>>
  • சக்கரப்பள்ளி சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில் – தேவாரம் முழங்கும் தஞ்சாவூர் மாமணிதலம்!
  • >>
  • 16-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • கிரெடிட் கார்டு மற்றும் அமேசான் கிப்ட் கார்டு - எதை தேர்வு செய்வது? முழுமையான ஒப்பீடு!
  • >>
  • 14-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • >>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வியாழன், 16 செப்டம்பர், 2021

    பச்சைக் கதவு, வெள்ளை ஜன்னல், உள்ளே கறுப்பு ராஜா. அது என்ன? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

    -------------------------------------------------------
    கொஞ்சம் சிரிங்க பாஸ்...!!
    -------------------------------------------------------

    தந்தை : இரண்டு நாள் ஸ்கூல் டூர் போறே. ஜாலியா இல்லாம ஏன் சோகமா இருக்கே?
    மகன் : டூர் போயிட்டு வந்த பிறகு பயண அனுபவக் கட்டுரை இருபது பக்கம் எழுது-ன்னு டீச்சர் டார்ச்சர் பண்ணுவாங்களே...!
    தந்தை : 😜😜
    -------------------------------------------------------
    அம்மா : ராத்திரி 2 மணிக்கு ஏழெட்டுப் பேர் வந்து கதவைத் தட்டறாங்களே... யாரது...?
    மகள் : என் வீட்டுக்காரரோடு தூக்கத்துல எழுந்து நடந்து போகிறப்ப 'பிரண்ட்ஸ்" ஆனவங்கலாம்...! கூப்பிட வந்திருக்காங்க...!
    அம்மா : 😳😳
    ------------------------------------------------------- 
    தன்னம்பிக்கை வரிகள்...!!
    ------------------------------------------------------- 
    தண்ணீர் அமைதியாய் இருக்கும் போது தூசிகள் தானாகவே அடியில் தங்கிவிடும். அதுபோல வாழ்க்கையில் பிரச்சனைகள் வரும்போது கலங்காது அமைதியாக இருங்கள் தானாகவே அடங்கி விடும். 

    பதற்றத்துடன் தேடும்போது கிடைக்காதது நிதானமாய் திரும்பி பார்க்கையில் கிடைக்கும். வாழ்க்கையும் அப்படித் தான் நிதானமாகவே இருங்கள். 

    எண்ணங்கள் உயர்வாய் இருக்கட்டும் மலைபோல் உயர்ந்து நிற்பீர்கள். எண்ணங்கள் அழகாய் இருக்கட்டும் ஆழ்கடல்போல் அமைதியாய் இருப்பீர்கள். எண்ணங்கள் வலிமையானதாய் இருக்கட்டும் செயல்களில் வெற்றியடைவீர்கள்.

    -------------------------------------------------------
    விடுகதைகள்...!!
    ------------------------------------------------------- 
    1. விதைக்காத விதை மண்ணிலே, அறுக்காத கதிர் விண்ணிலே. அது என்ன?

    2. தண்டு மேலே தாழி, தாழிக்குள்ளே எண்ணெய், எண்ணெய்க்குள்ளே கொடி, கொடிக்கு மேலே பூ. அது என்ன?

    3. விட்டம் போட்டு வீடு கட்டியும், விசிறி மாட்ட இடம் இல்லை. அது என்ன?

    4. பச்சைக் கதவு, வெள்ளை ஜன்னல், உள்ளே கறுப்பு ராஜா. அது என்ன?

    5. தொங்குது கீழே கொம்பு, தொட்டால் வருமே வம்பு. அது என்ன?

    விடை :

    1. சூரியன்

    2. குத்துவிளக்கு

    3. மூக்கு

    4. சீதாப்பழம்

    5. யானைத் தந்தம்.
    ------------------------------------------------------- 
    இந்த டவுட் உங்களுக்கும் இருக்கா?
    ------------------------------------------------------- 
    விமானத்திலேயோ இல்லை நம்ம ரேஞ்ஜுக்கு பஸ்லயோ போகும் போது பாதியில் விபத்துக்குள்ளாகி நாம் பிழைத்துக்கொண்டால், டிக்கெட் பணத்தை திருப்பி கொடுத்திருவாங்களா?

    கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் நீதிமன்றம் சென்றால் அவர்களும் 'கீதை" மேல் சத்தியம் செய்ய வேண்டுமா?

    விளம்பரங்களில் 'இலவசப்பரிசு" என்று சொல்கிறார்களே... பரிசுனாலே அது இலவசம் தானே?

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக