Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 26 டிசம்பர், 2019

கிணற்றில் இருந்து வந்த அலறல் சத்தம்!உள்ளே எட்டிப்பார்த்தவர்கள் கண்ட காட்சி!

கிணற்றில் இருந்து வந்த அலறல் சத்தம்!உள்ளே எட்டிப்பார்த்தவர்கள் கண்ட காட்சி!


பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அன்பரசி ஆவார்.இவரது கணவர் சரவணன்.இவர்களுக்கு 5 வயதில் தனுஷ்காஸ்ரீ என்றும் 2 வயதில் மேகனாஸ்ரீ என்றும் 2 குழந்தைகள் உள்ளன. கணவனும் மனைவியும் ஒரே கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றி வருகின்றன.
இந்நிலையில் கடந்த புதன் கிழமை அன்று அவர்களது வீட்டு கிணற்றில் இருந்து அன்பரசியின் அலறல் சத்தம் கேட்டுள்ளது.இதை கேட்ட அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது அங்கு கிடந்த அன்பரசியையும் அவரது குழந்தையையும் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளன.
பின்னர் அன்பரசியை மீட்ட அவர்கள் குழந்தை மேகனாஸ்ரீயை மீட்க தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.பின்னர் இறந்த குழந்தையின் சடலத்தை மீட்ட அவர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதன் காரணமாக காவல்துறையினர் அன்பரசியிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.அப்போது அன்பரசி திருமணமாகி இரண்டும் பெண் குழந்தையாக பிறந்த காரணத்தால் சரவணனும் அவரது தாயாரும் சகோதரியும் அன்பரசியை அடித்து சித்ரவதை செய்துள்ளனர்.
மேலும் அன்பரசியின் கணவர் சரவணனுக்கு அதே கல்லூரியில் வேலை பார்க்கும் வேறொரு பெண்ணுடன் தகாத உறவு இருந்து வந்துள்ளது.இதற்கு அன்பரசி இடையூறாக இருந்த காரணத்தால் அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
இதன் காரணமாக குடிபோதையில் வந்த சரவணன் அன்பரசியையும் அவரது குழந்தையையும் கிணற்றில் தூக்கி எறிந்துள்ளார்.இதில் குழந்தை சிறிது நேரத்திலேயே துடிதுடித்து இறந்துள்ளதாகவும் அன்பரசி கூறியுள்ளார்.
இதன் காரணமாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சரவணன் குடும்பத்திடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக