Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 8 ஜூலை, 2019

ஹத யோகா

Image result for ஹத யோகா 

 

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

 

ஹத யோகா :
15 ஆம் நூற்றாண்டு இந்தியாவில் வாழ்ந்த யோகி ஸ்வாத்மராமா, தன் ஹத யோக பிரதிபிகா தொகுப்பில், ஹத யோகா என்ற குறிப்பிட்ட வகை யோகாவைப் பற்றி விளக்கியுள்ளார். பதஞ்சலியின் ராஜ யோகத்தில் இருந்து, ஹத யோகா கருத்தில் மாறுபட்டுள்ளது, அது சத்கர்மாவை குறியாகக் கொண்டு, உடல் சுத்தம் மனத் தூய்மைக்கு (ஹா) மற்றும் ப்ராண அல்லது இன்றியமையாத சக்தி (தா) பெற வழி நடத்திச் செல்லும் என்கிறது. மேலும் பதஞ்சலியின் ராஜ யோக முறையில், அமர்ந்து செய்யும் ஆசனத்தோடு அல்லது உட்கார்ந்து செய்யும் தியான நிலையை ஒப்பிடுகையில், இது இன்று பிரபலமாக வழக்கத்தில் இருக்கும் முழு உடல் நிலைகளின் ஆசனங்களின் வளர்ச்சியைக் குறிக்கிறது. ஹத யோகா தன் நவீன மாற்றங்களைக் கொண்ட நடையில் பல வகைகளைத் தான் மக்கள் இன்று யோகா என்ற பதத்தோடு சம்பந்தப்படுத்துகிறார்கள்.
தந்திரம் :
தனோதி, த்ராயதி என்ற இரண்டு சொற்களின் சேர்கையில் ஒருவான சொல் "தந்திரம்". தனோதி என்றால் விரிவடைதல் என்றும், த்ராயதி என்றால் விடுவிக்கப்படுதல் என்றும் பொருள். அதாவது, உணர்வு எல்லைகளை விரிவடையச் செய்து சக்தியினை விடுவிக்கத் தேவையான அறிவியலாம்.
உடலில் உயிர் இருக்கும்போதே "இகமதில் சுகம்" பெற தளைகளில் இருந்து விடுபட்டு இருப்பதற்கான உக்தியாம். நமது சரீரம் மற்றும் மனம் இரண்டிற்கும் சில வரம்புகள் அல்லது எல்லைகள் இருக்கின்றன. இவற்றைப் பற்றி புரிந்து கொள்வதே இந்த அறிவியலின் முதற் படியாகும். அதற்கு அடுத்ததாக உணர்ச்சி கோர்வை மண்டலத்தை விரிவடையச் செய்து, சக்தியினை தளைகளில் இருந்து விடுவிக்கத் தோதுவான உக்திகளைச் சொல்கிறது. இறுதியில் மனிதப் பிறவியின் எல்லைகளையும் வரம்புகளையும் தளைகளையும் கடந்தாற்பின், எல்லாமுமான பரம்பொருளோடு இரண்டற இணையும் அனுபவத்தினைத் தந்திடும் என்ற உறுதியினையும் தருகிறது. உடல் மற்றும் மனம் இவற்றின் உபாதைகளைக் களைந்து அவற்றை பேரின்ப பெருங்களிப்பிற்கு தயார் செய்திடும் முறைகளாக யோக சாஸ்திரங்கள் உரைக்கும் ஆசனம், பிரணாயாமம், முத்திரைகள் மற்றும் பந்தங்கள் ஆகிய பயிற்சிகள் இதிலிருந்து இருந்து உற்பத்தியானவைதான்.
தாந்த்ரியம் என்பது ஒரு நடைமுறை இது, இதனைப் பயிற்சி செய்பவர்களின் சாதாரண சமூக, மத/ சமய, மற்றும் பிரதட்சியமான நிஜ வாழ்க்கையில் உள்ள தொடர்பை / உறவு முறையை மாற்றுவதாகக் கருதப்படுகிறது. இந்த தாந்த்ரீகபயிற்சியால் ஒரு தனி நபர் இந்த நிஜ உலகம் ஒரு மாயை, ஒரு தோற்றம் என்ற கருத்தை அடைந்து மற்றும் தனிமனிதன் அதில் இருந்து முக்தியும் அடைகிறான். 

முக்தி அடைவதற்கான இந்த குறிப்பிட்ட பாதை இந்து சமயத்தில் அளிக்கப்பட்டுள்ள பல வகைகளில் தாந்த்ரீகத்தோடு தொடர்புடைய மற்ற இந்து சமயங்களின் பிற முறைகளான யோகா, தியானம் மற்றும் சமூக பரிச்சியம் அதாவது தற்காலிக அல்லது நிரந்தரமான ,சமூக உறவுகள் மற்றும் வாழ்வியலில் இருந்து விடுதலை அடையும் வழியைக் காட்டுகின்றன. தாந்த்ரீகப் பயிற்சிகளையும் மற்றும் ஆய்வுகளையும் கற்கும்போது மாணவர் மேற்கொண்டு தியான முறைகள் ,குறிப்பாக சக்ரா தியானம் கற்க அறிவுறுத்தப்படுகிறது. பிற யோகிகளை சீர்தூக்கி பார்க்கும்போது, தாந்த்ரீக பயிற்சியாளர்கள் கடைபிடிக்கும் பயிற்சி முந்தையதை விட மிக விரிவாக உள்ளது.தியானிப்பதற்கும், வணங்குவதற்கும் இதயத்திற்குள் உள்ள சக்கரத்துக்குள் கடவுளைக் கொண்டு வரும் நோக்குடன் செய்யப்படும் ஒரு வகை தான் குண்டலினி யோகா.

என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..


1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக