ஒரு
நாள் பரமார்த்த குருவும் - சீடர்கள் ஐவரும் வெளியூர் செல்ல நினைத்தனர். ஆனால்
வயதாகிய குருவினால் நடப்பதற்குச் சிரமமாக இருக்கும் என்று நினைத்து சீடர்கள்
அவருக்காக ஒரு காளை மாட்டை வாடகைக்கு கேட்டனர். மாட்டு வாடகை ஐந்து காசுகள்
தருவதாக ஒப்புக் கொண்டு பரமார்த்த குருவை மாட்டின் மேல் அமர வைத்து சீடர்கள்
பரமார்த்த குருவை தொடர்ந்தனர்.
அப்போது கோடைக் காலமாதலால் வெயில் மிக அதிகமாக இருந்தது. அவர்கள் செல்லும் வழியில் ஒரு மணற்பரப்பான மரங்கள் எதுவும் இல்லாத வெட்ட வெளியைக் கடக்க வேண்டியிருந்தது. வெயிலை தாங்க முடியாமல் பரமார்த்த குரு மயக்கமடைந்து கீழே விழுகின்ற போது பின்னால் வந்த சீடர்கள், குருவை தாங்கிப்பிடித்து கீழே மணல் சுடாதபடி துணிகளை பரப்பி மாட்டின் நிழலிலேயே படுக்க வைத்தனர்.
குருவின் முகத்தில் சிறிது தண்ணீரை தெளித்து, தண்ணீரைக் குடிக்கச் செய்தனர். சிறிது நேரத்தில் குருவுக்கு மயக்கம் தெளிந்ததும் பழையபடி மாட்டின் மேல் உட்கார வைத்துச் சென்றனர். பின் ஒரு இடத்தில் தங்கி உணவருந்தி விட்டு சிறிது நேரம் ஓய்வெடுத்தனர். அதன் பின் ஓர் ஊரை சென்றடைந்தனர். அப்போது இரவு நேரம் ஆகிவிட்டமையால், அவ்வூரிலேயே தங்கி மறுநாள் காலை பயணம் செய்ய முடிவெடுத்தனர்.
இதனை அறிந்த அவ்வூர் மக்கள், பண்ணையாரிடம் பரமார்த்த குருவும் - சீடர்களும் வந்திருக்கும் செய்தியை அறிவித்தனர். பண்ணையார், தங்கியுள்ள அவர்களுக்கு சாப்பாடும், தங்குவதற்கு இடமும் ஏற்பாடு செய்து கொடுத்தார்.
சீடர்கள், மாட்டுக்காரனுக்கு அன்றைய மாட்டு வாடகையாக ஐந்து காசுகளைக் கொடுத்தனர். மாட்டுக்காரன் ஐந்து காசுகளை வாங்காமல் மாட்டின் நிழலின் குரு ஓய்வெடுத்தற்காக மூன்று காசுகள் சேர்த்து எட்டு காசுகள் கொடுக்க சொன்னான் மாட்டுக்காரன்.
இது என்ன அநியாயமாக இருக்கிறதே மாட்டைத் தான் வாடகைக்கு எடுத்தோம். அதெப்படி மாட்டின் நிழலுக்கு வாடகைக் கொடுக்க முடியும், என்றனர். இவர்களுடைய விவாதம் அந்த ஊர் பண்ணையாரிடம் சென்றது.
பண்ணையார் மாட்டுகாரனை அழைத்து, ஐயா, தாங்கள் பேசியபடியே ஒருநாள் வாடகை ஐந்து காசுகளைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்றார். அதற்கு மாட்டுக்காரன். ஐயா நான் ஐந்து காசு பேசியது மாட்டின் மேல் சவாரி செய்வதற்கு மட்டும்தான். ஆதனால் மாட்டின் நிழலில் தங்கியதற்கு மூன்று காசுகள் சேர்த்து எட்டு காசுகள் தரவேண்டும் என்றார்.
இது மிகவும் அநியாயமாக இருக்கிறது என்றார் பண்ணையார். இது ஒன்றும் அநியாயம் இல்லை. நியாயமாகத் தான் கேட்கிறேன் என்றான் மாட்டுக்காரன். இதனால் ஊர் மக்கள் எல்லோரும் கூடிவிட்டனர்.
இந்த பிரச்சனைக்கு நான் தீர்வு சொல்கிறேன். அதற்கு நீங்கள் எல்லாம் கட்டுப்படுவீர்களா என்றார் பண்ணையார். அதற்கு மாட்டுக்காரனும், குருவும், சீடர்களும் கட்டுப்படுவதாக கூறினார்கள்.
பண்ணையார் மாட்டின் சொந்தக்காரனை தன் அருகில் அழைத்து, மாட்டின் மீது குரு ஏறி வந்ததற்காக வாடகை ஐந்து காசுகளும், மாட்டின் நிழலின் தங்கியதற்காக மூன்று காசுகளின் நிழலையும் பெற்றுக்கொள் என்றார். மாட்டுக்காரன் ஒன்றும் புரியாமல் நின்றான்.
இப்போது இரவு நேரம், காலையில் தான் நிழலுக்கான பணத்தைப் பார்க்க முடியும் என்று கூறி மறுநாள் காலை சூரியன் உதயமானதும் மாட்டுக்காரனை அருகில் அழைத்து மாட்டின் நிழலுக்கான மூன்று காசுகளை வெயிலில் பிடித்தார். மாட்டுக்காரன் அமைதியாக தன் தவறை உணர்ந்து பேசியபடி 5 காசுகளை பெற்றான்
குட்டிக்கதைகளும் - கட்டுரைத்தொடர்களும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக