Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 7 ஜூலை, 2020

நம்பமுடியாத மனித அளவு 'வௌவால்', வைரலாகும் படம்! மெய்சிலிர்க்கும் உண்மை இது தான்!

முதலில் இந்த படத்தைப் பார்த்ததும் ஏதோ மாறுவேட போட்டிக்கு யாரோ ஒருவர் பேட்மேன் போன்று வேடமிட்டு மாஸ்க் அணிந்து தலைகீழாகத் தொங்குவது போன்று தெரிந்திருக்கும். ஆனால், படத்தை நன்றாக உற்றுப்பார்த்தால் அது ஒரு உண்மையான வௌவால் என்பது உங்களுக்குத் தெரியும். இது கிட்டத்தட்ட ஒரு மனிதன் அளவு பெரியது என்று சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிவருகிறது
'மனித அளவிலான' வௌவால்'
பிலிப்பைன்ஸில் உள்ள ஒரு கூரையில், தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருக்கும் 'மனித அளவிலான' வௌவாலின் புகைப்படம் சமீபத்திய டிவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டது. இந்த படத்தை @ அலெக்ஸ்ஜோஸ்டார் 622 என்ற பயனர் பெயரில் உள்ள அலெக்ஸ் என்பவர் பகிர்ந்துள்ளார். பார்ப்பதற்கு இராட்சச வௌவால் போலத் தோற்றமளிக்கும் இந்த வௌவாலின் இரண்டு படங்களை அவர் பதிவிட்டிருக்கிறார்.
இவ்வளவு பெரிய வௌவாலா?
இந்த படத்தைப் பார்த்ததும் நிச்சயம் நம்மால் இதை நம்ப முடியாது, இவ்வளவு பெரிய வௌவால்கள் எல்லாம் உயிருடன் இருக்க வாய்ப்பே இல்லை என்று தான் நினைத்திருப்போம். உண்மையில் இப்படி ஒரு இராட்சச வடிவிலான உயிரினம் உயிர் வாழ்கிறதா என்ற சந்தேகமும் சிலருக்கு எழுந்திருக்கும். உங்களுடைய அதே சந்தேகம் எங்களுக்கு இருந்தது, அதனால் சற்று இந்த புகைப்படத்தை ஆராய்ந்து உண்மையைக் கண்டுபிடித்து இருக்கிறோம்.
ஜெயிண்ட் கோல்டன் கிரௌன்ட் ஃபிளையிங் ஃபாக்ஸ்
முதலில் இது உண்மையான இராட்சச வௌவால் தான் என்பது உறுதியான தகவல் தான், படத்தில் இருப்பது உயிருடன் இருக்கக் கூடிய ஒரு வௌவால் என்பதே உண்மை. இந்த உயிரினத்தின் உண்மையான பெயர் 'ஜெயிண்ட் கோல்டன் கிரௌன்ட் ஃபிளையிங் ஃபாக்ஸ்' (giant golden-crowned flying fox) என்று அழைக்கப்படுகிறது. இந்த பெயரைக் கூகிள் சர்ச் செய்து பார்த்தால் இன்னம் கொஞ்சம் மெய்சிலிர்த்துப் போவீர்கள்.
ஃபாக்ஸ் என்றால் நரி தானே?
ஃபாக்ஸ் என்றால் நரி என்று தானே அர்த்தம், அப்படியானால் இது பறக்கும் நரியா என்று நீங்கள் கேட்கலாம், இதனுடைய முகம் மற்றும் காது ஓநாய் அல்லது நரி போன்று இருப்பதினால் இதற்கு அப்படி ஒரு வினோதமான பெயரைச் சூட்டியுள்ளனர். ஆனால், உண்மையில் இது வௌவால்கள் இனத்தைச் சேர்ந்தது தான். இராட்சச உருவத்தைப் பார்த்ததும் இரத்தத்தைக் குடிக்கும் டிராகுலா வௌவால் என்று நினைத்து சிலருக்குப் பயம் எழுந்திருக்கும்.
அரிதாகக் காணப்படும் வௌவால்
உண்மையில் இந்த ஜெயிண்ட் கோல்டன் கிரௌன்ட் ஃபிளையிங் ஃபாக்ஸ் வௌவால் ஒரு சாது, வெறும் பழங்களைப் பருகி உயிர் வாழும் வௌவால் வகையைச் சேர்ந்தது. பிலிப்பைன்ஸில் காணப்படும் இந்த அரிய வகை வௌவாலில் சில மட்டுமே இப்படி பெரிய உருவத்தில் அரிதாகக் காணப்படுகிறது. மனித அளவிற்கு பெரியதில்லைஎன்றாலும் கூட, சராசரி வயது கொண்ட ஒரு நாயின் உடல் அளவிற்குச் சமமாக இதன் அளவு இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பிடித்த உணவு இது தான்
குறிப்பாக இந்த வௌவால் அத்திப்பழங்களைத் தேடிச் சென்று விரும்பி உண்கிறதாம், சிறிய வௌவால்கள் எப்பொழுதும் மரக்கிளைகளில் தொங்கிக்கொண்டிருக்கும் என்றும், இப்படி இராட்சச வடிவ வௌவாலை அப்பகுதி மக்கள் பார்த்து சுமார் 5 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் என்றும் தெரிவித்திருக்கின்றனர்.
இதன் அளவு எவ்வளவு தெரியுமா?
அலெக்ஸின் இந்த ட்வீட் இப்போது 2.63 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது. சுமார் 1.05 க்கும் மேற்பட்டவர்கள் இதை ஷேர் செய்துள்ளனர். இவர் பதிவிட்டுள்ள படத்தில் காணப்படும் வௌவால் சுமார் 1.7 மீட்டர் அளவு பெரியதாம், அதாவது மனிதனின் உயரத்துடன் ஒப்பிட்டு பார்த்தால் இதன் அளவு சரியாக 5.58 அடியாம்.
வைரல் ஆர்க்கும் புகைப்படம்
தற்பொழுது சமூக வலைத்தளம், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் என்று அனைத்து பக்கமும் இந்த புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது. தற்பொழுது வைரல் ஆகிவரும் இந்த புகைப்படத்தைப் பார்த்தால் இந்த தகவலையும் சேர்த்து ஷேர் செய்யுங்கள், நம்ப முடியாதவர்களுக்கு இது ஒரு ஆதாரமாக இருக்கும். குழப்பத்தில் உள்ளவர்களுக்கு ஒரு தெளிவான தகவல் கிடைக்கும். இந்த வௌவால் பற்றிய உங்களுடைய கருத்தை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக