவிடுகின்றனர். இதுகுறித்த கருத்துகளை பார்க்கும் போது, அவர் பிறந்த ஆண்டு 1990 எனவும் அதன்முதல் பாசிட்டிவ் எனவும் அவருக்கு மேலும் பயணம் செய்ய விருப்பம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பெயரை சொல்லி கூப்பிட்டால் அனைவரும் பயப்படுவார்கள்

டீக்கடையில் கூட யாரும் அவரது பெயரை சொல்லிக் கூப்பிடுவதில்லை அவர் பெயரை சொல்லி கூப்பிட்டால் பிறர் அனைவரும் பயப்படுவார்கள் என யாரும் பெயர் சொல்லி அழைக்கமாட்டுகிறார்கள் என குறிப்பிடுகிறார். கோவிட் என்றால் சமஸ்கிருதத்தில் சுயமாக கற்றுத் தேர்ந்தவர் என அர்த்தம். தனது தாய் இந்த பெயரை தேர்ந்தெடுத்ததாகவும், இந்த பெயர் அழகானது எனவும் எந்த சூழ்நிலையிலும் யார் சொன்னாலும் இந்த பெயரை மாற்ற மாட்டேன் என கோவிட் கபூர் குறிப்பிட்டுள்ளார்.

கோவிட்-19 எனப்படும் கொரோனா தொற்று

இதெல்லாம் ஒருபுறம் இருக்க மறுபுறம் கோவிட்-19 எனப்படும் கொரோனா தொற்றின் தாக்கம் கொஞ்சமாக கொஞ்சமாக மீண்டும் வீரியத்துடன் பரவ ஆரம்பத்திருக்கிறது. பொது இடங்களில் கடை பிடிக்க வேண்டிய அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றுவது என்பது மிகக் கட்டாயம். பொது இடங்களில் சமூக இடைவெளி கடைபிடிப்பது, வெளியே சென்றால் முகக் கவசம் அணிவது உள்ளிட்ட அனைத்தும் கட்டாயமாகும். ஒவ்வொரு முறையும் கையில் சானிடைசர் பயன்படுத்துவது என்பது மிக முக்கியம்.

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிப்பு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் ஒரே நாளில் 1,38,745 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாக சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் 10978 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வருகிறது. வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டிருக்கிறது. முறையான வழிமுறைகள் பின்பற்றி கொரோனா பரவலை குறைக்க மக்கள் ஒத்துழைக்காவிட்டால் ஊரடங்கு விதிகள் கடுமையாக்கப்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக