Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 26 டிசம்பர், 2019

அதிர்ச்சி சம்பவம்.! சூரிய கிரகணத்தின் போது குருட்டு நம்பிக்கையால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தைகள்.!

அதிர்ச்சி சம்பவம்.! சூரிய கிரகணத்தின் போது குருட்டு நம்பிக்கையால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தைகள்.!


ரிய நிகழ்வான வளைய வகை சூரிய கிரகணம் இன்று பல இடங்களில் நிகழ்ந்த நிலையில், கர்நாடக மாநிலம் தாஜ்சுல்தான்பூர் கிராமத்தில் சூரிய கிரகணத்தின் போது சஞ்சனா, பூஜா மற்றும் காவிரி ஆகிய மூன்று மாற்றுத்திறனாளி குழந்தைகள் கழுத்து வரை புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சூரிய கிரகணத்தின் போது இவ்வாறு புதைத்து வைத்தால், மாற்றுத்திறனாளி குழந்தைகளின் குறைபாடு சரியாகிவிடும் என்ற மூடநம்பிக்கையின் காரணமாக குழந்தைகளை புதைத்து வைத்தது தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், இந்த நிகழ்விற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தகவலறிந்து கலபுராகி துணை ஆணையர் பி.சரத், அவர் தாசில்தாரை சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்து குழந்தைகளை மீட்டு, மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். மேலும், இந்த சம்பவத்திற்காக பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து போலீசார் விசாரணையில், சமூகத்தில் இதுபோன்ற மோசமான நடைமுறைகளை தவிர்க்க விழிப்புணர்வை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது என்றார். இந்த நடைமுறைகள் பல வருடங்களுக்கு முன்னர் கலாபுராகியில் உள்ள தர்கா பகுதியில் நிலவியது, கடுமையான நடவெடிக்கைக்கு பிறகுதான் அவை நிறுத்தப்பட்டன. இருப்பினும், இது தற்போது வெவ்வேறு பகுதிகளில் பரவியது.
மேலும், குழந்தை மருத்துவத் துறை தலைவர் டாக்டர் சந்தீப் பேசுகையில், இந்த நடைமுறை ஒரு குருட்டு நம்பிக்கை என்றும், இது உடல் ரீதியான சவாலான குழந்தைகளை மோசமாக பாதிக்கும் என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக