Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 12 ஜனவரி, 2022

SBI பயனர்களே உஷார்.. கூகிளில் சேவை மைய எண் தேடி 4 லட்சம் மோசடி.. இந்த தவறை மட்டும் செய்யாதீர்..

கூகிள் சர்ச் மூலம் SBI வங்கியின் அவசர உதவி மற்றும் சேவை மைய எண்களை தேடுகிறீர்களா? உஷார்

சமீபத்தில் எஸ்பிஐ (SBI) வங்கியின் வாடிக்கையாளர் ஒருவர் வங்கியின் சேவை எண்ணை அறிந்துகொள்வதற்காகக் கூகுள் சர்ச் சேவையைப் பயன்படுத்தி தெரியாத்தனமாக சிக்கலில் சிக்கி, தனது வங்கி கணக்கில் இருந்த ஒட்டுமொத்த பணத்தையும் இழந்திருக்கிறார். இந்த நபரிடம் இருந்து சுமார் 4.02 லட்சம் ரூபாய் ஆன்லைன் மூலம் சில நிமிடங்களில் திருடப்பட்டுள்ளது. இவர் செய்த அதே தவறை நீங்களும் செய்யாமல் இருக்க இந்த பதிவை முழுமையாகப் படியுங்கள். SBI வங்கி வாடிக்கையாளர்களுக்குத் தேவைப்படும் அசல் SBI சேவை மைய உதவி எண்ணை இந்த பதிவுடன் இணைத்துள்ளோம்.

கூகிள் சர்ச் மூலம் SBI வங்கியின் அவசர உதவி மற்றும் சேவை மைய எண்களை தேடுகிறீர்களா? உஷார்

நவி மும்பையில் வசிக்கும் 73 வயது முதியவர் தான் சமீபத்தில் கூகிள் சர்ச் சேவையைப் பயன்படுத்தி SBI வங்கியின் அவசர உதவி மற்றும் சேவை மைய எண்களைத் தேடி இருக்கிறார். கூகிள் சர்ச் மூலம் கிடைத்த போலி SBI சேவை மைய எண்ணை அழைத்து தொடர்பு கொண்டதால், சைபர் மோசடி செய்பவர் விரித்த வலையில் சிக்கி ரூ. 4.02 லட்சத்தை இழந்துள்ளார். இந்த முதியவர் ஓய்வூதியம் பெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கிறது. புகார்தாரரான ஓய்வூதியம் பெறும் முதியவர் தனது டெபிட் கார்டை செயல்படுத்த முயன்ற போது இந்த இணைய வழி மோசடியில் சிக்கி பணத்தை இழந்ததாகத் தெரிகிறது.

SBI DEBIT CARD ஆக்டிவேட் செய்ய முயன்று பணம் போச்சு

ஜனவரி 10 ஆம் தேதி கார்கர் காவல் நிலையத்தில் முதியவர் சைபர் மோசடி குறித்து புகார் அளித்துள்ளார். அமெரிக்காவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கணக்காளராகப் பணிபுரிந்து வந்ததாகவும், 1998 இல் இந்தியா திரும்பியதாகவும் அந்த முதியவர் காவல்துறையினரிடம் அளித்த புகாரில் தெரிவித்திருக்கிறார். மேலும் அவருடைய புகாரில் தெரிவித்திருந்தது, ''டிசம்பர் 25 ஆம் தேதி அன்று, எனது SBI DEBIT CARD ஆக்டிவேட் செய்வதற்காக எஸ்பிஐயின் வாடிக்கையாளர் சேவை எண்ணைக் கூகுளில் தேட முயன்ற போது, 'எஸ்பிஐ டெபிட் கார்டு உதவி எண்' எனக் குறியிடப்பட்ட எண் உள்ள பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டேன்.

AnyDesk ஆப்ஸை பதிவிறக்கம் செய்ய வலியுறுத்திய போலி வங்கி அதிகாரி

அங்குக் கொடுக்கப்பட்ட உதவி எண்ணிற்கு என் மொபைல் எண்ணில் இருந்து அழைத்த பிறகு, மறுமுறையில் தன்னை எஸ்பிஐயில் பணிபுரியும் நபர் என்று ஒருவர் பேசியிருக்கிறார். அவரின் பெயர் மணீஷ் குப்தா என்று அறிமுகப்படுத்திக் கொண்டதாக முதியவர் தனது புகாரில் குறிப்பிட்டிருக்கிறார். மறுமுனையில் பேசிய மோசடி காரர், முதியவரின் தொலைப்பேசியின் ரிமோட் அணுகலைப் பெற AnyDesk ஆப்ஸை பதிவிறக்கம் செய்து பயன்பாட்டைப் இன்ஸ்டால் செய்யுமாறு அழைப்பில் முதியவருக்கு வழிகாட்டியுள்ளார்.

AnyDesk ஆப்ஸ் எப்படிச் செயல்படும் தெரியுமா?

AnyDesk பற்றி தெரியாதவர்களுக்கு, AnyDesk என்ற இந்த ஆப்ஸ், நீங்கள் பயன்படுத்தும் மொபைல் போன், லேப்டாப் அல்லது கணினி போன்ற சாதனங்களை எங்கிருந்தோ மற்றவர் கட்டுப்படுத்த உதவும் ரிமோட் அணுக்களைத் தருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. AnyDesk ஆப்ஸை பயன்படுத்தும் போது உங்கள் டிஸ்பிளேவில் AnyDesk ID என்ற காட்டப்படும் ஐடி எண்ணை நீங்கள் மற்றவருடன் பகிர்ந்தவுடன் அந்த சாதனம் முழுமையாக அந்த மூன்றாம் நபரின் கட்டுப்பாட்டிற்குச் சென்றுவிடும். இடையில் உங்களின் தலையீட்டைத் தடுப்பதற்கு மோசடி காரர்கள் உள்நுழைந்ததும் உங்களுக்கான அணுகலைத் துண்டித்துவிடுவார்.

சில நிமிடங்களில் மொத்தமாக 4.02 லட்ச ரூபாய் திருட்டு

இதனாலேயே பெரிய சிக்கல் எழுகிறது. AnyDesk ஆப்ஸ் பற்றி அறியாத முதியவர் அவ்வாறு அந்த பயன்பாட்டை தனது மொபைலில் நிறுவியதும், மோசடி செய்பவர் அந்த முதியவரின் வங்கிக் கணக்கின் விவரங்களைக் கண்டறிந்து, அவற்றைப் பயன்படுத்திப் பல பரிவர்த்தனைகள் மூலம் மொத்தமாக சுமார் 4.02 லட்ச ரூபாயை வேறொரு வங்கிக் கணக்கிற்கு மாற்றம் செய்து திருடியுள்ளார். இது எதுவுமே தெரியாமல் முதியவர் அமைதியாகக் கையில் போனுடன் அமர்ந்திருக்கிறார். இறுதியாக எல்லாம் முடிந்த பின்னர், மோசடி செய்பவர், சர்வர் மெதுவாக இருப்பதாகக் கூறியுள்ளார்

சைபர் கிரைம் தாக்குதல் குறித்து புகார்

இதனால், முதியவரின் வேண்டுகோளை நிறைவேற்ற முடியவில்லை என்றும், டெபிட் கார்டு ஆக்டிவேட் செய்யப்படவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும், டிசம்பர் 27 ஆம் தேதி, திங்கட்கிழமை வங்கிக்கு நேரில் சென்று முதியவரின் டெபிட் கார்டை ஆக்டிவேட் செய்ய தேவைப்படும் சில செயல்முறையை முடிக்குமாறு அந்த மோசடி நபர் கூறியுள்ளார். பின்னர், முதியவர் வங்கிக்கு சென்றபோது, ​​அவரது கணக்கில் இருந்த பெரும் தொகை திருடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து முதியவர் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இவர் செய்த இதே தவற்றை எப்போதும் நீங்களும் செய்யாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

எப்போதும் இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்

எப்போதும் வங்கி தொடர்பான சேவை மைய எண்களைக் கூகிள் மூலம் தேடுவதை முற்றிலுமாக தவிர்த்துவிடுங்கள். இது உங்களை மோசடி காரரின் வலைகளில் சிக்க வைத்து பண மோசடியில் ஈடுபடுத்திவிடும். எஸ்பிஐ வங்கி தங்களது வாடிக்கையாளர்களுக்கு புதிய உதவி மைய சேவை எண்களைச் சமீபத்தில் அறிவித்தது. வாடிக்கையாளர்கள் தங்கள் குறை மற்றும் சந்தேகங்களை இந்த எண்ணின் மூலம் கேட்டுக் கொள்ளலாம் என்றும், எஸ்பிஐ உதவி மையம் ஆனது எளிமையான உதவி மைய எண்ணாக மாற்றி அமைக்கப்படுகிறது என்றும் தெரிவித்திருந்தது.

SBI வங்கியின் அதிகாரப்பூர்வ இலவச டோல்ஃப்ரீ எண் இது தானா?

எஸ்பிஐ வங்கியின் சேவைகள் மற்றும் சந்தேகங்களை இனி இந்த எண்ணின் மூலம் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். எஸ்பிஐ வங்கி தற்போது இலவச டோல்ஃப்ரீ எண்ணை வாடிக்கையாளர்களின் சந்தேகம் மற்றும் சேவைகளை அறிந்து கொள்ள அறிமுகம் செய்துள்ளது. எஸ்பிஐ அறிவித்த புதிய இலவச டோல் ஃப்ரீ எண் குறித்துப் பார்க்கையில் அது 1800 1234 ஆகும். இந்த எண்கள் ஆனது வாடிக்கையாளர்கள் எளிதாக ஞாபகம் வைத்துக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இனி கூகிளில் சேவை மைய உங்களைத் தேடாமல் வங்கியின் அதிகாரப்பூர்வ இந்த அழைப்பு எண் அல்லது வங்கியின் அதிகாரப்பூர்வ ஆப்ஸ் மூலம் தொடர்புகொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக