பெரும்பாலான மக்களுக்கு இப்படி ஒரு
மோசடி நடக்கிறது என்று தெரியாமல் கூட இருக்கலாம், ஆனால் சமீப காலமாக QR code
மோசடிகள் குறித்த குற்றசாட்டுகளையும், அது சார்ந்த செய்திகளையும் அதிகமாக காண
முடிகிறது என்பதே கசப்பான உண்மை. QR code மோசடியா? அப்படி என்றால் என்ன? அதனால்
ஏற்படும் ஆபத்துகள் என்ன? இந்த மோசடியில் சிக்காமல் தப்பித்து கொள்வது எப்படி?
போன்ற பல கேள்விகளுக்கான பதில்களை ஆராயும் தொகுப்பே இது!
QR code மோசடி என்றால் என்ன?
சமீப காலமாக திடீரென்று அதிகரித்து
வரும் இந்த க்யூஆர் கோட் மோசடியானது, பெரும்பாலான சந்தர்ப்பங்களில், Furnitures
அல்லது பிற ஆன்லைன் வழியிலான பொருட்கள் மீதான விற்பனை விளம்பரங்களின் வழியாகவே
நடக்கிறது. அடையாளம் கண்டுபிடிக்க முடியாத சைபர் கிரைமினல்கள் பணத்தை அனுப்பி
வைப்பதாக கூறி, க்யூஆர் கோட்களை அனுப்புவதின் வழியாக பயனர்களின் வங்கிக்
கணக்குகளில் இருந்து பணத்தை திருடுவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
இதில் இன்னும் திகிலான விடயம்
என்னவென்றால்?
சமீபத்தில், சைபராபாத் காவல்துறை
இதுபோன்ற மோசடிகளைப் பற்றி குடிமக்களுக்கு எச்சரிக்கை செய்யும் ஆலோசனையைப்
பகிர்ந்து கொண்டது. கடந்த மாதம், குருகிராமில் இதுபோன்ற பல வழக்குகள்
பதிவாகியுள்ளன. திகிலூட்டும் விடய என்னவென்றால் இம்மாதிரியான மோசடிகளில்
ஈடுபடுபவர்கள் தங்கள் க்யூஆர் கோட்களை வழக்கமாக வாட்ஸ்அப் வழியாகவே பகிர்ந்து
கொள்கிறார்கள், பின்னர் குறிப்பிட்ட பயனர்களை பணம் அனுப்ப வைத்து மோசடிக்குள்
சிக்க வைக்கிறார்கள். இந்த QR code மோசடி எப்படி நடக்கிறது? என்பதை பற்றி நீங்கள்
அறிந்துகொள்ளும் பட்சத்தில், இதிலிருந்து தப்பிப்பது எப்படி என்பதையும் நீங்கள்
அறிந்துகொள்ளலாம்.
முதலில் பேங்க் அக்க்கவுண்ட்
விவரங்கள், பின்னர்...
சைபர் குற்றவாளிகள் பணத்தை
அனுப்பவதற்காக குறிப்பிட்ட வாடிக்கையாளரிடம் அவரின் வங்கி கணக்கு சார்ந்த
தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்கப்படுகிறார்கள். பின்னர் மோசடி செய்பவர்கள்
தங்கள் வங்கி கணக்கில் பணத்தைப் பெற வாட்ஸ்அப் வழியாக QR கோட் ஒன்றை அல்லது Quick
response code-ஐ பகிர்ந்து கொள்கிறார்கள். அதை ஸ்கேன் செய்து PIN-ஐ உள்ளிடுவதன்
மூலம், குறிப்பிட்ட தொகையை பெறுவதற்கான கோரிக்கையை அவர் ஒப்புக்கொள்கிறார் என்று
அர்த்தம். ஒருமுறை அவர் QR குறியீட்டை ஸ்கேன் செய்து PIN-ஐ என்டர் செய்ததும்.
அவரின் வங்கிக் கணக்கில் குறிப்பிட்ட தொகை சேர்க்கப்படுவதற்கு பதிலாக அது
கழிக்கப்படுகிறது.
பணம் அனுப்ப மட்டுமே க்யூஆர் கோட்;
பணம் பெறுவதற்கு அல்ல!
இந்த இடத்தில் பணத்தை அனுப்புவதற்கு
மட்டுமே QR கோடை நீங்கள் ஸ்கேன் செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்,
பணம் பெறுவதற்காக யாருமே QR code-ஐ ஸ்கேன் செய்ய மாட்டார்கள் என்பதை
நினைவில்கொள்ளவும். ஒரு QR கோட் என்பது ஒரு சாதாரண இணைய இணைப்பு போன்றது தான், அது
எங்கிருந்து யாரால் உருவாக்கம் பெற்றுள்ளது என்பது உங்களுக்குத் தெரியாத
பட்சத்தில், எக்காரணத்தை கொண்டும் அதை கிளிக் செய்யவோ அல்லது ஸ்கேன் செய்யவோ
வேண்டாம் என்று பரிந்துரைக்கப்படுகிறீர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக