>>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • தோசைக்கல்லில் முதலில் சுடும் தோசை மட்டும் சரியாக வராததற்கான காரணங்கள்
  • >>
  • டிஸ்னி இன்ஜினியர் அனைத்தையும் இழந்தார்—ஒரு AI புகைப்பட ஆப்பிற்காக!
  • >>
  • மர்மம் நிறைந்த இந்தியாவின் ரகசிய கோவில் – குல்தரா செவ்வேளூர் கோவில்
  • >>
  • 23-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஓய்வும் புத்துணர்ச்சியும் – மனக்கவலைக்கு மாற்று வழி!
  • >>
  • தாத்தையங்கார்பேட்டை காசி விசுவநாத சுவாமி கோயில் – ஒரு தனிப்பெரும் பரிகாரத் தலம்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    ரிலாக்ஸ் ப்ளீஸ்


     Description: Image result for ரிலாக்ஸ் ப்ளீஸ்

    படித்ததில் பிடித்தது.. சிரிக்கசிரிக்க சிரிப்பு - ரிலாக்ஸ் ப்ளீஸ்..!!

    சீனு : ரூபாய் நோட்டு மாலை போட்ட தொண்டரை தலைவர் கோபப்பட்டு அடிச்சுட்டாராமா..!!
    தீபக் : ஏன்?
    சீனு : அது எல்லாம் கள்ள நோட்டாம், அதான்!
    தீபக் : 😆😆
    -------------------------------------------------------------------------------------------------------
    மது : நம்ம குமாரோட அறுபதாம் கல்யாணத்துல சிக்கல்.
    ராமு : என்னவாம்?
    மது : எந்த மனைவியோட கொண்டாடுவதுன்னுதான்...!
    ராமு : 😂😂
    ----------------------------------------------------------------------------------------------------------
    படித்ததில் பிடித்தது...!!

    ஒருவருக்கு திடீருன்னு ஒரு சந்தேகம் வந்தது. தன்னுடைய மனைவிக்கு காது கேட்கவில்லையோ? என்று. ஆனால் இதை மனைவியிடம் நேரடியாகக் கேட்க அவருக்கு தயக்கம். தயக்கம் என்ன? பயம்தான்.😜

    இந்த விஷயத்தை அவரின் குடும்ப டாக்டரிடம் கூறினார். அதற்கு அவர் ஒரு எளிய யோசனை கூறினார்.

    இருபது அடி தூரத்தில் இருந்து மனைவியிடம் ஏதாவது பேசிப் பாருங்கள், மனைவியின் காதில் விழவில்லை எனில் சற்று நெருங்கி பதினைந்து அடி தூரத்தில் இருந்துப் பேசுங்கள், பின் பத்து, ஐந்து இப்படி குறைத்துக் கொண்டே நெருங்கிச் சென்று பேசுங்கள்.

    எத்தனை அடி தூரத்தில் இருந்து பேசினால் மனைவிக்கு காது கேட்கவில்லை எனத் தெரிந்தால் அதற்கேற்றபடி சிகிச்சை அளிக்கலாம் என டாக்டர் கூறினார். அதை கேட்டவுடன் அந்த கணவனுக்கு ஒரே குஷி.

    உற்சாகமாக வீடு திரும்பிய அவர் வீட்டு வாசலில் இருந்தபடியே உள்ளிருந்த மனைவியிடம் இன்று என்ன சமையல்? எனக் கேட்டார்.

    பதில் எதுவும் இல்லை. பின் வீட்டு வரவேற்பறையில் இருந்து அதே கேள்வியைக் கேட்டார். அதற்கும் பதில் இல்லை, ஹாலில் இருந்து கேட்டார், சமையலறை வாசலில் இருந்தும் மீண்டும் மீண்டும் அதே கேள்வியைக் கேட்டார். மனைவியிடமிருந்து பதிலே இல்லை.

    போச்சு இரண்டு ஸ்பீக்கரும் அவுட் ஆகிவிட்டது போல என்று மனதில் கன்ஃபார்ம் செய்துவிட்டார்.

    கடைசி வாய்ப்பாக மனைவியின் காது அருகே சென்று சத்தமாக இன்று என்ன சமையல்? எனக் கேட்டார்.

    காதில் ஏதோ குண்டு வெடித்தது போல் இருக்கவே... அவர் மனைவி அவரைக் கோபமாக திரும்பி பார்த்து, ஏன் இப்படி கத்துறீங்க? நீங்களும் வாசல் கேட்டிலிருந்து, வரவேற்பறையில் இருந்து, ஹாலில் இருந்து, சமைலறை வாசலில் இருந்து கேட்க, கேட்க நானும் முருங்கைக்காய் சாம்பார், உருளைக்கிழங்கு பொரியல்னு சொல்லிக்கிட்டே இருந்தேனே, அது உங்கள் காதில் விழவில்லையா?

    காதுல என்ன பஞ்சு மூட்டையா வச்சிருக்கீங்க? எனப் பொரிந்துத் தள்ளிவிட்டாள்... இப்போது தெரிகிறதா பிரச்சனை யார் காதில் என்பது?

    இப்படித்தான் பலர் பிரச்சனையை தம்மிடம் வைத்துக் கொண்டு, அது பிறரிடம் இருப்பதாக நினைத்து வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்.

    இந்தப் பதிவு சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும்தான்.

    மாணவனின்பதில்...மயங்கி விழுந்த ஆசிரியர்... என்ன கேள்வியாக இருக்கும்?
    இதில் தவறுயார் மேல்? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!
    இதை மட்டும் உடைத்துவிடாதீர்கள்... வலி உங்களுக்கே... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!
    சில நேரங்களில் அலையாக... சில நேரங்களில் கரையாக... ஏன்? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!
    படித்ததில் பிடித்தது... ஒரு குட்டிக்கதை... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!! 
    முடிவுதெரியாத வாழ்க்கை... கூடவே கூடாத செயல்கள்... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!


    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக