2023ஆம் ஆண்டு முடிந்து 2024ஆம் ஆண்டு பிறக்கப்போகிறது. பிறக்கப்போகும் புத்தாண்டில் 12 ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
துடிப்பும், வேகமும் கொண்ட மேஷ ராசி அன்பர்களே..!
🎉பிறக்கின்ற ஆங்கில வருடப் புத்தாண்டில் இருக்கக்கூடிய கிரக நிலைகளின் அமைப்புக்கு ஏற்ப வாழ்க்கையில், இனி வரப்போகின்ற நாட்களில் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்கள் என்ன? என்பதை நாம் அறிந்து கொள்வோம்..!
🎉மனதளவில் இருந்துவந்த குழப்பங்கள் படிப்படியாகக் குறையும். திருமணமானவர்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தாய்மாமன் வழியில் ஒத்துழைப்பான சூழல் உண்டாகும்.
கோவில் மற்றும் திருப்பணிகளில் ஆர்வமும், தெளிவும் ஏற்படும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல் உண்டாகும். குழப்பமான எண்ணங்களால் முடிவுகள் எடுப்பதில் தாமதம் ஏற்படும்.
குலதெய்வ நேர்த்திக்கடனை நிறைவேற்றுவீர்கள். பொருளாதாரத்தில் இருந்துவந்த நெருக்கடியான சூழல் மறையும். கடின உழைப்பிற்குப் பின்பே நினைத்த பணிகள் நிறைவேறும்.
விருந்தினர்கள் வருகையால் வீட்டில் கலகலப்பான சூழல் அமையும். புதிய பொறுப்புகள் கிடைக்கும். நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். செயல்பாடுகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் படிப்படியாகக் குறையும்.
பணி சார்ந்த புதிய வாய்ப்புகள் சிலருக்குச் சாதகமாக அமையும். ஆடம்பரமான சிந்தனைகள் மற்றும் பொருட்கள் மீதான எண்ணங்கள் மேம்படும்.
உடல் ஆரோக்கியம் :
💪உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும். சிந்தனைகளில் தெளிவு ஏற்படும். ஆன்மிக பணிகளில் ஈடுபடுவதன் மூலம் நன்மை ஏற்படும். உடலில் இருந்துவந்த எலும்புப் பிரச்சனைகள் தீரும்.
பெண்கள் :
👩பெண்கள் சூழ்நிலை அறிந்து காரியத்தை மேற்கொள்வது நன்மை பயக்கும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். விளையாட்டான பேச்சுக்களைக் குறைத்துக் கொள்ளவும். உடனிருப்பவர்களிடம் கவனம் வேண்டும்.
தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதைத் தவிர்க்கவும். நம்பிக்கையானவர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். உறவுகளை பற்றிய சிந்தனைகள் மேம்படும்.
மாணவர்கள் :
🎒மாணவர்கள் கல்வி சார்ந்த பணிகளில் கவனத்துடன் இருக்கவும். புதிய நபர்களின் தன்மைகளை அறிந்து பழகவும். பேச்சுக்களில் விவேகம் வேண்டும். மேல்நிலைக் கல்வியில் இருந்துவந்த குழப்பம் குறையும். உயர்நிலைக் கல்வியில் ஆலோசனைகளின் மூலம் மாற்றம் ஏற்படும். தடைபட்ட பட்டம் சார்ந்த படிப்புகள் படிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்கள் :
🎓உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் மேம்படும். சிறு சிறு குற்றச்சாட்டுகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். உயர் அதிகாரிகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். ஊதிய உயர்விற்கான வாய்ப்புகள் தாமதமாகும்.
உங்கள் மீதான வீண் பழிகளிலிருந்து விடுபடுவீர்கள். சக ஊழியர்களிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். உத்தியோகம் சம்பந்தமாக அயல்நாடு சென்று வருவீர்கள்.
வியாபாரிகள் :
👳தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். வளர்ச்சிக்கான புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். பயணங்களால் லாபம் கிடைக்கும். வியாபாரம் நிமிர்த்தமான பழைய சிந்தனைகளால் ஒருவிதமான சோர்வு உண்டாகும்.
கால்நடை வியாபாரத்தில் லாபம் ஏற்படும். விவசாய பொருட்களின் மூலம் ஆதாரத்தை மேம்படுத்திக் கொள்வீர்கள். வேலையாட்களுடன் அனுசரித்துச் செல்லவும். மறுசுழற்சித் துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
கலைஞர்கள் :
💃கலைத்துறையினருக்கு வசீகரமும், திறமையும் அதிகரிக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழல் உண்டாகும். கலகலப்பான பேச்சுக்களின் மூலம் பலரின் அறிமுகம் கிடைக்கும்.
ரசனைத் தன்மையில் மாற்றம் உண்டாகும். எதிர் பாலின மக்களின் விஷயங்களில் சற்று கவனத்துடன் செயல்படவும். வரவை மேம்படுத்துவதற்கு வாய்ப்புகள் அமையும்.
அரசியல்வாதிகள் :
👵அரசியல்வாதிகளுக்குத் தடையாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். வித்தியாசமான அணுகுமுறைகளின் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும். பேச்சுக்களில் கனிவு வேண்டும். கோபமான பேச்சுக்களைக் குறைத்துக் கொள்ளவும்.
உடனிருப்பவர்களால் அலைச்சல்கள் ஏற்படும். கட்சி நிமிர்த்தமான உயர் அதிகாரிகளிடத்தில் சூழ்நிலைக்கேற்ப செயல்படுவது நல்லது.
வழிபாடு :
🙏செவ்வாய்க்கிழமைதோறும் முருகப்பெருமானை தீபம் ஏற்றி வழிபட மனக்கவலைகள் தீரும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.
குறிப்பு :
இங்கே கூறப்பட்டுள்ள அனைத்து சுப மற்றும் அசுப பலன்கள் யாவும் அவரவர்களுக்கு நடைபெறுகின்ற தசாபுத்திக்கேற்ப கிடைக்கும்.
எதிலும் பொறுப்புடனும், அன்புடனும் செயல்படும் ரிஷப ராசி அன்பர்களே..!
🎉பிறக்கின்ற ஆங்கில வருடப் புத்தாண்டில் இருக்கக்கூடிய கிரக நிலைகளின் அமைப்புக்கு ஏற்ப வாழ்க்கையில், இனி வரப்போகின்ற நாட்களில் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்கள் என்ன? என்பதை நாம் அறிந்து கொள்வோம்..!
🎉திட்டமிட்டுச் செயல்பட்டு எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டுப் பேசுவது நல்லது. குடும்ப உறுப்பினர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும்.
புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களால் சோர்வு உண்டாகும். திடீர் செலவுகளால் சேமிப்பு குறையும். வர்த்தக துறைகளில் எதிர்பாராத வாய்ப்புகள் கிடைக்கும். தனம் சார்ந்த விஷயங்களில் விவேகத்துடன் செயல்படவும்.
வாகன மாற்றம் சார்ந்த முயற்சிகள் கைகூடும். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். கூட்டுத் தொழிலில் விவேகத்துடன் செயல்படவும். பிரிந்து சென்றவர்கள் விரும்பி வருவார்கள்.
நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.
குணநலன்களில் மாற்றம் ஏற்படும். கல்லூரி பணிகளில் இருப்பவர்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். நுட்பமான சில விஷயங்களைத் தெளிவாகப் புரிந்து கொள்வீர்கள்.
உடல் ஆரோக்கியம் :
💪உடல் ஆரோக்கியம் சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். கொழுப்பு சார்ந்த உணவுகளைக் குறைத்துக் கொள்ளவும். தினமும் மூச்சுப் பயிற்சிகள் செய்வது நன்மையைத் தரும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். இறை சார்ந்த சிந்தனைகளை வளர்த்துக் கொள்வது மனதிற்கு அமைதியையும், புத்துணர்ச்சியையும் தரும். நீண்ட நேரம் கண்விழிப்பதைக் குறைத்துக் கொள்ளவும்.
பெண்கள் :
👩மனதில் எதையும் சமாளிக்க முடியும் என்ற தைரியமும், தன்னம்பிக்கையும் பிறக்கும். உடன்பிறந்தவர்களை பற்றிய புரிதல் மேம்படும். விருப்பமான சில ஆசைகளால் மனதளவில் புதிய அனுபவம் ஏற்படும்.
கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்துச் செல்லவும். பாகப் பிரிவினை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். சூழ்நிலை அறிந்து கருத்துகளைப் பகிரவும்.
எழுத்து சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை அமையும்.
மாணவர்கள் :
🎒மாணவர்களுக்கு புதிய மாற்றங்களின் மூலம் மதிப்பெண்களும், புரிதலும் அதிகரிக்கும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். ஆசிரியர்களுக்கு மதிப்பளித்துச் செயல்படவும்.
உயர் கல்வியில் இருந்துவந்த தடைகள் விலகும். குடும்பத்தில் போட்டி மனப்பான்மையைக் குறைத்துக் கொள்ளவும். கவர்ச்சியான விஷயங்களில் மனதினை செலுத்தாமல் இருக்கவும்.
உத்தியோகஸ்தர்கள் :
🎓உத்தியோகப் பணிகளில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய தொழில்நுட்பத் துறைகளில் புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் இருந்துவந்த சில ஆர்வமின்மையான சூழல் மறையும்.
சீருடை பணிகளில் இருப்பவர்கள் மற்றவர்களுக்கு மதிப்பளித்துச் செயல்படுவது நல்லது. நுட்பமான பேச்சுக்களின் மூலம் மதிப்பு மேம்படும். உத்தியோகத்தில் செய்யும் முயற்சிகளுக்கு உண்டான பலன்கள் சிறு அனுபவத்திற்குப் பின்பு கிடைக்கும்.
வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான வேலைவாய்ப்புகள் அமையும்.
வியாபாரிகள் :
👳வியாபாரத்தில் முன்னேற்றமான சூழல் அமையும். முயற்சிகளை அதிகப்படுத்துவதன் மூலம் லாபம் அதிகரிக்கும். மனசாட்சியின் அடைப்படையில் வியாபாரத்தை நடத்தவும்.
கைபேசி மற்றும் புதிய தொழில்நுட்பம் சார்ந்த பொருட்கள் மீதான முதலீடுகள் மேம்படும். நீண்ட நாட்களாக தடைபட்ட சில ஒப்பந்த வியாபாரங்கள் கைகூடும். கனிம வளம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும்.
கலைஞர்கள் :
💃கலைத்துறையில் இருப்பவர்கள் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். வித்தியமான குரல் பயிற்சிகளில் ஆர்வம் ஏற்படும்.
சமூகம் மீதான கண்ணோட்டத்தில் மாற்றம் உண்டாகும். அரசு வகையில் மதிப்பும், மரியாதையும் மேம்படும். இசைத் துறைகளில் சில நுட்பமான விஷயங்களைப் புரிந்து கொள்வீர்கள். ஓவியம் மற்றும் இலக்கியம் சார்ந்த பணிகளில் தனித்திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.
அரசியல்வாதிகள் :
👵சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு ஆதாயம் மேம்படும். நுட்பமான சில சிந்தனைகளின் மூலம் விருப்பமானதை நிறைவேற்றி கொள்வீர்கள். குடும்பத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும்.
.
சஞ்சலமான சிந்தனைகள் மனதில் மேம்படும். குதர்க்கமான விவாத சிந்தனைகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. எதிர்பார்த்திருந்த சில புதிய பொறுப்புகள் கிடைக்கும். வழக்கு தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும்.
வழிபாடு :
🙏வெள்ளிக்கிழமைதோறும் மகாலட்சுமியை வழிபட சிந்தனைகளில் தெளிவும், மனதளவில் புத்துணர்ச்சியும் உண்டாகும்.
குறிப்பு :
இங்கே கூறப்பட்டுள்ள அனைத்து சுப மற்றும் அசுப பலன்கள் யாவும் அவரவர்களுக்கு நடைபெறுகின்ற தசாபுத்திக்கேற்ப கிடைக்கும்.
எதிலும் புத்திசாலித்தனமாகச் செயல்படும் மிதுன ராசி அன்பர்களே..!
🎉பிறக்கின்ற ஆங்கில வருடப் புத்தாண்டில் இருக்கக்கூடிய கிரக நிலைகளின் அமைப்புக்கு ஏற்ப வாழ்க்கையில், இனி வரப்போகின்ற நாட்களில் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்கள் என்ன? என்பதை நாம் அறிந்து கொள்வோம்..!
🎉செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பழகும் தன்மைகளில் சில மாற்றங்கள் ஏற்படும். சிக்கலான பிரச்சனைகள் குறையும்.
ஆடம்பரமான செலவுகளைக் குறைத்துக் கொள்வீர்கள். தனம் சார்ந்த விஷயங்களில் விவேகத்துடன் செயல்படவும்.
நீண்ட ஆசைகளில் இருந்துவந்த தடைகள் விலகும். வியாபாரம் நிமிர்த்தமான முயற்சிகள் கைகூடும். தனவரவுகள் சாதகமாக அமையும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த வியாபாரத்தில் ஆதாயம் அடைவீர்கள்.
தம்பதிகளுக்குள் ஒற்றுமை மேம்படும்.
தந்தை வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். ஆராய்ச்சி திட்டங்களில் புதிய அனுபவம் ஏற்படும். நிலையான வருமானத்திற்குத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்வீர்கள்.
மனதிற்கு நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
எரிவாயு சார்ந்த தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவதற்கான கடன் உதவிகள் சாதகமாகும்.
விவசாயப் பணிகளில் ஆலோசனை பெற்று புதிய பயிர்களை பயிரிடவும். உத்தியோக பணிகளில் சில மாற்றங்கள் உண்டாகும். காப்பீடு துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய அறிமுகம் அதிகரிக்கும்.
உடல் ஆரோக்கியம் :
💪கண் பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சூரிய ஒளியில் சிறு நேரமாவது நடைப்பயிற்சி மேற்கொள்ளவும். செய்யும் செயல்களில் பதற்றமின்றி செயல்படவும்.
இயற்கையான அழகு சாதன பொருட்களைப் பயன்படுத்துவது நல்லது. பழுப்பு அரிசி, சாக்லேட், காலிஃபிளவர் மற்றும் பாதாம் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளவும். காலம் தவறி உணவு உண்பதைக் குறைத்துக் கொள்வது நல்லது.
பெண்கள் :
👩பெண்கள் கனிவான பேச்சுக்களின் மூலம் நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். நேரம் தவறிய பயணத்தைக் குறைத்துக் கொள்ளவும்.
தம்பதிகளுக்குள் ஒற்றுமை பிறக்கும். சிறு சிறு விஷயங்களைப் பெரிது படுத்தாமல் இருக்கவும். சக ஊழியர்களிடத்தில் இடைவெளியை கடைபிடிப்பது நல்லது. வாகனப் பயணத்தில் சரியான கோப்புகளை கையாளவும்.
பிடித்த உடைகள் மற்றும் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
மாணவர்கள் :
🎒மாணவர்களுக்கு கல்விப் பணியில் ஒருவிதமான ஆர்வமின்மை ஏற்படும். விளையாட்டுகளில் சகிப்புத் தன்மையுடன் செயல்படவும். வஞ்சனையான முயற்சிகளைத் தவிர்க்கவும்.
தந்தையிடம் மனம் விட்டுப் பேசுவது புரிதலை ஏற்படுத்தும். முயற்சிகளை அதிகப்படுத்துவதன் மூலம் உயர்கல்வியில் எண்ணியவை ஈடேறும். பாடங்களை ஒன்றுக்கு இரண்டு முறை படிப்பது நல்லது.
வேலை நிமிர்த்தமான சிந்தனைகள் மனதில் மேம்படும்.
உத்தியோகஸ்தர்கள் :
🎓கணிப்பொறி சார்ந்த தொழிலில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். செலவுகளின் தன்மைகளை அறிந்து மேற்கொள்வீர்கள்.
உயர் அதிகாரிகளைக் குறித்த கருத்துகளை வெளியிடுவதில் சிந்தித்துச் செயல்படவும். பணிபுரியும் இடத்தில் முயற்சிக்கு ஏற்ப புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
கல்வி தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் சூழ்நிலை அறிந்து செயல்படுவது நல்லது. நண்பர்களின் ஆலோசனைகளில் உண்மை நிலை அறிந்து முடிவுகளை எடுக்கவும். நீண்ட நாள் சேமிப்புகளிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.
வியாபாரிகள் :
👳தொழில் சார்ந்த முயற்சிகளில் உழைப்பு மேம்படும். நடைமுறைக்கு ஏற்ப தொழிலில் மாற்றம் செய்வது சார்ந்த சிந்தனைகள் மேம்படும். தனவரவுகள் சாதகமாக இருக்கும்.
பேராசையின்றி கிடைப்பதை வைத்து மனத்திருப்தி அடையவும். திட்டமிட்ட இலக்குகளை அடைவதில் உழைப்பும், தாமதமும் உண்டாகும். நாகரிகமான பேச்சுக்கள் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை மேம்படுத்தும்.
மளிகைக் கடை வியாபாரத்தில் லாபம் மேம்படும். பிரச்சாரம் செய்தல் போன்றவற்றால் அனுகூலமும், அனுபவமும் கிடைக்கும்.
கூட்டு வியாபாரத்தில் புரிதலும், ஒத்துழைப்பும் மேம்படும். இன்சூரன்ஸ் துறைகளால் ஆதாயம் ஏற்படும்.
கலைஞர்கள் :
💃கலைத் துறைகளில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். உங்கள் மீது இருந்த சிறு சிறு கிசுகிசுக்கள் மறையும். எளிமையான பழக்கவழக்கம் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும்.
வரைகலை துறைகளில் மாறுபட்ட அனுபவம் உண்டாகும். எழுத்து துறைகளில் உண்மை கருத்துகளை சூழ்நிலைக்கு ஏற்ப வெளிப்படுத்துவது நல்லது. ஆடை வடிவமைப்பு துறைகளில் இருப்பவர்களுக்குப் போட்டிகள் அதிகரிக்கும்.
அரசியல்வாதிகள் :
👵அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். கட்சி தோழர்களிடம் உண்மையுடன் இருக்கவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் விரயம் உண்டாகும்.
உயர் அதிகாரிகளிடத்தில் பொறுமை வேண்டும். எதிர்ப்புகளின் மூலம் ஏற்பட்டிருந்த தடைகள் விலகும். பேச்சுக்களில் இருக்கும் உறுதி செயல்களில் இருந்தால், பலதரப்பட்ட ஆதரவு கிடைக்கும்.
வழிபாடு :
🙏புதன்கிழமைதோறும் லட்சுமி நரசிம்மரை வழிபட உடல் ஆரோக்கியமும், உறவுகள் வழியில் ஒத்துழைப்பும் உண்டாகும்.
குறிப்பு :
இங்கே கூறப்பட்டுள்ள அனைத்து சுப மற்றும் அசுப பலன்கள் யாவும் அவரவர்களுக்கு நடைபெறுகின்ற தசாபுத்திக்கேற்ப கிடைக்கும்.
அனைவரிடத்திலும் அன்பு மனதுடன் செயல்படும் கடக ராசி அன்பர்களே..!
🎉பிறக்கின்ற ஆங்கில வருடப் புத்தாண்டில் இருக்கக்கூடிய கிரக நிலைகளின் அமைப்புக்கு ஏற்ப வாழ்க்கையில், இனி வரப்போகின்ற நாட்களில் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்கள் என்ன? என்பதை நாம் அறிந்து கொள்வோம்..!
🎉உடல் தோற்றத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். இனம்புரியாத சில சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். குடும்பத்தினருடன் புதுவிதமான இடங்களுக்குச் சென்று வருவீர்கள். உடன்பிறந்தவர்கள் இடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும்.
தடையான சில விஷயங்களால் ஆதாயம் ஏற்படும். விதண்டாவாத பேச்சுக்களைக் குறைத்துக் கொள்ளவும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் மாற்றம் உண்டாகும். பயணம் சார்ந்த விஷயங்களில் அனுபவம் ஏற்படும்.
கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். சகோதரர்கள் வழியில் விவேகத்துடன் செயல்படவும். வாகனங்களை விருப்பத்திற்கு ஏற்றவாறு மாற்றி அமைப்பீர்கள். திறமைக்கேற்ப மதிப்பு மேம்படும்.
எதிலும் உணர்ச்சிவசப்படாமல் பொறுமையுடன் செயல்படவும். தம்பதியர்களுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பொழுதுபோக்கு விஷயங்களால் ஆதாயம் அடைவீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.
உடல் ஆரோக்கியம் :
💪உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த சிக்கல் குறையும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை உண்டாகும். நீண்ட நேரம் ஒரே நிலையில் இருப்பதைக் குறைத்துக் கொள்ளவும். குரலின் தன்மையில் சில மாற்றங்கள் நேரிடலாம்.
முழங்கால் வலி, இடுப்பு வலி போன்றவை ஏற்படலாம். அதிகமாக காய்கறிகள், பழங்கள், தானியங்களை உணவில் சேர்த்துக் கொள்ளவும். மாவு வகையான உணவுகள் மற்றும் குளிர்ச்சியான உணவுகளைக் குறைத்துக் கொள்ளவும்.
பெண்கள் :
👩ஆசைகளால் புதிய அனுபவமும், சில முடிவுகளை எடுப்பதற்கான சூழலும் உண்டாகும். தந்தை வழியில் சில மாற்றமான சூழ்நிலைகள் அமையும். கடன் நிமிர்த்தமான செயல்களில் சிந்தித்துச் செயல்படவும்.
வாழ்க்கைத் துணைவர் வழியில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் சில விரயங்கள் ஏற்படும். உணர்ச்சிவசமான சிந்தனைகளைக் குறைத்துக் கொள்ளவும். குழந்தைகளின் வழியில் சுபச்செயல்களை முன்னின்று செய்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். அரசு சார்ந்த செயல்பாடுகளில் அலைச்சல்கள் உண்டாகும். உறவுகளின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள்.
மாணவர்கள் :
🎒கல்வியில் இருந்துவந்த சிக்கல்கள் குறையும். மேல்நிலை கல்வியில் முயற்சிக்கு ஏற்ப நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். உயர் கல்வி தொடர்பான விஷயங்களில் நன்கு சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. மறைமுகமான திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும்.
நண்பர்களைப் பற்றிய புரிதல் மேம்படும். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்கள் :
🎓பணிபுரியும் இடத்தில் இருந்துவந்த நெருக்கடிகள் விலகிச் செல்வதற்கான சூழ்நிலைகள் அமையும். பணி சார்ந்த முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். ஊதிய உயர்வு மற்றும் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். கடன் தவணைகளை முடிந்தளவு குறைத்துக் கொள்ளவும்.
வழக்குகள் தொடர்பான செயல்பாடுகளில் சாதகமான சூழல் ஏற்படும். தவறிய சில முக்கிய ஆவணங்கள் மீண்டும் கிடைக்கும்.
வியாபாரிகள் :
👳வியாபார ஸ்தலங்களை விருத்தி செய்வதற்கான சூழ்நிலைகள் அமையும். விவசாய மற்றும் உணவு சார்ந்த பணிகளில் மேன்மை உண்டாகும். வெளியாட்களை பற்றிய புரிதல் மேம்படும்.
பயனற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். மனை மற்றும் பத்திரம் சார்ந்த பிரிவுகளில் ஆலோசனை பெற்று கொடுக்கல், வாங்கலை மேற்கொள்ளவும். புதிய வியாபாரம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும்.
இணைய வர்த்தக முதலீடுகளைக் குறைத்துக் கொள்ளவும். கூட்டாளிகளின் வழியில் அனுசரித்து நடந்து கொள்ளவும். மனை கொடுக்கல், வாங்கல் பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்.
கலைஞர்கள் :
💃கலை சார்ந்த துறைகளில் காலத்திற்கு ஏற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எழுத்து மற்றும் ஓவியம் சார்ந்த துறைகளில் இருக்கக்கூடியவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்.
நாட்டியம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு மதிப்பு மேம்படும். தற்காப்புக் கலை சார்ந்த கலைஞர்களுக்கு மாறுபட்ட அனுபவமும், சூழலும் அமையும்.
மறைமுகமான சில போட்டிகளை வெற்றி கொள்வீர்கள்.
அரசியல்வாதிகள் :
👵அரசியல்வாதிகளின் செயல்பாடுகளில் சில மாற்றங்கள் ஏற்படும். தொகுதி மக்களிடத்தில் பாகுபாடின்றி செயல்படுவீர்கள். மனதளவில் இருந்துவந்த பேராசை படிப்படியாகக் குறையும்.
கட்சியில் எதிர்பார்த்த சில பொறுப்புகள் காலதாமதமாக கிடைக்கும். எதிராகச் செயல்பட்டவர்கள் விலகிச் செல்வதற்கான காலகட்டம் உண்டாகும். எதிர்காலம் குறித்த சிந்தனைகள் மனதளவில் மேம்படும். பேச்சுக்களில் கனிவும், உங்கள் மீதான நம்பிக்கையும் அதிகரிக்கும்.
வழிபாடு :
🙏சனிக்கிழமைதோறும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி ஆஞ்சநேயரை வழிபட வரவுகளில் இருந்துவந்த தடைகள் மற்றும் குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும்.
குறிப்பு :
இங்கே கூறப்பட்டுள்ள அனைத்து சுப மற்றும் அசுப பலன்கள் யாவும் அவரவர்களுக்கு நடைபெறுகின்ற தசாபுத்திக்கேற்ப கிடைக்கும்.
எதிலும் முன்னின்று செயல்படும் சிம்ம ராசி அன்பர்களே..!
🎉பிறக்கின்ற ஆங்கில வருடப் புத்தாண்டில் இருக்கக்கூடிய கிரக நிலைகளின் அமைப்புக்கு ஏற்ப வாழ்க்கையில், இனி வரப்போகின்ற நாட்களில் ஏற்படும் சுப மற்றும் பலன்கள் என்ன? என்பதை நாம் அறிந்து கொள்வோம்..!
🎉வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சிந்தித்துச் செயல்படுவது நல்லது. பாதியில் நின்ற கட்டிடம் தொடர்பான பணிகளை நிறைவு செய்வீர்கள். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள்.
சிறு மற்றும் குறுந்தொழில் தொடர்பான கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். ஆடம்பரமான சிந்தனைகளைத் தவிர்ப்பது நல்லது. ஜாமீன் விஷயங்களில் பொறுமை வேண்டும்.
மனதில் புதுவிதமான சிந்தனைகள் மலரும். தாய்மாமன் வழியில் அனுசரித்துச் செல்லவும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். வெளியூர் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். தந்தைவழி தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
கலை சார்ந்த துறைகளில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். நண்பர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். புதிய விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். மனதில் நினைத்த காரியங்கள் கைகூடும்.
வீட்டின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நீண்ட தூரப் பயணங்களால் செலவு அதிகரிக்கும். எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. ஆடம்பரமான பேச்சுகளைத் தவிர்ப்பது தெளிவை ஏற்படுத்தும். சாதுரியமான செயல்பாடுகளின் மூலம் மதிப்பு மேம்படும்.
தடைபட்ட பணிகளைச் செய்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
உடல் ஆரோக்கியம் :
💪உடல் ஆரோக்கியம் தொடர்பான செலவுகள் குறையும். உடற்பயிற்சி சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். உடலின் தேவைக்கு ஏற்ப தண்ணீரைப் பருகவும். பொட்டாசியம் மற்றும் கால்சியம் மிகுந்த உணவுகளை எடுத்துக் கொள்ளவும்.
பெண்கள் :
👩புதுவிதமான இடங்களுக்குச் சென்று வருவதற்கான சூழல் அமையும். பேச்சுக்களில் நிதானமும், பொறுமையும் வேண்டும். பாகப்பிரிவினைகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் கிடைக்கும்.
நபர்களின் தன்மைகளை அறிந்து பழக்கம் கொள்ளவும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். புதிய முயற்சிகளில் சாதகமான சூழல் உண்டாகும்.
தம்பதிகளுக்கு இடையே புரிதல் அதிகரிக்கும்.
மாணவர்கள் :
🎒மாணவர்களுக்கு அடிப்படை கல்வியில் இருந்துவந்த குழப்பம் விலகும். பெரியோர்களின் ஆலோசனைகள் மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டுதல் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தும்.
குடியுரிமை சார்ந்த பிரச்சனைகள் குறையும். ஆராய்ச்சி கல்வியில் சாதகமான பலன்கள் கிடைக்கும். வெளியூர் மற்றும் வெளிநாடு சென்று படிப்பது சார்ந்த எண்ணங்கள் சிலருக்கு கைகூடும்.
உயர்கல்வியில் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெறுவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் :
🎓உத்தியோகப் பணிகளில் வரவுகள் மேம்படும். சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பம் நேரிடும். விவேகமான செயல்பாடுகள் நற்பெயரை ஏற்படுத்திக் கொடுக்கும்.
அளவான பேச்சுக்கள் உங்கள் மீதான மதிப்பை மேம்படுத்தும். சக ஊழியர்களிடத்தில் பொறுமையைக் கையாளவும். மற்றவர்களுக்கு ஜாமீன் அளிப்பதைக் குறைத்துக் கொள்ளவும். பணி மாற்றச் சிந்தனைகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும்.
வியாபாரிகள் :
👳வியாபாரப் பணிகளில் முன்னேற்றமான சூழல் அமையும். புதிய பயணங்களால் நினைத்த காரியங்கள் நிறைவேறும். அரசு வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். நுட்பமான சில விஷயங்களைப் புரிந்து கொள்வதால் ஆதாயத்தை மேம்படுத்துவீர்கள்.
கூட்டாளிகளின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். தினசரி வர்த்தகத்தில் சூழ்நிலை அறிந்து முதலீடுகளை மேற்கொள்ளவும். அலங்காரம் மற்றும் மலர் வியாபாரத்தில் லாபம் மேம்படும். கலைப் பொருட்கள் விற்பனையில் புதுமையான விஷயங்களைக் கையாண்டு மேன்மை அடைவீர்கள்.
கலைஞர்கள் :
💃கலை சார்ந்த துறைகளில் புதிய முயற்சிக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். சிறு தூரப் பயணங்களால் ஆதாயம் மேம்படும். நீண்ட தூரப் பயண வாய்ப்புகளும் சிலருக்கு கைகூடிவரும். எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்பு குறையும்.
அதிகார பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகமும், ஒத்துழைப்பும் கிடைக்கும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். எதிர் பாலின மக்கள் விஷயங்களில் தலையிடாமல் இருக்கவும். கலை சார்ந்த துறைகளில் போட்டிகள் மேம்படும்.
அரசியல்வாதிகள் :
👵அரசியல்வாதிகளுக்கு தோற்றப்பொலிவில் மாற்றம் ஏற்படும். நுட்பமான சிந்தனைகளால் ஆதாயத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். மறைமுகமான சில வருமானங்கள் மேம்படும்.
அவ்வப்போது சிறு சிறு வதந்திகளும், வழக்கு சார்ந்த பிரச்சனைகளும் ஏற்படும். தொண்டர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவது நல்ல மதிப்பையும், மரியாதையையும் ஏற்படுத்திக் கொடுக்கும். எதிலும் திருப்தி இல்லாத சூழ்நிலை ஏற்படும்.
வழிபாடு :
🙏செவ்வாய்க்கிழமைதோறும் நல்லெண்ணெய் தீபமேற்றி துர்க்கை அம்மனை வழிபாடு செய்துவர மனதளவில் இருந்துவந்த குழப்பமும், சஞ்சலமும் குறைந்து தெளிவு பிறக்கும்.
குறிப்பு :
இங்கே கூறப்பட்டுள்ள அனைத்து சுப மற்றும் அசுப பலன்கள் யாவும் அவரவர்களுக்கு நடைபெறுகின்ற தசாபுத்திக்கேற்ப கிடைக்கும்.
புதுமையான சிந்தனைகள் உடைய கன்னி ராசி அன்பர்களே..!
🎉 பிறக்கின்ற ஆங்கில வருடப் புத்தாண்டில் இருக்கக்கூடிய கிரக நிலைகளின் அமைப்புக்கு ஏற்ப வாழ்க்கையில், இனி வரப்போகின்ற நாட்களில் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்கள் என்ன? என்பதை நாம் அறிந்து கொள்வோம்..!
🎉 மனதில் தைரியம் உண்டாகும். பேச்சுக்களில் ஆளுமைத் திறன் மேம்படும். குறுகிய தூரப் பயணங்களால் விருப்பம் நிறைவேறும். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள்.
எந்த ஒரு செயலிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. நுண் கலைகளில் புதுமைகளை ஏற்படுத்துவீர்கள். அரசு வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். பணிபுரியும் இடத்தில் ஆதரவு கிடைக்கும்.
இணைய வர்த்தகத்தில் சிந்தித்துச் செயல்படவும். திறமைக்குண்டான உயர்வு கிடைக்கும்.
உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. புதிய வீடு கட்டுவது சார்ந்த சிந்தனைகள் மேம்படும். செங்கல் மற்றும் மணல் விற்பனையில் லாபம் அதிகரிக்கும்.
உறவினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வித்தியாசமான சிந்தனைகளும், அதற்கான முயற்சிகளும் அதிகரிக்கும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். பணி நிமிர்த்தமான பயணங்கள் கைகூடும். சூழ்நிலைகளுக்கு ஏற்ப அனுசரித்துச் செல்லவும்.
உடல் ஆரோக்கியம் :
🎉 உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். தூக்கமின்மை சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். உடலளவில் இருந்துவந்த அசதிகள் மற்றும் சோர்வுகள் படிப்படியாகக் குறையும்.
முழங்கால் பிரச்சனைகள் அவ்வப்போது தோன்றி மறையும். காய்கறி மற்றும் கீரை சார்ந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வது நல்லது.
பெண்கள் :
🎉 பெண்கள் முடிந்து போன சில விஷயங்களை எண்ணாமல் இருப்பது நல்லது. முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் அமையும். தனவரவுகள் தாராளமாக இருக்கும். பூர்வீக சொத்துக்களின் வழியில் அலைச்சல்கள் ஏற்படும்.
கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். குழந்தைகளின் எண்ணங்களைப் புரிந்து கொள்வதற்கான தருணங்கள் உண்டாகும்.
மாணவர்கள் :
🎉 மாணவர்கள் கல்வியில் ஆர்வத்துடன் படிப்பது நல்ல மதிப்பெண்களை பெற வழிவகுக்கும். விளையாட்டு விஷயங்களில் பொழுதுகளைக் கழிப்பீர்கள்.
உயர்கல்வியில் சிறு சிறு குழப்பங்கள் தோன்றி மறையும். ஆராய்ச்சி சார்ந்த விஷயங்களில் அலைச்சல்களுக்குப் பின்பே அனுகூலம் ஏற்படும். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆலோசனைகளுக்கு மதிப்பளித்துச் செயல்படவும்.
உத்தியோகஸ்தர்கள் :
🎉 உத்தியோகப் பணிகளில் ஆதாயமான சூழல் உண்டாகும். முயற்சிக்கு ஏற்ப வருவாய் உயர்வு அமையும். உபரி வருமான முயற்சிகள் கைகூடிவரும்.
தற்பெருமைக்காக செலவு செய்வதைக் குறைத்துக் கொள்ளவும். நெருக்கமானவர்களிடம் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் எதிர்பார்த்த சில அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும்.
வியாபாரிகள் :
🎉 வியாபாரப் பணிகளில் சற்று பொறுமையுடன் செயல்படவும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். வாடிக்கையாளர்களின் வழியில் அனுசரித்துச் செல்வதன் மூலம் ஆதாயத்தை மேம்படுத்த முடியும்.
அபிவிருத்திக்கான செயல்களில் ஆலோசனை பெற்று மேற்கொள்ளவும். இடமாற்ற சிந்தனைகள் மனதளவில் மேம்படும். வங்கிக் கடன்கள் சிறு தாமதத்திற்கு பின்பு கிடைக்கும்.
கலைஞர்கள் :
🎉 கலைத்துறையில் அனுகூலமான சூழல் ஏற்படும். வரவேண்டிய வரவுகள் காலதாமதமாக கிடைக்கும். சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும். மூத்த கலைஞர்களின் ஆலோசனைகள் நல்ல மதிப்பையும், நிபுணத்துவத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும்.
சக கலைஞர்களிடம் அனுசரித்துச் செல்வது பகைமையைத் தவிர்க்கும்.
அரசியல்வாதிகள் :
🎉 அரசியல்வாதிகள் குதர்க்கமான சிந்தனைகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. வழக்கு விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். நெருக்கமானவர்களின் மூலம் புதுவிதமான கண்ணோட்டமும், அனுபவமும் ஏற்படும்.
மற்றவர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவதால் நல்ல மதிப்பும், நற்பலனும் கிடைக்கும்.
வழிபாடுகள் :
🙏 பௌர்ணமிதோறும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி குலதெய்வத்தை வழிபட நினைத்த காரியங்கள் கைகூடும். தடைபட்ட பணிகள் முடிவுபெறும்.
எதிலும் துல்லியமாகச் செயல்படும் துலாம் ராசி அன்பர்களே..!
🎉 பிறக்கின்ற ஆங்கில வருடப் புத்தாண்டில் இருக்கக்கூடிய கிரக நிலைகளின் அமைப்புக்கு ஏற்ப வாழ்க்கையில், இனி வரப்போகின்ற நாட்களில் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்கள் என்ன? என்பதை நாம் அறிந்து கொள்வோம்..!
🎉 மனதிற்கு நெருக்கமானவர்களால் புதிய அனுபவம் உண்டாகும். மனதைக் குழப்பிய சில விஷயங்களுக்குத் தெளிவு பிறக்கும். மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய வியூகங்கள் கைகொடுக்கும். வெளியூர் பயணங்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். உடல் தோற்றப்பொலிவில் சில மாற்றங்கள் ஏற்படும். வருமான ஆதாரங்களை மேம்படுத்துவீர்கள். கனிவான பேச்சுக்களால் அனுகூலமான சூழல் உண்டாகும்.
புதிய நபர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய பயிற்சிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். ஆன்மிக சுற்றுலா செல்வதற்கான சில வாய்ப்புகள் ஏற்படும். எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். கற்பனைகளை விட காரியங்களில் ஈடுபடுவது மேன்மையை ஏற்படுத்தும். பொறுப்பான சில காரியங்களின் மூலம் மதிப்பு மேம்படும். இளைய சகோதரரிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
நீண்ட நாட்களாக எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் திடீர் திருப்பங்கள் உண்டாகும். அரசு தொடர்பான உதவிகள் கிடைக்கும். கமிஷன் சார்ந்த வியாபாரம் கைகொடுக்கும்.
உடல் ஆரோக்கியம்
🎉 உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நீண்ட நேரம் கண்விழிப்பது மற்றும் கைபேசி பார்ப்பதைக் குறைத்துக் கொள்ளவும். பற்கள் மற்றும் இடுப்பு வலி சார்ந்த பிரச்சனைகள் குறையும். நார்ச்சத்து மிகுந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளவும்.
பெண்கள்
🎉 பெண்களுக்கு கனிவான பேச்சுக்கள் நல்ல மதிப்பை உருவாக்கிக் கொடுக்கும். குடும்பத்தில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பொன், பொருள்கள் மீது ஆர்வம் ஏற்படும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது சார்ந்த எண்ணங்கள் கைகூடிவரும். மனதளவில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். மூத்த உடன்பிறப்புகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்துச் செல்லவும்.
மாணவர்கள்
🎉 மாணவர்களுக்கு கல்வியில் மாற்றமான வாய்ப்புகளும், சூழ்நிலைகளும் ஏற்படும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். வெளியூர் மற்றும் வெளிநாடு சென்று படிப்பதற்கான உதவிகள் கிடைக்கும். புதுவிதமான கல்வி சார்ந்த துறைகளில் ஈர்ப்பு உண்டாகும்.
உத்தியோகஸ்தர்கள்
🎉 உத்தியோகப் பணிகளில் தனித்திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். நவீன தொழில் நுட்பங்களால் ஆதாயம் அடைவீர்கள். உயர் அதிகாரிகளிடத்தில் நன்மதிப்பு ஏற்படும். சக ஊழியர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்வதால் ஆதாயமான பலன்கள் உண்டாகும். பணி சார்ந்த புதிய மாற்றம் ஏற்படும். திடீர் செலவுகளால் கையிருப்புகள் குறையும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் உண்டாகும்.
வியாபாரிகள்
🎉 வியாபாரப் பணிகளில் முன்னேற்றமான சூழல் ஏற்பட்டாலும் அதற்கான உழைப்பும் அதிகமாக இருக்கும். எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. பயனற்ற விவாதங்களைக் குறைத்துக் கொள்ளவும். ஜாமீன் சார்ந்த விஷயங்களில் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. அரசு வழியில் எதிர்பார்த்த சில உதவிகள் விரயங்களுக்குப் பின்பு கிடைக்கும். அபிவிருத்திக்கான சூழல் சாதகமாக அமையும்.
கலைஞர்கள்
🎉 கலைத்துறைகளில் சில நுட்பமான விஷயங்களைப் புரிந்து கொள்வீர்கள். செயல்பாடுகளில் சோர்வின்றி செயல்பட்டால் மதிப்பும், பரிசும் கிடைக்கும். எதிர்பார்த்த வரவுகளில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். விலகிச் சென்றவர்களை பற்றிய சிந்தனைகள் தோன்றி மறையும். மூத்த கலைஞர்களுடன் அனுசரித்துச் செல்லவும். ஆரோக்கியம் சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். நண்பர்களின் வழியில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அலைபாயும் சிந்தனைகளால் சில குழப்பம் தோன்றி மறையும்.
அரசியல்வாதிகள்
🎉 அரசியல்வாதிகள் கட்சிப் பணிகளில் பொறுப்புடன் செயல்பட்டால் முன்னேற்றமான வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொள்ள முடியும். எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும், இருப்பினும் அதற்கான ஆதாரங்கள் பின்னாளில் கிடைக்கும். பேராசையின்றி சேவை மனப்பான்மையோடு செயல்பட்டால் நல்ல மதிப்பும், பலன்களும் கிடைக்கும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் ஏற்படும்.
வழிபாடுகள்
🙏 செவ்வாய்க்கிழமைதோறும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி முருகப்பெருமானை வழிபாடு செய்து வர முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் விலகும். சுபகாரிய எண்ணங்கள் கைகூடும்.
சுறுசுறுப்பாகவும், துடிப்புடனும் செயல்படும் விருச்சிக ராசி அன்பர்களே..!
🎉பிறக்கின்ற ஆங்கில வருடப் புத்தாண்டில் இருக்கக்கூடிய கிரக நிலைகளின் அமைப்புக்கு ஏற்ப வாழ்க்கையில், இனி வரப்போகின்ற நாட்களில் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்கள் என்ன? என்பதை நாம் அறிந்து கொள்வோம்..!
🎉மனதில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். இழுபறியான முயற்சிகள் கைகூடும். முயற்சிகளில் இருந்துவந்த தடைகளை களைவீர்கள். அனுபவம் உள்ளவர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும்.
எதிலும் பொறுமையுடன் செயல்படவும். பாகப் பிரிவினைகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குழந்தைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். பொழுதுபோக்கு செயல்களில் நெருக்கடியான சூழல் ஏற்படும். சூடு சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். தவறிய நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். குணநலன்களில் மாற்றங்கள் ஏற்படும். ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.
வெளியூர் தொடர்பான பயணங்களை மேற்கொள்வீர்கள். கொழுப்பு சார்ந்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. விவசாயப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். கட்டிட வடிவமைப்பு சார்ந்த தொழிலில் அனுகூலம் ஏற்படும். ஊடகத் துறைகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். ஒருதலையான விஷயங்களில் மாற்றமான சூழல் அமையும். வித்தியாசமான செயல்களின் மீது ஆர்வம் உண்டாகும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலைகள் ஏற்படும்.
உடல் ஆரோக்கியம்
🎉உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த மந்தத்தன்மைகள் குறையும். கடினமான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். அடிவயிற்றுப் பகுதியில் சிறு சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். பழவகைகள் மற்றும் துவர்ப்பு சுவை கொண்ட உணவுகளை உணவுகளில் சேர்த்துக் கொள்வது நல்லது.
பெண்கள்
🎉பெண்களுக்கு ஆடம்பரமான சிந்தனைகள் மற்றும் பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். புதிய நபர்களில் அறிமுகத்தால் சில மாற்றமான தருணங்கள் அமையும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பாராத சில உதவிகள் தேவைக்கேற்ப கிடைக்கும். குடும்ப விஷயங்களைப் பகிர்வதைத் தவிர்ப்பது நல்லது. காரசாரமான விவாதங்களைக் குறைத்துக் கொள்ளவும்.
மாணவர்கள்
🎉மாணவர்கள் பேச்சுக்களில் கவனத்துடன் இருக்கவும். உயர்நிலைக் கல்வியில் அலைச்சலும் புரிதலின்மையும் நேரிடலாம். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். கணிதத்துறை சார்ந்த மாணவர்கள் ஒன்றுக்கு இரண்டு முறை படிப்பது நல்லது. கணிப்பொறியியல் சார்ந்த துறைகளில் சில நுட்பங்களைப் புரிந்து கொள்வீர்கள்.
உத்தியோகஸ்தர்கள்
🎉உத்தியோகத்தில் இருந்துவந்த சில சங்கடமான சூழல் மறையும். மறதி தொடர்பான பிரச்சனைகள் குறையும். பணி நிமிர்த்தமான சில பயணங்களால் ஆதாயம் அதிகரிக்கும். உடனிருப்பவர்களிடம் தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். அலுவல் பணியில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பும், அறிமுகமும் ஏற்படும். தனித்திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.
வியாபாரிகள்
🎉வியாபாரப் பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மைகள் குறையும். சந்தை நிலவரங்களை அறிந்து அதற்கு தகுந்தாற் போல் செயல்படுவீர்கள். லாபத்தை தனியே எடுத்து வைப்பது நல்லது. எதிலும் பேராசையின்றி அளவுடன் இருந்தால் மனநிம்மதி ஏற்படும். பொருட்களில் தரங்களை அறிந்து கொள்முதல் செய்யவும். புதிய முதலீடு சார்ந்த சிந்தனைகள் மேம்படும்.
கலைஞர்கள்
🎉கலைத்துறையில் புதுவிதமான தேடல் ஏற்படும். எந்த ஒரு செயலையும் திட்டமிட்டு செயல்படுத்துவீர்கள். வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். மறைமுகமான சில எதிர்ப்புகளால் போட்டியும் புதிய அனுபவமும் கிடைக்கும். ஆடம்பரமான சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவும். உறவுகள் மூலம் புதிய கண்ணோட்டங்கள் ஏற்படும்.
அரசியல்வாதிகள்
🎉அரசியல்வாதிகள் சூழ்நிலையறிந்து கருத்துகளை வெளிப்படுத்தவும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் எண்ணங்களை அறிந்து அதற்கு தகுந்தாற் போல வியூகங்களை அமைத்து செயல்படுவீர்கள். சிறு சிறு வதந்திகள் அவ்வப்போது தோன்றி மறையும். தனவரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழல் அமையும். பொய்யான வாக்குறுதிகளை குறைத்துக் கொள்வது நல்லது.
வழிபாடுகள்
🙏 புதன்கிழமைதோறும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி பெருமாளை வழிபாடு செய்து வர தொழில் சார்ந்த தடைகள் விலகும். சேமிப்புகள் அதிகரிக்கும்.
🌟பிறக்கின்ற ஆங்கில வருடப் புத்தாண்டில் இருக்கக்கூடிய கிரக நிலைகளின் அமைப்புக்கு ஏற்ப வாழ்க்கையில், இனி வரப்போகின்ற நாட்களில் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்கள் என்ன? என்பதை நாம் அறிந்து கொள்வோம்..!
🌟குடும்பத்தில் உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு மேம்படும். எதிலும் துரிதமாகச் செயல்படுவீர்கள். குழந்தைகளை பற்றிய சிந்தனைகள் மேம்படும். பூர்வீக சொத்துக்களில் சில மாற்றத்தைச் செய்வீர்கள். தேவையில்லாமல் அடுத்தவர் காரியங்களில் தலையிடாதீர்கள். சமூகப் பணிகளில் விவேகத்துடன் செயல்படவும்.
மனதில் நினைத்திருந்த ஒரு சில ஆசைகள் நிறைவேறும். பயனற்ற சிந்தனைகளைத் தவிர்ப்பது நல்லது. ஏற்றுமதி துறையில் புதுமையான அனுபவம் ஏற்படும். பொருளாதார முன்னேற்றம் அதிகரிக்கும். மறைமுகமான திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். ஆடம்பரமான சிந்தனைகளால் சேமிப்பு குறையும். நடைமுறைக்குத் தகுந்த விதத்தில் வாகனங்களை மாற்றி அமைப்பீர்கள்.
நரம்பு சார்ந்த இன்னல்கள் ஏற்பட்டு நீங்கும். விசா தொடர்பான பிரச்சனைகள் குறையும். வாக்குறுதிகள் அளிக்கும் போது சூழ்நிலை அறிந்து செயல்படவும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். குடும்ப உறுப்பினர்களிடம் மனம் விட்டுப் பேசுவது புரிதலை மேம்படுத்தும்.
உடல் ஆரோக்கியம் :
💪உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். உணர்ச்சிவசமான பேச்சுக்களைக் குறைத்துக் கொள்ளவும். அவ்வப்போது ஒற்றைத் தலைவலி சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். எதிலும் சிக்கனமாகச் செயல்படுவது பல பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கும்.
பெண்கள் :
👩பெண்களுக்கு பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். கடினமான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். வாகனப் பயணங்களில் ஆர்வம் ஏற்படும். வாழ்க்கைத் துணைவர் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. மறைமுகமான சில விஷயங்களை எளிதில் புரிந்து கொள்வீர்கள்.
மாணவர்கள் :
🎒மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த குழப்பமும், தயக்கமும் படிப்படியாகக் குறையும். புதிய ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் ஆர்வம் ஏற்படும். எதிர்காலம் சார்ந்த தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். விளையாட்டுத் துறைகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் :
🎓உத்தியோகப் பணிகளில் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும். சஞ்சலமான சிந்தனைகளைத் தவிர்த்துக் கொள்வது நல்லது. இடமாற்றம் சார்ந்த விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். உயர் அதிகாரிகளிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்வதால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். அலுவலகம் சார்ந்த ரகசியங்களில் விவேகத்துடன் செயல்படவும். சக ஊழியர்களால் பொருளாதாரம் சார்ந்த உதவிகள் கிடைக்கும்.
வியாபாரிகள் :
👳வியாபாரப் பணிகளில் தகுந்த ஆலோசனை பெற்று புதிய முதலீடுகளை மேற்கொள்ளவும். எதிர்பாராத சில தடைகளால் தாமதமும், அலைச்சலும் ஏற்படும். நடைமுறை வியூகங்களை அறிந்து செயல்படவும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். அடிக்கடி பயணங்களை மேற்கொள்வதற்கான சூழல் உண்டாகும். தொழில் நிமிர்த்தமான சில தந்திரங்களைப் புரிந்து கொள்வீர்கள்.
கலைஞர்கள் :
💃கலை சார்ந்த துறைகளில் புதுவிதமான அனுபவங்களைப் பெறுவீர்கள். எதிர்பார்த்த சில வரவுகள் தாமதமாக கிடைக்கும். அளவான பேச்சுக்கள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். வெளிவட்டாரத்தில் திறமைக்கு உண்டான மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். கடைசி நிமிடத்தில் நினைத்த பணிகளில் சில மாற்றங்கள் ஏற்படும். சுபகாரியம் தொடர்பான விரயங்கள் உண்டாகும். வீடு, மனை வாங்குவதில் ஆர்வம் ஏற்படும்.
அரசியல்வாதிகள் :
💁அரசியல்வாதிகள் கட்சி சார்ந்த பணிகளில் விவேகத்தோடு செயல்படவும். உடனிருப்பவர்களிடம் முன் கோபமின்றி செயல்படுதல் நல்லது. பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களால் உடலில் ஒருவிதமான அசதி உண்டாகும். ஆதாரம் இல்லாத கருத்துகள் கூறுவதைத் தவிர்ப்பது நல்லது.
வழிபாடுகள் :
🙏செவ்வாய்க்கிழமைதோறும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி முருகப்பெருமானை வழிபாடு செய்துவர சிந்தனைகளில் தெளிவும், மனதளவில் உத்வேகமும் பிறக்கும்.
விவேகத்துடன் செயல்பட்டு வெற்றி வாகை சூடும் மகர ராசி அன்பர்களே..!
🌟பிறக்கின்ற ஆங்கில வருடப் புத்தாண்டில் இருக்கக்கூடிய கிரக நிலைகளின் அமைப்புக்கு ஏற்ப வாழ்க்கையில், இனி வரப்போகின்ற நாட்களில் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்கள் என்ன? என்பதை நாம் அறிந்து கொள்வோம்..!
🌟முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் பிறக்கும். உறவுகளுடன் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. சோம்பலால் சில செயல்களில் தாமதம் ஏற்படும். மறதி சார்ந்த பிரச்சனைகள் தோன்றி மறையும். எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் தன்னம்பிக்கை உண்டாகும். சுகபோக விஷயங்களில் நாட்டம் ஏற்படும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும்.
உடன்பிறந்தவர்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். பலதரப்பட்ட மக்களின் தொடர்பு கிடைக்கும். வழக்கு சார்ந்த பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். மனை சார்ந்த செயல்களில் ஆதாயம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். தொழில் நிமிர்த்தமான புதிய சிந்தனைகள் உண்டாகும். அரசு தொடர்பான பணிகளில் காலதாமதம் ஏற்படும்.
உடல் ஆரோக்கியம் :
💪உடல் ஆரோக்கியத்தில் அவ்வப்போது சிறு சிறு இன்னல்கள் ஏற்பட்டு நீங்கும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். பழைய நினைவுகளால் ஒருவிதமான பதற்றம் ஏற்பட்டு நீங்கும். தியானம் மற்றும் சிறு அளவிலான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளவும். வாகன பழுதுகளை அவ்வப்போது சரி செய்து கொள்ளவும்.
பெண்கள் :
👩பெண்களுக்கு சகோதரர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சிறு தூரப் பயணங்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் அலைச்சலுக்கு பின்பு கைகூடும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். நுட்பமான பணிகளைத் துரிதமாகச் செய்து முடிப்பீர்கள். செல்வச்சேர்க்கை தொடர்பான எண்ணங்கள் கைகூடும். வியாபாரப் பணிகளில் லாபகரமான வாய்ப்புகள் அமையும்.
மாணவர்கள் :
🎒மாணவர்களுக்கு விளையாட்டு தொடர்பான விஷயங்களில் புதிய அனுபவம் ஏற்படும். உயர்கல்வியில் சிறு சிறு குழப்பம் தோன்றி மறையும். கணிதம் சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். நபர்களின் தன்மை அறிந்து நட்பு கொள்ளவும். மறதி தொடர்பான சிக்கல் தோன்றி மறையும். ஆராய்ச்சி பணி சார்ந்த வெளியூர் பயண வாய்ப்புகள் கைகூடும்.
உத்தியோகஸ்தர்கள் :
🎓உத்தியோகஸ்தர்களுக்கு வேலை நிமிர்த்தமான முயற்சிகள் கைகூடும். எழுத்து சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய பொறுப்புகளின் மூலம் மதிப்பு மேம்படும். சக பணியாளர்களிடம் பொறுமையைக் கையாளவும். மற்றவர்களை பற்றிய கருத்துகளில் கவனம் வேண்டும். அறிமுக நபர்களிடம் தனிப்பட்ட விஷயங்களைப் பகிர்வதைத் தவிர்க்கவும். வெளியூர் பணி வாய்ப்புகளில் சிந்தித்துச் செயல்படவும்.
வியாபாரிகள் :
👳வியாபாரப் பணிகளில் உழைப்புக்கு ஏற்ப லாபமும், முன்னேற்றமும் உண்டாகும். வேலையாட்களிடம் அனுசரித்துச் செல்வதன் மூலம் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் ஆலோசனை வேண்டும். கூட்டாளிகளின் எண்ணங்களைப் புரிந்து செயல்படுவீர்கள். கூட்டாளிகளிடம் பொறுமையை கடைபிடிப்பது நல்லது. அரசு தொடர்பான பணிகளில் சூழ்நிலைக்கேற்ப செயல்படவும்.
கலைஞர்கள் :
💃கலை சார்ந்த துறையில் புதுவிதமான மாற்றங்களை செய்வீர்கள். வாழ்க்கைத் துணைவரின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். அரசு வழியில் சில உதவிகள் கிடைக்கும். காரசாரமான பேச்சுக்களைக் குறைத்துக் கொள்ளவும். வரவுக்கு ஏற்ப செலவுகள் உண்டாகும். ஆடம்பரமான சிந்தனைகளைக் குறைத்துக் கொள்ளவும். பெருந்தன்மையான செயல்பாடுகளால் மதிப்பு மேம்படும்.
அரசியல்வாதிகள் :
💁அரசியல்வாதிகள் சாதுரியமான பேச்சுக்களின் மூலம் புதிய மாற்றங்களை உருவாக்குவீர்கள். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் கிடைக்கும். திறமைக்கு ஏற்ப செல்வாக்கும், பாராட்டுகளும் அதிகரிக்கும். எதிராக இருப்பவர்களை அறிந்து கொள்வீர்கள். வழக்கு பணிகளில் சில மாற்றமான சூழல் ஏற்படும்.
வழிபாடுகள் :
🙏வெள்ளிக்கிழமைதோறும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி லட்சுமி நரசிம்மரை வழிபாடு செய்துவர செய்யும் முயற்சிகளில் உள்ள தடைகள் நீங்கும்.
அமைதியாக இருந்து வேண்டியதை நிறைவேற்றிக் கொள்ளும் கும்ப ராசி அன்பர்களே..!
🌟பிறக்கின்ற ஆங்கில வருடப் புத்தாண்டில் இருக்கக்கூடிய கிரக நிலைகளின் அமைப்புக்கு ஏற்ப வாழ்க்கையில், இனி வரப்போகின்ற நாட்களில் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்கள் என்ன? என்பதை நாம் அறிந்து கொள்வோம்..!
🌟நினைத்த காரியத்தை நிறைவேற்ற வித்தியாசமான செயல்களில் ஈடுபடுவீர்கள். இலக்கியம், நாவல் சார்ந்த துறைகளில் ஆர்வம் ஏற்படும். சேமிப்பை மேம்படுத்துவது சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வெளியூர் பயணங்களில் வெற்றிக்கொடி நாட்டுவீர்கள். வழக்கு சார்ந்த விஷயங்களில் திடீர் திருப்பம் உண்டாகும்.
பிரம்மாண்டமான பேச்சுக்களைக் குறைத்துக் கொள்ளவும். கால்நடை வளர்ப்பு தொழிலில் இருப்பவர்களுக்கு லாபம் ஏற்படும். உடல் ஆரோக்கிய இன்னல்கள் குறையும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பெரியோர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். எதிர்கால வாழ்க்கை பற்றிய சிந்தனைகள் மேம்படும். ஆடம்பரமான புதிய தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் ஈடுபாடு அதிகரிக்கும்.
பேச்சுக்களின் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். சகோதரர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய நபர்களின் தன்மை அறிந்து செயல்படவும். அலங்காரப் பொருட்களால் ஆதாயம் அடைவீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் அலைச்சலுக்குப் பின்பு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும்.
உடல் ஆரோக்கியம் :
💪உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். சிந்தனையில் தெளிவு ஏற்படும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கொழுப்பு சார்ந்த உணவுகளைக் குறைத்துக் கொள்ளவும். எதிலும் உணர்ச்சிவசப்படாமல் செயல்படவும். தோற்றப்பொலிவில் மாற்றம் உண்டாகும்.
பெண்கள் :
👩பெண்களுக்கு செயல்பாடுகளில் ஒருவிதமான மந்தத்தன்மை ஏற்படும். எதிலும் அலட்சியப் போக்கின்றி செயல்படவும். எதிர்பாராத சில வரவுகள் ஏற்படும். உறவினர்களின் வழியில் தொழில் சார்ந்த வாய்ப்புகள் சாதகமாகும். தம்பதிகளுக்குள் அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிர்காலம் தொடர்பான சில முடிவுகளை எடுப்பீர்கள். காப்பீடு விஷயங்களில் ஆலோசனை கிடைக்கும்.
மாணவர்கள் :
🎒மாணவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். விளையாட்டு விஷயங்களில் ஆர்வத்தோடு கலந்து கொள்வீர்கள். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். மறதி தொடர்பான பிரச்சனைகள் குறையும் பயணங்களின் மூலம் புதிய ஆதாயம் ஏற்படும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் :
🎓உத்தியோகப் பணிகளில் நல்ல மதிப்பு கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்த சாதகமான சூழல் ஏற்படும். பயணங்களின் மூலம் சில நுட்பங்களைப் புரிந்து கொள்வீர்கள். விதண்டாவாத பேச்சுக்களைக் குறைத்துக் கொள்வது நல்லது. உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். உபரி வருமானம் குறித்த சிந்தனைகள் மேம்படும். தினந்தோறும் பணிகளைத் திட்டமிட்டுச் செயல்படுத்தவும்.
வியாபாரிகள் :
👳வியாபாரத்தில் லாபகரமான வாய்ப்புகள் உண்டாகும். பயணம் சார்ந்த வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். எதிர் பாலின மக்கள் வழியில் அனுகூலம் பிறக்கும். இடமாற்றம் குறித்த சிந்தனைகள் மனதில் தோன்றி மறையும். கிளைகளை விரிவுபடுத்துவதற்கான சூழல் மற்றும் உதவிகள் கிடைக்கும். உழைப்பையும், முயற்சியையும் அதிகப்படுத்துவதன் மூலம் புதிய இலக்குகளை அடைவீர்கள்.
கலைஞர்கள் :
💃கலைத்துறையில் இருப்பவர்களுக்கு அனுகூலம் உண்டாகும். எதிலும் முன் கோபமின்றி செயல்படவும். சில ஒப்பந்தங்களில் தீர விசாரித்து முடிவெடுப்பது நல்லது. வருவாய் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். ரசனை தன்மைகளை அறிந்து சில வியூகங்களை அமைப்பீர்கள்.
அரசியல்வாதிகள் :
💁அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றமான சூழல் உண்டாகும். உடல் உழைப்பு அதிகரிக்கும். மற்றவர்களின் பொருட்கள் மீது ஆர்வம் கொள்ளாமல் இருக்கவும். வழக்கு விஷயங்களில் பொறுமையைக் கையாள்வது உங்கள் மீதான நன்மதிப்பை மேம்படுத்தும். சஞ்சலமான சிந்தனைகளால் புதிய அனுபவம் ஏற்படும்.
வழிபாடுகள் :
🙏திங்கட்கிழமைதோறும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி அம்பாளை வழிபாடு செய்துவர செயல்களில் இருந்துவந்த தாமதங்கள் விலகும்.
எதிலும் அகப்படாமல் சிந்தித்து செயலாற்றும் மீன ராசி அன்பர்களே..!
🌟பிறக்கின்ற ஆங்கில வருடப் புத்தாண்டில் இருக்கக்கூடிய கிரக நிலைகளின் அமைப்புக்கு ஏற்ப வாழ்க்கையில், இனி வரப்போகின்ற நாட்களில் ஏற்படும்
சுப மற்றும் அசுப பலன்கள் என்ன? என்பதை நாம் அறிந்து கொள்வோம்..!
🌟மனதளவில் புதிய கண்ணோட்டம் பிறக்கும். தந்தை வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். செயல்பாடுகளில் இருந்துவந்த மந்தத்தன்மை படிப்படியாக விலகும். அரசு வழியில் எதிர்பார்த்த மானியம் கிடைக்கும். விவசாயத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும்.
உயர்கல்வியில் இருந்துவந்த குழப்பம் குறையும். புதிய விஷயங்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். வீட்டில் மனதிற்கு விரும்பியபடி மாற்றங்களைச் செய்வீர்கள். இளைய சகோதரர்கள் வழியில் சுப விரயங்கள் ஏற்படும். கலாச்சாரம் தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும்.
கலைத்துறையில் இருப்பவர்களுக்கு திறமைகள் வெளிப்படும். எடுத்துச் செல்லும் உடைமைகளில் விழிப்புணர்வுடன் இருக்கவும். வெளியூர் தொடர்பான பயணங்களால் புதிய அனுபவம் உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். ஆசைகளைக் குறைத்துக் கொள்வது பல சிக்கல்களைத் தவிர்க்க உதவும். வாழ்க்கைத் துணைவரின் கருத்துகளுக்கு மதிப்பளித்துச் செயல்படுவது குழப்பங்களைத் தவிர்க்கும்.
உடல் ஆரோக்கியம் :
💪உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் படிப்படியாகக் குறையும். நரம்பு சார்ந்த பிரச்சனைகள் விலகும். மனம் விட்டுப் பேசுவதன் மூலம் தெளிவு பிறக்கும். நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். அவ்வப்போது வயிற்றில் சிறு சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும்.
பெண்கள் :
👩பெண்களுக்கு மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். தனம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். குடும்ப உறுப்பினர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் விலகும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். சஞ்சலமான சிந்தனைகளைத் தவிர்ப்பது நல்லது. சுபகாரிய முயற்சிகள் கைகூடிவரும்.
மாணவர்கள் :
🎒மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான தேடல் அதிகரிக்கும். புதிய விஷயங்களில் ஆர்வத்தோடு கலந்து கொள்வீர்கள். இணையம் சார்ந்த துறைகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபட்டு பரிசுகளைப் பெறுவீர்கள். ஆசிரியர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
உத்தியோகஸ்தர்கள் :
🎓உத்தியோகப் பணிகளில் புதிய அனுபவங்கள் ஏற்படும். சிறு சிறு முயற்சிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். புதிய தொழில்நுட்ப விஷயங்களில் ஆர்வத்தோடு கலந்து கொள்வீர்கள். சில நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். உயர் அதிகாரிகள் பற்றிய கருத்துகளில் விவேகம் வேண்டும். தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதைத் தவிர்க்கவும்.
வியாபாரிகள் :
👳வியாபாரத்தில் இருந்துவந்த நெருக்கடியான சூழல்கள் மறையும். அரசு வகையில் சில உதவிகள் கிடைக்கும். வேலையாட்கள் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை அதிகரிக்கும். கால்நடை வியாபாரத்தில் அனுகூலம் ஏற்படும். புதிய முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுப்பது நல்லது. வர்த்தக விஷயங்களில் பொறுமை வேண்டும். புதிய வியாபாரம் குறித்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.
கலைஞர்கள் :
💃கலைத்துறையில் இருப்பவர்கள் சஞ்சலம் இன்றி செயல்படவும். ஓவியத்துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பும், ஆதரவான சூழலும் உண்டாகும். அரசு வகையில் உதவிகள் கிடைக்கும். விளம்பரம் தொடர்பான துறைகளில் அனுகூலம் ஏற்படும்.
அரசியல்வாதிகள் :
💁அரசியல்வாதிகள் மனசாட்சி படி செயல்படுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சிந்தனைகளை செயல்படுத்தும் போது அலட்சியம் இன்றி செயல்படவும். உடன் இருப்பவர்களால் மாற்றமான அனுபவம் ஏற்படும். நிர்வாகத்தில் சில மாற்றங்களை செய்வதற்கான சூழல் அமையும். ஆன்மிக பணிகளில் ஆர்வம் உண்டாகும்.
வழிபாடுகள் :
🙏புதன்கிழமை தோறும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி பெருமாளை வழிபாடு செய்துவர சுப காரியங்கள் கைகூடிவரும்.
குறிப்பு :
இங்கே கூறப்பட்டுள்ள அனைத்து சுப மற்றும் அசுப பலன்கள் யாவும் அவரவர்களுக்கு நடைபெறுகின்ற தசாபுத்திக்கேற்ப கிடைக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக