Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 11 பிப்ரவரி, 2020

நஷ்டத்தில் 70 பொதுத்துறை நிறுவனங்கள்... அதள பாதாளத்தில் பி.எஸ்.என்.எல்., ஏர் இந்தியா!


ஷ்டப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள ஏர் இந்தியா நிறுவனத்துக்கு 8474.80 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஹைலைட்ஸ்
  • 70 பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஏற்பட்ட மொத்த இழப்பு 31,635.35 கோடி ரூபாய்.
  • பிஎஸ்என்எல் நிறுவனம் 14904.24 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்குகிறது.
மத்திய அரசின் கீழ் உள்ள எழுபது பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருக்கின்றன என மத்திய தொழிற்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியிருக்கிறார்.

மாநிலங்களவையில் திங்கட்கிழமை எம்.பி. வீரேந்திர குமாரின் கேள்விகளுக்கு, அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் எழுத்துப்பூர்வமான பதிலை சமர்ப்பித்தார். அதில், 2019ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி 70 மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறியிருக்கிறார்.

இந்த நிறுவனங்களுக்கு ஏற்பட்ட மொத்த இழப்பு 31,635.35 கோடி ரூபாய் என்றும் அமைச்சர் தெரிவித்திருக்கிறார். முதலீட்டுச் செலவு அதிகரிப்பு, பணியாளர் பற்றாக்குறை, மூலப்பொருட்களின் தட்டுப்பாடு, கடன்கள் மீது அதிகப்படியான வட்டி ஆகியவை இந்நிறுவனங்கள் நஷ்டம் அடைந்திருப்பதற்கான சில காரணங்கள் எனவும் கூறியுள்ளார்.
 
தமிழகத்தைச் சேர்ந்த சென்னை பெட்ரோலிய நிறுவனம் (213.36 கோடி ரூபாய்), மெட்ராஸ் பூச்சிக்கொல்லி நிறுவனம் (80.85 கோடி ரூபாய்), சென்னை ஐ.டி.பி.எல். (2.39 கோடி ரூபாய்) ஆகிய நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களின் பட்டியலில் உள்ளன.

அதிகபட்சமாக டெல்லியைச் சேர்ந்த 25 பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருக்கின்றன. அதிகபட்சமாக பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் (BSNL) 14904.24 கோடி ரூபாய் நஷ்டத்தில் உள்ளது. மற்றொரு பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான எம்டிஎன்எல் (MTNL) 3390.20 கோடி ரூபாய் நஷ்டப்பட்டிருக்கிறது.

நஷ்டப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பது பொதுத்துறை விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா. இந்த நிறுவனத்துக்கு 8474.80 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏர் இந்தியாவின் பொறியியல் சேவைகள் நிறுவனமும் 180.88 கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்திருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக