திங்கள், 2 மார்ச், 2020

இது எப்படி இருக்கு? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!


சிரிக்கலாம் வாங்க...!!
ராஜா : எங்கப்பா சம்பாதிச்ச துட்டு எல்லாத்தையும் குடிச்சே அழிச்சிட்டாரு.
மகேஷ் : அடப்பாவமே...! உனக்கு ஒன்னும் விட்டுவைக்கலையா?
ராஜா : ஒரு சொட்டுகூட வைக்கல...
மகேஷ் : 😜😜
----------------------------------------------------------------------------------------------------------
இது எப்படி இருக்கு?
மனைவி நீங்க சும்மா இருங்க...
உங்களுக்கு செலக்ட் பண்ணவே தெரியாது எனும்போது
கணவனின் நினைவில் வந்துபோகிறது
அவளை 'பெண் பார்த்த நாள்"...
-----------------------------------------------------------------------------------------------------------
கற்கள்... சொற்கள்...!!
வீசப்படும் கற்களை விட
பேசப்படும் சொற்களின் மீது
நிதானமாக இருங்கள்...
கற்கள் உயிரைக் கொல்லும்...
சொற்கள் உயிரோடு கொல்லும்...!!
-------------------------------------------------------------------------------------------------------

எப்போது வெற்றி... தோல்வி... மகிழ்ச்சி?
சிலரோடு ஒப்பிடும்போது வெற்றி அடைகிறோம்...

சிலரோடு ஒப்பிடும்போது தோல்வி அடைகிறோம்...

எவரோடும் ஒப்பிடாதபோது மட்டுமே

மகிழ்ச்சி அடைகிறோம்... நிரந்தரமாக...!!
-------------------------------------------------------------------------------------------------------
அறியவைகள் ஐந்து...!!
போலித்தனம் இல்லாத புன்னகை...

சுயநலம் இல்லாத உறவு...

கைமாறு கருதாத உதவி...

கவலைகளை மறக்க வைக்கும் நட்பு...
-------------------------------------------------------------------------------------------------------------
எதிர்பார்ப்பு இல்லாத அன்பு...!!
நாம் வாழும் வீட்டில்...
நாம் வாழும் வீட்டில் எத்தனை வசதி இருக்கிறது என்பதை விட,
எவ்வளவு அன்பு உள்ளது என்பதுதான் முக்கியம்...
-------------------------------------------------------------------------------------------------------
அமைதி...!
ஒருவர் உங்களை எப்போதுமே குறை சொல்லிக்கொண்டே இருந்தால்
அமைதியாக இருங்கள்...

ஏனென்றால் பல ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை விட
சில்லறைகளுக்கு சத்தம் அதிகம்தான்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்