செவ்வாய், 3 மார்ச், 2020

முடிஞ்சா இந்த புதிருக்கு பதில் கண்டுபிடிங்க... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

சிரிப்போ... சிரிப்பு...!!

மனைவி : காரணம் இல்லாம குடிக்கமாட்டேன்னு சொன்னீங்களே, இப்போ ஏன் குடிச்சீங்க?
கணவர் : சுழஉமநவ விடுறதுக்கு பாட்டில் வேணும்னு பையன் கேட்டான். அதான் குடிச்சேன்...
மனைவி : 😠😠
--------------------------------------------------------------------------------------------------
கலா : என்னடி இப்பெல்லாம் மேனேஜர் உன்னை பாத்து சிரிக்கறதே இல்ல?
மாலா : அன்னைக்கு அவருக்கிட்ட நீங்க சிரிக்கும்போது எங்க தாத்தா மாதிரியே இருக்கீங்கன்னு சொன்னேன்... அதான்...!
கலா : 😂😂
--------------------------------------------------------------------------------------------------
அப்பா : கண்ணா... ராத்திரி தூங்கும்போது செல்போனை சார்ஜ்ல போடாதப்பா!
மகன் : ஏம்ப்பா?
அப்பா : பேட்டரி சூடானா வெடிக்கவும் செய்யலாம்!
மகன் : அது தெரியும்பா... அதனாலதான் சார்ஜ்ல போடும்போது பேட்டரியை கழட்டி வெச்சுடுவேன்!
அப்பா : 😩😩
--------------------------------------------------------------------------------------------------
புதிரை கண்டுபிடியுங்கள்...!!
நீங்கள் ஏழு தங்கக்கட்டிகளை வைத்துள்ளீர்கள். அதில் ஒன்று போலியானது, மற்றவற்றைவிட எடை குறைவானதும் கூட. உங்களிடம் தராசு ஒன்று உள்ளது. ஆனால், அதை இருமுறைதான் பயன்படுத்த முடியும். போலியான தங்கத்தை எவ்வாறு கண்டுபிடிப்பீர்கள்?
விடை கீழே..👇👇

விடை :

மூன்று மூன்று தங்கக்கட்டிகளை தராசின் இரண்டு பக்கத்திலும் வையுங்கள். அவை சமமாக இருந்தால், நீங்கள் தராசில் வைக்காத தங்கக்கட்டி போலியானது.

இல்லையேல், தராசில் எடை குறைவாக இருக்கும் மூன்று தங்கக்கட்டிகளை எடுங்கள். அதில் இரண்டு தங்கக்கட்டிகளை எடுத்து தராசில் வையுங்கள். அது சமநிலைக்கு வந்தால் நீங்கள் வைக்காத தங்கக்கட்டி போலியானது. இல்லையேல் தராசில் எதன் எடை குறைவாக உள்ளதோ அதுதான் போலியானது.
--------------------------------------------------------------------------------------------------

சிரிக்க... சிந்திக்க...!
ஒரு முள்ளு குத்துனாலே நமக்கு வலி தாங்கல...
பாவம் மீனு உடம்புக்குள்ள எத்தனை முள்ளு குத்தியிருக்கு... அது எப்படிதான் வலி தாங்குதோ?😟😟

கண் மைக்கும், லிப்ஸ்டிக்கிற்கும் போட்டி வெச்சா லிப்ஸ்டிக்தான் ஜெயிக்குமாம், எப்படி?
வாய்(மை)யே வெல்லும்னு சொல்லியிருக்காங்களே...!😝😝

103-க்கும், 105-க்கும் நடுவுல என்ன இருக்கு தெரியுமா?
104-தான்...
அதான் இல்லை.. நடுவுல '0"தான் இருக்கு. நீங்க இன்னும் maths-ல வீக்குதான்...😬😬
--------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்