Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வியாழன், 7 அக்டோபர், 2021

உருவத்தில் சிறியவன், உழைப்பில் பெரியவன். அவன் யார்? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

----------------------------------------------------
சிரிக்கலாம் வாங்க...!!
----------------------------------------------------

டாக்டர் : உங்க காதுல இருந்த கோளாறை சரி பண்ணிட்டேன். இனி உங்களுக்கு காது நல்லா கேட்கும்.
நோயாளி : என்னது!! உங்களுக்கு ஃபீஸ் வேண்டாமா? என்ன டாக்டர் சொல்றீங்க!.
டாக்டர் : 😳😳
----------------------------------------------------
சோமு : எதுக்கு நின்னுக்கிட்டே சாப்பிடுறீங்க?
ராமு : பொண்டாட்டி சம்பாத்தியத்துல உட்கார்ந்து சாப்பிடறான்னு மத்தவங்க கேலி பண்ணக் கூடாதுல்லே...
சோமு : 😜😜
----------------------------------------------------
படித்ததில் பிடித்தது...!!
----------------------------------------------------
🌟 ஒருவனின் மனம் தூய்மையாக இல்லையெனில் பணமோ, பலமோ அவனுக்குப் பலன் தராது. 

🌟 மண்ணில் வாழ்வதற்குத்தான் பணம் வேண்டும். மற்றவர்கள் மனதில் வாழ்வதற்கு நல்ல குணம் இருந்தாலே போதும். 

🌟 எதிர்பார்ப்பு இல்லாத வாழ்க்கையும் இல்லை. எதிர்பார்ப்பது எல்லாம் வாழ்க்கையும் இல்லை.

🌟 நினைத்தபடி வாழ்வதை விட நிம்மதியாக வாழ்வதே சிறந்த வாழ்க்கை.
----------------------------------------------------
இது தாங்க வாழ்க்கை..!!
----------------------------------------------------
பணக்கார இளைஞனின் விலையுயர்ந்த கார்🚗 நின்றுகொண்டிருந்தது. ஏழைச் சிறுவன்👦 ஒருவன் எட்டி நின்று அந்தக் காரையே🚗 ஆசையுடன்😍 பார்த்துக் கொண்டிருந்தான்.

சிரித்துக்கொண்டே😀 அந்த இளைஞன் சொன்னார், 'இது என் அண்ணன் எனக்கு பரிசளித்தது". சிறுவன் முகத்தில் வியப்பு. 'உனக்கு அப்படி ஓர் அண்ணன் இருந்திருக்கலாம் என்று ஆசைப்படுகிறாயா?" என இளைஞர் கேட்டார். சிறுவன் சொன்னான், 'இல்லை! அப்படியோர் அண்ணனாக வளர வேண்டுமென்று விரும்புகிறேன்".

நம்பிக்கையுணர்வு நல்லெண்ணங்களையே வளர்க்கும்! 
----------------------------------------------------
விடுகதைகள்...!!
----------------------------------------------------
💡 ஆடி ஆடி நடந்தான், அமைதியாக அதிர வைத்தான். அவன் யார்?

🐘 யானை

💡 உருவத்தில் சிறியவன், உழைப்பில் பெரியவன். அவன் யார்?

🐜 எறும்பு

💡 இருப்பது இரண்டு கால்... ஓடுவது குதிரை வேகம்... இறக்கை உண்டு பறக்காது. அது என்ன?

🦃 நெருப்புக் கோழி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!