இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter:
www.twitter.com/Pudhiyapodiyan
திருவிரிஞ்சிபுரம் மார்கபந்தீஸ்வரர்
கோவில் மர்மங்கள் பற்றி தெரியுமா?
சில
ஆலயங்களைப் பற்றி படிக்கும்போதே, அவை நம்மை ஆச்சரியப்படுத்தக் கூடியதாகவும்,
பிரமிக்க வைப்பதாகவும் இருக்கும். அந்த கோவிலுக்கு சென்று பார்க்க வேண்டும் என்ற
ஆசையும் ஏற்படும். அதுபோல நம்மை அதிசயக்க வைக்கும் சிவ ஆலயத்தை பற்றி
பார்ப்போம்.....!
வேலூர் மாவட்டத்தில் பாலாற்றங்கரையில்
அமைந்த மற்றொரு சிவத்தலம் விரிஞ்சிபுரம். இது ஷPரமாநதி (ஷPரம் என்பதற்கு
வடமொழியில் பால் என்று பொருள்) என்றழைக்கப்படும் பாலாற்றின் தென்கரையில்
அமைந்துள்ளது. சுமார் 1300 ஆண்டுகள் பழமையானது. இதன் புராணப்பெயர்கள்
திருவிரிஞ்சிபுரம், கரபுரம்.
இத்தலம் தேவாரப்பாடல் பெற்ற தலம் என்ற
சிறப்பினை உடையது. இங்கு பிரதான தெய்வம் மார்கபந்தீஸ்வரர் சுயம்பு லிங்கமாக
வடகிழக்கு திசையில் சிறிது சாய்ந்த நிலையில் உள்ளது.
இத்தல இறைவியாக மரகதாம்பிகையும்,
தீர்த்தமாக பாலாறு, சிம்ம தீர்த்தமும் உள்ளது.
இத்தலத்து வடக்கு பக்க கோபுர வாயில்
எப்போதும் திறந்தே இருக்கும். இதன் வழியாக தேவர்கள் தினமும் இறைவனை வழிபடுவதாக
செய்தி. திருவாரூர் தேரழகு. திருவிரிஞ்சை மதிலழகு. கோவிலின் மதில் சுவர்கள்
உயரமானவை, அழகானவை.
அதிசய
பனைமரம் :
இந்த கோவில் வளாகத்துக்குள்ள அதிசய
பனைமரம் இருக்கிறது. இம்மரம் ஒரு ஆண்டில் வெண்மையான காய்களையும், மறு ஆண்டில்
கருமையான காய்களையும் காய்ப்பது தனி சிறப்பு.
தொண்டை மண்டத்தில் பனைமரம் தல
விருட்சமாக இருக்கும் தலங்கள் இரண்டு. அதில் ஒன்று விரிஞ்சிபுரம்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன்
உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ,
குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள்,
நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள்,
வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும்
சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன்
வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக