>>
  • இனிப்பு மற்றும் கா‌ர கொழுக்கட்டை செய்வது எப்படி?
  • >>
  • இராகு-கேது தோஷங்களை நீக்கும் தென் காளஹஸ்தி – கத்திரிநத்தம் காளஹஸ்தீஸ்வரர் கோயில்
  • >>
  • 06-05-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 10 வகை பாயாசம்
  • >>
  • திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், திருவாரூர்
  • >>
  • 28-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • >>
  • சக்கரப்பள்ளி சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில் – தேவாரம் முழங்கும் தஞ்சாவூர் மாமணிதலம்!
  • >>
  • 16-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • கிரெடிட் கார்டு மற்றும் அமேசான் கிப்ட் கார்டு - எதை தேர்வு செய்வது? முழுமையான ஒப்பீடு!
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    புதன், 29 ஜூலை, 2020

    குரல் இல்லாதவன் கூப்பிடுகிறான்... அவன் யார்? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!

    -----------------------------------------------------
    சிரிக்கலாம் வாங்க...! 
    -----------------------------------------------------
    மனைவி : நான் காலேஜ் படிக்கும் போது மாறுவேட போட்டியில அரக்கி வேஷம் போட்டதுக்கு... எனக்கு இரண்டாம் பரிசு கொடுத்தாங்க.
    கணவன் : அட... நீ சும்மா போயிருந்தாலே முதல் பரிசு கொடுத்துருப்பாங்க.
    மனைவி : 😏😏
    -----------------------------------------------------
    ராமு : கையில பத்து பைசாக்கூட இல்ல.... நா எப்படிதான் அடுத்த வாரம் என்னோட பொண்ணு கல்யாணத்த நடத்த போறன்னு தெரியல?
    சோமு : அட ஏன்டா கவலைப்படுற... இந்தா பத்து பைசா... போயி உன்னோட பொண்ணு கல்யாணத்த ஜாம் ஜாம்னு நடத்து.
    ராமு :  🤨🤨
    -----------------------------------------------------
    விடுகதைகள்...! 
    -----------------------------------------------------

    👉 பச்சை வீட்டுக்கு சிவப்பு வாசல்... அது என்ன?

    👉 வெளிச்சத்தில் பிடிபட்டவனுக்கு இருட்டில் விடுதலை... அவன் யார்?

    👉 குரல் இல்லாதவன் கூப்பிடுகிறான்... அவன் யார்?

    👉 மண்ணுக்குள் மட்காத கயிறு... அது என்ன?

    விடை :

    🐦 கிளி

    📷 போட்டோ

    📞 தொலைப்பேசி

    🐛 மண்புழு

    -----------------------------------------------------
    கொஞ்சம் யோசிங்க பாஸ்...!
    -----------------------------------------------------
    🐒 ஒரு குரங்கு 20 அடி உயரம் உள்ள மரத்தில் ஏறத் தொடங்கியது.

    🐒 குரங்கு ஒரு மணி நேரத்திற்கு 3 அடி ஏறுவதும், 2 அடி சறுக்குவதுமாய் இருந்தது.

    🐒 மரத்தின் உச்சியை சென்றடைய குரங்கிற்கு எத்தனை மணி நேரம் தேவைப்பட்டிருக்கும்?

    விடை : 

    மொத்தமாக குரங்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு அடி ஏறும்.

    17 அடி ஏற 17 மணி நேரம் எடுத்துக்கொள்ளும்.

    18வது மணி நேரத்தில் அது உச்சியை தொட்டுவிட்டு, 18 ஆம் அடிக்கு மீண்டும் சறுக்கிவிடும்.

    ஆதலால், குரங்கு உச்சியை சென்றடைய 18 மணி நேரம் எடுத்துக்கொள்ளும்.
    -----------------------------------------------------
    கைப் புதிர்கள்...!
    -----------------------------------------------------
    துன்பத்தில் வரும் கை - அழுகை😭

    அண்ணனின் இளைய சகோதரியை குறிக்கும் கை - தங்கை👫

    பெண்ணைக் குறிக்கும் கை - மங்கை👩

    சிவனின் தலையில் இருக்கும் கை - கங்கை🕉

    தாத்தாவின் தலையில் தோன்றுவது - வழுக்கை👴

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக