முன்னதாக, Honor நிறுவனம் ஒரு Lite மாடலின் கீழ் பணியாற்றி வருவதாக தகவல் ஒன்று வெளியானது. தற்போது அது என்ன ஸ்மார்ட்போன், அது என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
ஹானர்
நிறுவனம் அதன் பிரபலமான ஹானர் 9 எக்ஸ் ஸ்மார்ட்போனின் லைட் வேரியண்ட்டில் பணியாற்றி
வருவதாக கூறப்பட்டது. தற்போது அந்த தகவலை உறுதிப்படுத்தும் வண்ணம் ஹானர் 9 எக்ஸ் லைட்
ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு விவரங்களை வெளிப்படுத்தும் புதிய விளம்பர பேனர் ஒன்று லீக்
ஆகியுள்ளது.
வெளியான ஹானர் 9 எக்ஸ் லைட்டின் விளம்பர பதாகையின் வழியாக அந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் டூயல் கேமரா அமைப்பு இடம்பெறும் என்பது வெளிப்படையாக தெரிகிறது. அதில் 48 எம்பி அளவிலான மெயின் கேமரா இடம்பெறும் மற்றும் அதுதான் இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போனின் கேமரா அமைப்பானது கருப்பு நிற கேமரா தொகுதிடன் வரும் என்பதையும் வெளியான ரெண்டர் புகைப்படம் காட்டுகிறது. இந்த அமைப்பு ஸ்மார்ட்போனின் பின் பேனலின் மேல் இடது மூலையில் உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் முதலில் themrpc ஆல் கண்டுபிடிக்கப்பட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

கேமரா வடிவமைப்பு தவிர வெளியான லீக் புகைப்படத்தின் வெளியான ஹானர் 9 எக்ஸ் லைட் ஸ்மார்ட்போனின் கைரேகை சென்சாரையும் காண முடிகிறது.
கூகுள் பிளே சான்றிதழை பொறுத்தவரை, ஹானர் 9 எக்ஸ் லைட் ஆனது மூன்று மாதிரி எண்களின் கீழ் வெளிப்பட்டுள்ளது. அது JSN-L21, JSN-L22 மற்றும் JSN-L23 ஆகியவை ஆகும்.இது தவிர, வரவிருக்கும் புதிய ஹானர் 9 எக்ஸ் லைட் ஸ்மார்ட்போன் குறித்து வேறு எந்த தகவலும் கிடைக்கவில்லை.
நினைவூட்டும் வண்ணம், ஹானர் நிறுவனம் இந்த ஆண்டு ஜனவரியில் அதன் ஹானர் 9 எக்ஸ் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இது இரண்டு வகைகளில் வருகிறது - 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி. இதன் விலை நிர்ணயம் முறையே ரூ.13,999 மற்றும் ரூ.16,999 ஆகும்.
அம்சங்களை பொறுத்தவரை, ஹானர் 9 எக்ஸ் ஆனது 1080 x 2340 பிக்சல் தீர்மானம் கொண்ட 6.59 இன்ச் அளவிலான முழு எச்டி+ டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது 7nm ஆக்டா கோர் ஹைசிலிகான் கிரின் 810 SoC மூலம் இயக்கப்படுகிறது, இது 6 ஜிபி வரை ரேம் மற்றும் 128 ஜிபி அளவிலான இன்டர்னல் மெமரி உடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஹானர் 9 எக்ஸ் ஆனது டூயல் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, அதில் 48 எம்பி அளவிலான (எஃப் / 1.8) + 2 மெகாபிக்சல் அளவிலான டெப்த் சென்சார் உள்ளது. முன்பக்கத்தை பொறுத்தவரை இது 16 மெகாபிக்சல் அளவிலான செல்பீ கேமராவை (எஃப் / 2.2) கொண்டுள்ளது, இதன் முன்பக்க கேமரா அமைப்பு ஆனது பாப்-அப் செல்பீ ஆகும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக