Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 3 ஜனவரி, 2020

உங்களுக்கு நீங்களே கொடுத்து கொள்ளும் தண்டனை... எது தெரியுமா?

சிரிப்பதற்கான நேரம் இது...!!
பெற்றோர்கள் : இந்த காலேஜ் எப்படி? நல்ல காலேஜ் தானே?
வாட்ச்மேன் : அப்படித்தான் நினைக்கிறேன். இங்கதான் நான் படிச்சு முடிச்சேன்... உடனே எனக்கு வேலை கிடைச்சிருச்சு.
பெற்றோர்கள் : 😳😳
--------------------------------------------------------------------------------------------------------
குமார் : பையனுக்கு என்ன சார் பேர் வெச்சிருக்கீங்க?
பாபு : லோராண்டி-ன்னு வெச்சிருக்கோம்.
குமார் : என்னய்யா பேர் இது? கேள்விப்பட்டதே இல்லையே.
பாபு : என்ன இப்படி சொல்லிட்டீங்க? சித்தர் பாடல்களில் இடம் பெற்ற பேர் சார் இது.
குமார் : அது என்ன பாடல்?
பாபு : நந்தவனத்தி லோராண்டி.
குமார் : 😩😩
--------------------------------------------------------------------------------------------------------

ஆசிரியர் : வாஸ்கோடாகாமா இப்போது உயிருடன் இருந்தா அவர் பெயர் என்ன?
மாணவன் : இஸ்கோடாகாமா...
ஆசிரியர் : எப்படி?
மாணவன் : ஏன்னா 'Was" இறந்தகாலம்... 'is’ நிகழ்காலம்....
எங்களுக்கும் இங்கிலீஷ் தெரியும்ல.... எப்புடி...😎😎
ஆசிரியர் : 😑😑
--------------------------------------------------------------------------------------------------------

 அருண் : என் பையன் பண்ண காரியத்துனால என்னால வெளியில தலை காட்ட முடியலை..
ராம் : அப்படி என்ன பண்ணிட்டான்..?
அருண் : என்னோட விக்கை எடுத்து அவன் போட்டுக்கிட்டுப் போய்ட்டான்.
ராம் : 😂😂
--------------------------------------------------------------------------------------------------------

ராணி : இந்த ஊர்ல போலி டாக்டர் இருக்காரா?
சீலா : ஏன் கேட்குற?
ராணி : என் மாமியாருக்கு உடம்பு சரியில்லை, அவங்கள காட்டத்தான்.
சீலா : 😬😬
--------------------------------------------------------------------------------------------------------

பொன்மொழிகள்..!!

இதயம் சொல்வதை செய்.
வெற்றியோ, தோல்வியோ அதை தாங்கும் சக்தி
அதற்கு மட்டும்தான் உண்டு.

தன்னை அறிந்தவன் ஆசைப்பட மாட்டான்,
உலகை அறிந்தவன் கோவப்பட மாட்டான்,
இந்த இரண்டையும் உணர்ந்தவன் துன்பப்பட மாட்டான்.
யார் என்ன சொன்னாலும் உன் கொள்கையை மாற்றி கொள்ளாதே...
ஒரு சமயம் நீ மாற்றினால், ஒவ்வொரு முறையும் நீ மாற வேண்டி இருக்கும்.
வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமானால்,
நல்ல நண்பர்கள் தேவை.
வாழ்நாள் முழுவதும் வெற்றி பெற வேண்டுமானால்,
ஒரு எதிரியாவது தேவை.
கோபம் என்பது பிறர் செய்யும் தவறுக்கு,
உனக்கு நீயே கொடுத்து கொள்ளும் தண்டனை.
விதைத்தவன் உறங்கினாலும்,
விதைகள் உறங்குவது இல்லை!
--------------------------------------------------------------------------------------------------------

குறளும்... பொருளும்...!!
அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்.

பொருள் :

அருமையான பயன்களை ஆராயவல்ல அறிவை உடைய அறிஞர், மிக்க பயன் இல்லாத சொற்களை ஒருபோதும் சொல்லமாட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக