இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter:
www.twitter.com/Pudhiyapodiyan
ஜல்லிக்கட்டில் தொடங்கி பல பாரம்பரிய
விளையாட்டுக்கள் இடம் தெரியாத உலகிற்கு இடப்பெயர்ந்து விட்டன.
நம்மிடம் இன்னும் கொஞ்சம் உயிருடன்
இருக்கும் விளையாட்டுக்களுள் ஒன்றான பல்லாங்குழி ஆட்டத்தைப் பற்றி இங்கு காண்போம்.
பல்லாங்குழி என்பது மரம் அல்லது
உலோகத்தாலான ஒரு விளையாட்டுச் சாதனம். அதில் இரு வரிசைகளில் ஏழு குழிகள்
இருக்கும்.
தேவையானவை
:
கற்கள், புளியங்கொட்டை
ஆடுபவர்களின் எண்ணிக்கை :
இரண்டு பேர்
எப்படி
விளையாடுவது?
பல்லாங்குழி சட்டத்தில் ஏழு குழிகள்
இருக்கும். அவற்றுள் புளியங்கொட்டைகளை (அ) கற்களை 5, 5 ஆகப் போட்டு வைக்க
வேண்டும்.
ஒரு குழியில் இருப்பதை எடுத்து
ஒவ்வொன்றாக அடுத்த அடுத்த குழிகளுள் போட வேண்டும். முடிந்தவுடன் அதற்கடுத்த
குழியில் உள்ளதை எடுத்து அப்படியே போட்டு வர வேண்டும். முடிந்தவுடன் ஒரு
வெறுங்குழி வருமாயின் அதைத் தடவி அடுத்த குழியில் இருப்பதை தனக்குரியதாக்க
வேண்டும்.
ஒரு குழியில் நான்கு கொட்டைகள்
இருந்தால் அதையும் 'பசு" எனச் சொல்லி தனதாக்க வேண்டும். ஆட்ட இறுதியில் ஒரு
பெண் தோற்கும் போது (ஒரு குழிக்குரிய குறைந்த பட்ச சோழிகள் 5 இல்லாமல் இருந்தால்)
குழிக்கு ஒவ்வொரு சோழி இட்டு ஆட்டம் தொடங்குகிறது. இதற்கு கஞ்சி காய்ச்சுதல் என்று
பெயர்.
இவ்விளையாட்டை விளையாடுபவர்கள் அனைத்து
சோழிகளையும் பெறவும் முடியும் அல்லது இழக்கவும் முடியும். இவ்விளையாட்டில் இருவர்
மட்டுமே விளையாடலாம்.
ஏன்
பல்லாங்குழி விளையாட வேண்டும்?
பல்லாங்குழி உடல் ரீதியாக பெண்களின்
விரல் மற்றும் கைகளுக்கு வலுச்சேர்க்கிறது.
இல்லற வாழ்க்கையில் அடியெடுத்து
வைக்கும் பெண்கள் குடும்பத்தின் வரவு செலவுகள், சிக்கனம், சொத்துப் பங்கீடு,
சேமிப்பு, பொருளீட்டல் ஆகியவற்றை பற்றி விளையாட்டின் வழியே பெண்களின் மனதில் பதிய
வைக்க, நம் முன்னோர்கள் கண்டறிந்த வழி தான் பல்லாங்குழி விளையாட்டு.
தற்போதுள்ள குழந்தைகள் தெருவில்
விளையாடுவது இல்லை. மாறாக வீட்டிற்குள்ளேயே தொலைக்காட்சி, வீடியோகேம்ஸ், செல்போன்
ஆகியவற்றின் மோகத்தால் தன் பார்வையைக் கூட இழக்கும் அபாயத்தில் உள்ளனர்.
அவர்களிடத்தில் பல்லாங்குழி போன்ற நம் பாரம்பரிய விளையாட்டுகளை கொடுத்து நம்
பாரம்பரியத்தையும், நம் குழந்தைகளையும் மீட்டெடுப்போம்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன்
உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ,
குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள்,
நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள்,
வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும்
சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன்
வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக