சனிபகவானின் பெயரை கேட்டாலே அண்ட சராசரமே ஆடிப்போகும். சாதாரண மனிதர் முதல், சகல சம்பத்துகளும் பெற்ற தேவர்கள் வரை நடுங்குவார்கள்.
மேலும் கரிய நிறம் கொண்ட சனிபகவான் காசிப கோத்திரத்தில் பிறந்தவர். ஜோதிட சாஸ்திரத்தில் ஆயுள்காரகன் என்ற அதி முக்கியமான பதவியில் இருப்பவர். சூரியபகவானின் இரண்டாவது புதல்வர் இவர்தான்.
சனிபகவான்தான் சித்தர்கள், உண்மையான ஆன்மிகவாதிகள், கடைநிலை ஊழியர்கள், தொண்டர்கள், சமூக சேவகர்கள், பொதுத்துறை நிறுவனங்களின் வழியாக மக்கள் சேவை செய்பவர்களுக்கு காரணகர்த்தாவாக திகழ்கிறார். சனியின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் பாசாங்கு செய்யாமல் உண்மையாக உழைக்கக்கூடியவர்கள்.
லக்னத்திற்கு 6-ல் சனி இருந்தால் அந்த ஜாதகக்காரர்கள் புத்திசாலியாக இருப்பார்கள்.
6ல் சனி இருந்தால் என்ன பலன்?
👉 பிடிவாதமான குணம் கொண்டவர்கள்.
👉 எதிர்ப்புகளை வெற்றி கொள்ளக்கூடியவர்கள்.
👉 வாக்குவாதம் செய்யக்கூடியவர்கள்.
👉 ஜீரண சக்தி அதிகமாக இருக்கும்.
👉 சண்டை போடும் குணம் உடையவர்கள்.
👉 கடன் சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட்டு மறையும்.
👉 காது தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு மறையும்.
👉 சுறுசுறுப்பான செயல்பாடுகளை உடையவர்கள்.
👉 ஆரோக்கிய குறைபாடுகள் அவ்வப்போது ஏற்பட்டு மறையும்.
👉 துரிதமாகவும், நிதானமாகவும் சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படக்கூடியவர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக