Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 1 ஆகஸ்ட், 2020

3-ம் வீட்டில் கேது இருந்தால் உண்டாகும் பலன்கள்...!!

'வாழ்க்கையை அப்படியே புரட்டிப் போட்டு நல்லதைக் கெட்டதாகவும், கெட்டதை நல்லதாகவும் தலைகீழாக மாற்றுபவர் கேதுபகவான். மனதை பாதிக்கும் மாற்றங்கள், இருக்கும் இடத்திலிருந்து வேறு இடத்திற்கு மாற்றுதல் போன்றவற்றை கேதுதான் ஏற்படுத்துவார்".

கேதுபகவானுக்கு 'மாற்றங்களைத் தரும் கிரகம்" என்று பெயர். எந்தவொரு விஷயத்திலும் மாற்றங்களைக் குறிப்பவர் கேது.

ஞான வைராக்கியத்தை தருவது, அதிர்ஷ்டகரமான... வளமான வாழ்க்கையில் ஒழுக்கமாக வாழ்வதை உணர்த்துவது, விரும்பியபடி வாழ்க்கையோடு சகல சுகத்தை தருவது, புதினங்கள் படைப்பது மற்றும் வேதாந்த ரகசியங்களை ஆராய்ச்சி செய்யும் ஞானத்தை கொடுப்பவரும் கேதுபகவான் தான்.

லக்னத்திற்கு 3-ல் கேது இருந்தால் அந்த ஜாதகக்காரருக்கு தாராள தனவரவு உண்டாகும்.

3ல் கேது இருந்தால் என்ன பலன்?

👉 தர்ம சிந்தனை மிக்கவர்கள்.

👉 சுகபோக வாழ்க்கையை வாழக்கூடியவர்கள்.

👉 எதிர்ப்புகளை வெல்லக்கூடியவர்கள்.

👉 துணிச்சல் மிக்கவர்கள்.

👉 சாதனை செய்யும் திறமை கொண்டவர்கள்.

👉 சாஸ்திர ஞானம் உடையவர்கள்.

👉 மனதில் எதையாவது சிந்தித்து கொண்ட இருக்கக்கூடியவர்கள்.

👉 எந்த செயல்களிலும் கோபமும், வேகமும் கொண்டவர்கள்.

👉 காது தொடர்பான பிரச்சனைகளை உடையவர்கள்.

👉 உறவினர்களிடத்தில் மனக்கசப்புகள் உண்டாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக