Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 25 ஜனவரி, 2022

ஊழியர்களிடம் திகைக்க வைக்கும் பதிலை கூறிய சோமேட்டோ CEO.. அப்படி என்ன சொன்னார் தெரியுமா?

சோமேட்டோ சரிவு

இந்தியாவில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் ஒன்று சோமேட்டோ. இந்த நிறுவனம் சமீபத்தில் தான் பங்கு சந்தைக்குள் காலடி எடுத்து வைத்தது. பங்கு சந்தை வரலாற்றிலேயே முதன் முதலாக பங்கு சந்தைக்குள் நுழைந்த நிறுவனம் சோமேட்டோ தான்.

 சோமேட்டோவின் வருகைக்கு பின்னர் தான் பற்பல நிறுவனங்களும் சந்தைக்குள் நுழைந்தன. கடந்த ஆண்டு ஜூலை மாதமே பங்கு சந்தைக்குள் நுழைந்தது. ஆரம்பத்தில் நல்ல ஏற்றத்தினை கண்டு வந்த பங்கின் விலையானது, பின்னர் சரிவினைக் கண்டது.

சோமோட்டோ நிறுவனத்தின் பங்கு விலையானது, ஸ்விக்கி நிறுவனமானது நிதியினை திரட்டிய நிலையில், சோமோட்டோவின் பங்கு விலையானது பலத்த சரிவினைக் கண்டது.

சோமேட்டோ சரிவு

இதற்கிடையில் நான் நீண்டகாலமாக சந்தை சரிவுக்காக காத்துக் கொண்டுள்ளேன். அப்போது தான் மீண்டும் வலுவான செயல்திறனுடன் உயரும் என தீபைந்தர் கோயல் கூறியுள்ளார். இதற்கிடையில் சோமேட்டோவின் பங்கு விலையானது சரிவினைக் கண்ட நிலையில், அதன் சந்தை மூலதனம் 9.78 பில்லியன் டாலராக சரிவினைக் கண்டது.

தொடர்ந்து கண்கானிக்கணும்

தொடர்ந்து செயல்படுத்துவோம். மதிப்பினை உயர்த்துவோம். செலவினைக் குறைப்போம். அதேபோல அடிக்கடி பங்குகளை பார்ப்பதை குறைப்போம் என்றும் கூறியுள்ளார்.

10.7 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீட்டினை ஸ்விக்கி திரட்டுவதாக அறிவித்த பிறகு இது நடந்துள்ளது. இந்த மாபெரும் முதலீட்டின் மூலம் பெங்களூருவை தளமாகக் கொண்ட ஸ்விக்கியை 4வது பெரிய டெகாகார்ன் நிறுவனமாக மாற்றலாம்.

 வளர்ந்து வரும் நிறுவனங்கள்

இதுமட்டும் அல்ல, இன்றைய காலகட்டத்தில் ஹோட்டல் ஒருங்கிணைப்பாளரான ஓயோ, எட் டெக் நிறுவனமான பைஜூஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் இந்தியாவில் வேகமெடுத்து வருகின்றன.

பேடிஎம், நய்கா, சோமேட்டோ பங்குகள் சரிவுக்கு மத்தியில் சோமேட்டோ பங்குகள் சரிவினைக் கண்டன. இதனால் இனி வரப்போகும் டெக் நிறுவனங்களில் பாதிப்பினை ஏற்படுத்தாலாமோ என்ற அச்சமும் நிலவி வருகின்றது.

சந்தை மதிப்பு சரிவு

இன்ஃபோ எட்ஜ் நிறுவனம் சோமோட்டோவில் 15.23% பங்கினை வைத்துள்ளது. சோமேட்டோவின் பங்கு விலையானது 45 சதவீதம் சரிவினைக் கண்டு, 11,032 கோடி ரூபாயாக சரிவினைக் கண்டது. இது முன்னதாக 20,190 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக