Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 17 டிசம்பர், 2019

தூக்கு தண்டனைக்கு எதிரான சீராய்வு மனு! வழக்கில் இருந்து தலைமை நீதிபதி பாப்டே விலகல்!

தூக்கு தண்டனைக்கு எதிரான சீராய்வு மனு! வழக்கில் இருந்து தலைமை நீதிபதி பாப்டே விலகல்!
டெல்லியில் பரபரப்பை உண்டாக்கிய நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட  முகேஷ், பவன் குப்தா,வினய் சர்மா, அக்ஷய் குமார் ஆகியோருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. 

இந்த தீர்ப்பை டெல்லி உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவை உறுதி செய்தன.

இதில்  முகேஷ், பவன் குப்தா,வினய் சர்மா தரப்பு தாக்கல் செய்த சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அக்ஷய் குமார் தரப்பு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தக்கல் செய்யப்பட்டது.

அந்த சீராய்வு மனு இன்று விசாரணைக்கு வரும் என கூறப்பட்டது. ஆனால், அந்த வழக்கில் இருந்து தலைமை நீதிபதி பாப்டே விலகியுள்ளார். ஆதலால் இந்த வழக்கு விசாரணை நாள் வேறு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் நாளை விசாரிக்கப்படும் என கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!