அமெரிக்காவில் உள்ள ஆள்னே பகுதியில் உள்ள ஒரு
வீட்டில் இருந்து ஒரு பெண் அலறல் சத்தம் கேட்டுள்ளது.இதனால் அதிர்ச்சியடைந்த
அக்கம்பக்கத்தினர் உடனே காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த
காவல்துறையினர் வீட்டை திறந்து பார்த்துள்ளனர்.அப்போது சுமார் 35 வயதுள்ள பெண்
ஒருவர் கத்திக்குத்து காயங்களுடன் கிடந்துள்ளார்.
இதனால் அவரை மீட்ட காவல்துறையினர்
சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.அப்போது அவரை பரிசோதனை செய்த
மருத்துவர்கள் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறை உயர்
அதிகாரி கூறுகையில் நாங்கள் வீட்டிற்குள் நுழைந்து பார்த்த போது பாதிக்கப்பட்ட
பெண் கத்திக்குத்து காயங்களுடன் நினைவில்லாமல் கிடந்ததாகவும் அவரது கணவர்
காயங்களுடன் நின்றுகொண்டிருந்ததாகவும் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குழந்தைகளின் கண்முன்னே
நடந்ததாகவும் இதில் 14 வயதுடைய சிறுவன் தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும்
மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும் சம்பவம் காரணமாக காவல்துறையினர்
குழந்தைகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக