Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 14 ஜூலை, 2020

12-ம் வீட்டில் சனி இருந்தால் உண்டாகும் பலன்கள்...!!

கிரகங்களிலேயே மிகவும் பாசமானவர், நீதி அரசர் சனிபகவான். மந்தன், மகேசன், ரவிபுத்ரன், நொண்டி, முடவன், ஜடாதரன், ஆயுள்காரகன் என பல பெயர்களில் அழைக்கப்படும் சனி, சூரியனின் மகனாவார்.

சனியின் ஆட்சி வீடு மகரம் மற்றும் கும்பம். உச்ச வீடு துலாம். நீச வீடு மேஷம். பகை வீடு சிம்மம். சனி திசை 19 வருடங்களாகும். சனிபகவான் ஆண் கிரகமாகவும் இல்லாமல், பெண் கிரகமாகவும் இல்லாமல் அலியாக இருக்கிறார்.

பொதுவாக தந்தைக்கும், மகனுக்கும் ஒற்றுமை இருக்கும். ஆனால் சூரியனும், சனியும் ஜென்ம பகைவர்கள் ஆவார்கள். ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை வருடம் தங்கும் கிரகம் சனியாவார். இவர் ராசி மண்டலத்தை ஒருமுறை சுற்றிவர 30 வருடங்கள் ஆகிறது.

லக்னத்திற்கு 12-ல் சனி இருந்தால் அந்த ஜாதகக்காரர்கள் அடக்கம் நிறைந்தவர்களாக இருப்பார்கள்.

12ல் சனி இருந்தால் என்ன பலன்?

👉 விடாமுயற்சி உடையவர்கள்.

👉 சகிப்புத்தன்மை உடையவர்கள்.

👉 விரக்தியான மனப்பான்மை கொண்டவர்கள்.

👉 தனிமையை விரும்பக்கூடியவர்கள்.

👉 வித்தியாசமான குணநலன்களை கொண்டவர்கள்.

👉 செயல்திறன் குறைவுபடும்.

👉 வீண் அலைச்சல் கொண்டவர்கள்.

👉 ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்பட்டு மறையும்.

👉 எதிர்ப்புகளை உருவாக்கி கொள்ளக்கூடியவர்கள்.

👉 மறைமுகமான செயல்பாடுகளை உடையவர்கள்.

👉 விருப்பம் போல் செலவு செய்யக்கூடியவர்கள்.

👉 பொருள் இழப்புகளை சந்திக்கக்கூடியவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக