நீதி அரசர் என அழைக்கப்படும் சனிபகவான், தவறு செய்பவர்களின் மீது கோபம் கொள்வார். அதே சமயம், நேர்மையான, சரியான விஷயங்கள், பிறருக்கு தீங்கு ஏற்படாத காரியங்களை செய்பவர்கள் சனிபகவானைப் பார்த்து பயப்பட வேண்டிய அவசியமில்லை.
ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் சனிபகவானை வழிபடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். சனிபகவான் நம்மைப் பிடித்தால் தான் பிரச்சனை. நாம் அவரை மனதார வழிபட்டால் நம் வாழ்வு செழிக்கும். துன்பங்கள் அகழும்.
சனிக்கு நட்பு கிரகங்கள் புதன், சுக்கிரன், ராகு, கேது. சம கிரகம் குரு. பகை கிரகம் சூரியன், சந்திரன், செவ்வாய். பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்களுக்கு சனி அதிபதியாவார்.
லக்னத்திற்கு 11-ல் சனி இருந்தால் அந்த ஜாதகக்காரர்கள் மரியாதைக்கு உரியவர்களாக இருப்பார்கள்.
11-ல் சனி இருந்தால் என்ன பலன்?
👉 மனை வசதி உடையவர்கள்.
👉 பயம் இல்லாதவர்கள்.
👉 வாகன வசதி உடையவர்கள்.
👉 சொத்துக்கள் கொண்டவர்கள்.
👉 செல்வாக்கு நிரம்பியவர்கள்.
👉 தெளிவான சிந்தனை உடையவர்கள்.
👉 அரசியல் தொடர்பு உடையவர்கள்.
👉 எதிலும் வெற்றி பெறக்கூடியவர்கள்.
👉 அனைவராலும் விரும்பப்படுபவராக இருப்பார்கள்.
👉 பொருளீட்டும் திறமை உடையவர்கள்.
👉 கல்வி வேள்விகளில் சிறந்து விளங்கக்கூடியவர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக