குருநாதா
நாம் மருத்துவத் தொழில் செய்யலாமா? அதில் பணம் கிடைக்கும், புண்ணியமும் கிடைக்கும்
என்றான், முட்டாள். அப்படியே செய்வோம் என்றார் குரு.
மனிதர்களுக்கு மட்டும்தானா? என்று கேட்டான் மண்டு. மனிதர்க்கும் வைத்தியம் செய்வோம், மாடு, குரங்கு, குழந்தைக்கும் செய்வோம் என்றான் மட்டி. பரமார்த்தரும் அவரது ஐந்து சீடர்களும் மருத்துவம் செய்யும் செய்தி ஊருக்கு தெரிந்தது.
காய்ச்சலுடன் ஒருவன் வந்தான். அவன் உடலைத் தொட்டுப்பார்த்து நெருப்பாகச் சுடுகிறது என்றான் மடையன். அப்படியானால் உடனே உடம்பைக் குளிர்ச்சி அடையச் செய்ய வேண்டும் இவனை தொட்டியில் உள்ள தண்ணீரில் அழுத்தி வையுங்கள் என்றார் குரு.
கொஞ்ச நேரத்தில் ஒரு கிழவி கண் வலியுடன் வந்தால். இப்போது நேரமில்லை. உன் கண்ணை மட்டும் தோண்டி எடுத்துக் கொடுத்து விட்டுப் போ. சரி செய்து வைக்கிறோம் என்றான் முட்டாள். கிழவியோ, ஐயையோ என்று கத்திக்கொண்டு ஓடினாள்.
சிறிது நேரம் சென்றது. உடம்பெல்லாம் வெட வெட என்று நடுங்குகிறது என்று ஒருவன் வந்தான். சும்மா இருப்பதால்தான் ஆடுகிறது. உடம்பு முழுவதும் கயிறு போட்டுக் கட்டி விடுங்கள் அப்போது எல்லாம் சரியாகிவிடும் என்றார் பரமார்த்தர்.
முட்டாளும் மூடனும், தூணில் கட்டி வைத்த பிறகும் உடம்பு நடுங்குவதைக் கண்ட மட்டி, குருதேவா! இது குளிரால் வந்த நோய். இது தீர வேண்டுமானால், இவன் உடம்பைச் சூடாக்க வேண்டும் என்றான். அதைக் கேட்ட முட்டாள் கொள்ளிக் கட்டையால் நோயாளியின் உடலில் சூடு போட்டான். வலி தாங்காத நோயாளி சுருண்டு விழுந்தான்.
பல் வலி தாங்க முடியாமல் ஒருவன் வந்தார். வலிக்கிற பல்லை எடுத்து விட்டால் பல்வழியே வராது என்றார் பரமார்த்தர். சீடர்களோ, ஆளுக்குக் கொஞ்சமாக எல்லா பல்லையும் கத்தியால் தட்டி எடுத்துப் பொட்டலமாகக் கட்டிக் கொடுத்தனர்!
சற்று நேரத்தில் யானைக்கால் வியாதிக்காரன் ஒருவன் வந்தான். உலகிலேயே இதற்கு இரண்டு வகையான வைத்தியம்தான் இருக்கிறது. நன்றாக இருக்கிற காலை வெட்டிவிட்டு, அந்த இடத்தில் யானையின் காலை ஒட்டி விட வேண்டும். இல்லாவிட்டால் அந்தக் காலுக்குச் சமமாக இந்தக் காலில் உள்ள சதையைச் செதுக்கி எடுத்து விட வேண்டும் என்றார் பரமார்த்தர். யானைக்கால் வியாதிக்காரனோ, காலை விட்டால் போதும் என்று தப்பினான்.
ஐயா! என்று ஒருவன் இரும்பல் வந்துகொண்டே இருக்கிறது என்றார். வாயைத் திறப்பதால்தானே இருமல் வருகிறது. வாயை அடைத்து விட்டாள் இரும்பல் வராது என்றார் அதன்படி, மட்டி கிழிந்த துணிகளை எல்லாம் சுருட்டி, இருமல்காரனின் வாயில் வைத்துத் திணித்தான்.
என் ஆடு சரியாகத் தழை தின்னமாட்டிங்கிறது என்றபடி ஒருவன் வந்தான். அந்த ஆட்டைக் கண்ட குரு, தொண்டையில் ஏதாவது அடைத்துக் கொண்டு இருக்கும் என்றார். வாயைப் பெரிதாக ஆக்கிவிட்டால் சரியாகிவிடும் என்று எண்ணி கத்தியால் ஆட்டை வெட்டப் போனான் மூடன். பயந்துபோன ஆட்டுக்காரன், ஆட்டை இழுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்தான்.
குருவும் சீடர்களும் கண்டபடி தவறாக வைத்தியம் செய்வதை பார்த்த ஊர் பெரியவர்கள் கூடி இனி குருவையும் சீடர்களையும் ஊருக்குள் நுழையவிடக் கூடாதென முடிவெடுத்தனர்.
குட்டிக்கதைகளும் - கட்டுரைத்தொடர்களும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக