வெள்ளி, 25 செப்டம்பர், 2020

வெற்றிலையுடன் சேராத பாக்கு எது -ரிலாக்ஸ் ப்ளீஸ்

-----------------------------------------------------
கலக்கலான ஜோக்ஸ்...!!

-----------------------------------------------------
நோயாளி : என்னனே தெரியல டாக்டர் காலைல எழுந்திரிச்சாலே பத்து நிமிஷம் தல சுத்துது...
டாக்டர் : அப்ப பத்து நிமிஷம் லேட்டா எழுந்திரிங்க.
நோயாளி : 😏😏
-----------------------------------------------------
ராஜூ : இவ்வளவு வரதட்சணை கேக்குறாங்களே... பையனுக்கு அப்படி என்னதான் இருக்கு?
ராமு : ஊரை சுத்தி கடன்தான் இருக்கு...
ராஜூ : 😆😆

-----------------------------------------------------

நோயாளி : டாக்டர் எனக்கு ஆப்ரேஷன் பண்ணுங்க...
டாக்டர் : சரி பண்ணிடுவோம்...
நோயாளி : ஆப்ரேஷன் பண்ண எவ்ளோ பீஸ்?
டாக்டர் : 5001 ரூபாய் பீஸ்
நோயாளி : அது என்ன டாக்டர் மொய் வெக்குற மாதிரி 1 ரூபாய்?
டாக்டர் : 5000 எனக்கு 1 ரூபாய் உன்னோட ஆப்ரேஷன் முடிஞ்சதுக்கு அப்புறம் நெத்தியில வெக்குறதுக்கு.
நோயாளி : 😯😯
-----------------------------------------------------
கடி ஜோக்ஸ்...!!

-----------------------------------------------------

ஒரு நடிகர் தன்னோட கோல்ட் வாட்சை கடிச்சுக்கிட்டே இருக்காரு... ஏன்?
.
.
.
.
.
.
ஏன்னா அவரு நகைச்சுவை நடிகர்...😂😂

வெற்றிலையுடன் சேராத பாக்கு எது தெரியுமா?
.
.
.
.
.
.
மைசூர்பாக்கு...😂😂

-----------------------------------------------------
குறளும்... பொருளும்...!!

-----------------------------------------------------

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.

விளக்கம் :

செய்யக்கூடிய செயல்கள் எவை ஆயினும், அவை எல்லா இடங்களிலும் தொய்வில்லாத அறவழியிலேயே செய்யப்பட வேண்டும்.

படித்ததில் பிடித்தது... சிரிக்க மட்டுமே...!!

-----------------------------------------------------

ஒருவன் இறைவனிடம்... இறைவா... எனக்கு எப்பொழுதும் பை முழுக்க பணமும், ஒரு வேலையும், ஒரு பெரிய வண்டியும், அதில் என்னை சுற்றி பெண்களும் இருக்க வேண்டும் என்று வரம் கேட்டான்...

இறைவனும் அவனுக்கு வரம் கொடுத்தார்...

என்ன வரம் தெரியுமா?
.
.
.
.
பஸ்ஸில் கண்டக்டராக...😅😅

-----------------------------------------------------

இது உண்மையா?

-----------------------------------------------------

பதில் தெரிந்தும் கேள்வி கேட்பவர்கள் யார் தெரியுமா?
.
.
.
.
மனைவியும், ஆசிரியர்களும்தான்...😋😋

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்