மியான்மரில்
யாத்ரீகர்கள் பயணம் செய்த படகு ஒன்று நீரில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான
சம்பவத்தில் 13 பேர் பலியாகிவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மியான்மர்
நாட்டில் வடக்கு பகுதியில் அமைந்துள்ள மண்டலி நகரம் ஜீடாவ் என்ற அணை அமைந்துள்ளது.
இந்த அணையில் படகு ஒன்றில் 25 யாத்ரீகர்கள் இருந்தனர். அவர்கள் அனைவரும் நியாங் ஓஹாக் என்ற கிராமத்தில் உள்ள மடாலயத்திற்கு செல்வதற்காக பயணித்துக்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் குறித்த படகு அணையின் மையப்பகுதியை கடந்த போது ஏதிர்பாராத விதமாக தண்ணீருக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதுகுறித்து தகவலறிந்த மீட்பு குழுவினர் அணைபகுதிக்கு விரைந்து தண்ணீரில் ழூழ்கிய 11 பேரை உயிருடன் மீட்டனர். ஆனாலும் படகு கவிழ்ந்த விபத்தில் 13 பயணிகள் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவரை காணவில்லை என மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்குள்ளான படகின் ஓட்டுநரை மீட்பு குழுவினர் காப்பாற்றி கரைக்கு கொண்டுவந்த நிலையில் அவர் தலைமறைவாகிவிட்டதாகவும் அந்த நபரை தேடும் பணி நடைபெறுவதாகவும் போலிஸார் தெரிவித்துள்ளனர்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக