Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 24 டிசம்பர், 2020

உங்கள் சக ஊழியர்களை போலவே நீங்களும் சம்பளம் வாங்குகிறீர்களா? கண்டறிவது எப்படி?

 குறைந்த சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! உங்கள் சம்பளம்  உயரபோகுது! - TamilSpark

உங்கள் சக ஊழியர்களை போலவே நீங்களும் சம்பளம் வாங்குகிறீர்களா என்பதை எப்படி கண்டறியலாம் என்று இந்த தொகுப்பில் காணலாம்.உங்கள் சக ஊழியர்களை போலவே நீங்களும் சம்பளம் வாங்குகிறீர்களா? கண்டறிவது எப்படி?

நாம் மட்டும் குறைவான ஊதியம் வாங்கிகிறோமோ என்கிற எண்ணமே மிக கொடிய உணர்வாகும். ஏனெனில் சம்பளம் என்பது வெறும் எண் மட்டும் கிடையாது. அதை வைத்தே உங்களது பணி மதிப்பிடப்படுகிறது. உங்கள் நிறுவனம் எவ்வளவு சிறப்பாக செயல்ப்படுகிறது என்பதையும் அந்த சம்பளமே எடுத்து காட்டுகிறது. 

நீங்கள் புதிய வேலையில் சேர்கிறீர்களா அல்லது நீண்ட காலமாக ஒரே நிறுவனத்தில் ஒரே வேலையை செய்து வருகிறீர்களா என்பது முக்கியம் கிடையாது. உங்கள் சக ஊழியர்களை போலவே நீங்களும் சம்பளம் வாங்குகிறீர்களா என்பதுதான் முக்கியம். 

ஒரே அனுபவம் மற்றும் பணி சுமையை கொண்ட உங்களுக்கும் உங்கள் சகாவுக்கும் ஒரே அளவு சம்பளம் கொடுக்கப்படுகிறதா என அறிய ஐந்து வழிகள் உள்ளன.

சம்பளம் குறித்த ஆய்வு:

உங்களுக்கு சரியான சம்பளம் வழங்கப்படுகிறதா என்பதை சரியாக கண்டுப்பிடிக்க சிறந்த வழிகளில் ஒன்று, உங்கள் அளவுக்கே கல்வியும் தகுதியும் உடைய மற்றவர்க்கு சம்பளம் எவ்வளவு வழங்கப்படுகிறது என்பதை சரிப்பார்க்க வேண்டும்.

இதே தகுதி மற்றும் அனுபவம் கொண்டவர்களுக்கு மற்ற நிறுவனங்கள் என்ன சம்பளம் தருகின்றன என்பதையும் பார்க்க வேண்டும். அதற்கு வேலைக்கு ஆட்கள் எடுக்கும் தளங்களில் போய் தேடினாலே உங்களது தகுதிக்கு தற்சமயம் என்ன சம்பளம் கிடைக்கிறது என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.

உங்கள் வேலை தொடர்பாக குறிப்பிட்ட தளங்களில் தேடும்போது உங்களுக்கு சிறந்த முடிவுகள் கிடைக்கும்.

நெட்வர்க்கிங்:

உங்கள் சம்பளத்தை தீர்மானிக்க மற்றொரு எளிய வழி நெட்வர்கிங் வழியாக தொடர்புகளை உருவாக்குவது. இதனால் உங்கள் நிறுவனத்தில் உள்ளவர்களோடு மற்றவர்களை காட்டிலும் அதிகமாக நீங்கள் சம்பளத்தை குறித்து உரையாடலாம்.

பணியாளர் வசதிகள்:

பல நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு பல சலுகைகளையும் வசதிகளையும் செய்து தருகின்றன. நீங்கள் உடல்நலம், ஆயுள் காப்பீட்டு பாதுகாப்பு, உணவு வவுச்சர்கள், எளிதான வேலை நேரம் போன்ற சலுகைகளை பெறுகிறீர்கள் என்றால் உங்கள் சம்பளம் குறித்து நீங்கள் யோசிக்கலாம்.

ஆனால் இப்படிப்பட்ட எந்த சலுகையும் இல்லாத ஒரு சாதரண நிறுவனத்தில் நீங்கள் வேலை பார்க்கிறீர்கள் என்றால் அப்போது உங்கள் சக பணியாளர்கள் உங்களை விட அதிகமான சம்பளம் வாங்கினால் அவர்கள் உங்களை விட சிறந்தவர்களாக இருக்க வேண்டும். அல்லது அந்த நிறுவனம் உங்களை ஏமாற்றி கொண்டிருக்க கூடும்

தேர்வாளர்களை தொடர்பு கொள்ளுங்கள்:

ஆட்களை தேர்வு செய்து பணியில் அமர்த்துபவர்களுக்கு அனைத்து பதவிகளுக்கும் வழங்கப்படும் சம்பளம் குறித்த விவரங்கள் தெரிந்திருக்கும்.

உங்களுடைய தற்போதைய சம்பளத்தை அவர்களிடம் வெளியிடாமல் சாதரணமாக உங்களது பதவிக்கு அவர்கள் வழங்கும் சம்பளம் குறித்து கேட்கலாம். அவர்களின் பதில் மூலம் நீங்கள் உங்கள் சம்பளத்தை பற்றி அறிந்துக்கொள்ளலாம்.

அவர்கள் உங்களுக்கு வழங்கப்படுவதை விட அதிகப்படியான தொகையை கூறினால் நீங்கள் குறைந்த சம்பளம் வாங்குகிறீர்கள் என்பதை அதன் மூலம் உறுதி செய்துக்கொள்ளலாம்

மதிப்பீட்டு தளங்களை ஆராயவும்:

ஜாப்ஸ் பஸ் போன்ற சில முதலாளி மதிப்பீட்டு தளங்கள் பணியாளர்கள் தங்கள் வேலை அனுபவங்களை போஸ்ட் செய்ய அனுமதிக்கின்றன. மேலும் அதில் கேள்விகளை கேட்பதற்கான அம்சமும் அதில் உள்ளன. நீங்கள் அதில் உள்ள உரைகள் மற்றும் கேள்விகளை பார்க்கலாம்.

இதன் மூலம் மற்ற நிறுவனங்களில் இருந்து சம்பளம் தருவதில் உங்கள் நிறுவனம் எப்படி மாறுப்படுகிறது என்பதை நீங்கள் அறிந்துக்கொள்ளலாம்

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக