>>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • தோசைக்கல்லில் முதலில் சுடும் தோசை மட்டும் சரியாக வராததற்கான காரணங்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வெள்ளி, 3 ஜனவரி, 2020

    பண்டிதர்களுக்கு அளிக்கப்பட்ட உணவு... படித்ததில் பிடித்தது... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

    சிரிப்பதற்கான நேரம் இது...!!
    நோயாளி : நர்ஸ்.. ஆப்ரேஷன் முடிஞ்சி நான் கண் முழிச்ச உடனே என் மனைவியை பாக்கணும்.
    நர்ஸ் : கவலைப்படாதீங்க.. கடவுளையே நீங்க பாப்பீங்க!
    நோயாளி : 😳😳
    ----------------------------------------------------------------------------------------------------
    பாபு : படிச்சு முடிச்சதுக்கு அப்புறம் என்ன செய்யலாம்னு இருக்க...?
    ராம் : புக்கை மூடிவிடலாம்னு இருக்கேன்.
    பாபு : 😠😠
    ----------------------------------------------------------------------------------------------------
    ஆசிரியர் : உன்னை விட சின்ன பையனை எதுக்குடா அடிச்ச? கையை நீட்டு...
    மாணவன் : நீங்களும் அதே தப்பைதான் சார் பண்றீங்க...!
    ஆசிரியர் : 😶😶
    ----------------------------------------------------------------------------------------------------
    பொன்மொழிகள்..!!
    எதிர்காலம் என்ற ஒன்றைப் பற்றி நீங்கள் நினைக்காவிட்டால்
    எதிர்காலம் என்ற ஒன்று இல்லாமல் போய்விடலாம்!
    நேற்றைய தினம் இறந்து விட்டது!
    நாளைய தினம் இன்னும் பிறக்கவில்லை!
    இன்றைய தினமே முக்கியம்!
    இதுவே நமக்குச் சொந்தமானது!

    நாக்கிற்கு எலும்புகள் கிடையாது,
    ஆனால் அது பலரது எலும்புகளை நொறுக்குகிறது.
    ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை.
    முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.
    ----------------------------------------------------------------------------------------------------
    படித்ததில் பிடித்தது...!!
    ஒரு செல்வந்தர் இரண்டு ஞான பண்டிதர்களை விருந்துக்கு அழைத்தார். ஒருவர் முகம் கழுவச் சென்றபோது அவரைப்பற்றி மற்றொருவரிடம் புகழ்ந்து பேசினார்.

    ஆனால், இரண்டாவது பண்டிதரோ அவரை ஒரு கழுதை என்றார். பின் முகம் கழுவப் போனவர் வந்ததும், இவர் முகம் கழுவச் சென்றார்.

    இரண்டாமவரைப் பற்றி முதல் பண்டிதரிடம் பெருமையாகப் பேச, அவர் ஒன்றும் தெரியாத மாடு என்றார் இரண்டாமவர்.

    பின்னர் இரண்டு பண்டிதர்களும் உணவு உண்ண அமர்ந்தனர். ஒருவர் தட்டில் புல்லும், மற்றவர் தட்டில் தவிடும் வைக்கப்பட்டபோது இருவரும் கூச்சலிட்டனர்.

    தங்களை அவமானப்படுத்தி விட்டதாகக் கூறி கோபப்பட்டனர்.

    செல்வந்தர் சொன்னார், நான் உண்மையில் உங்களை மகா பண்டிதர்கள் என்று கருதிதான் விருந்துக்கு அழைத்தேன்.

    ஆனால், நீங்கள் யாரென்று உங்களின் மூலமாகவே தெரிந்த பின் அதற்கேற்றாற்போல் உணவு படைத்தேன். என் மீது ஏன் வீணாய் கோபப்படுகிறீர்கள்? என்றார்.

    பண்டிதர்கள் முகம் கவிழ்ந்து வெளியே சென்றனர்.
    ----------------------------------------------------------------------------------------------------
    கவிதை... !

    அனுமதி கேட்கவும் இல்லை...
    அனுமதி வாங்கவும் இல்லை...
    ஆனாலும் பிடிவாதமாக ஒரு முத்தம்...
    கன்னத்தில் கொசு கடி.😬😬
    ----------------------------------------------------------------------------------------------------
    குறளும்... பொருளும்...!

    அறிவினு ளெல்லாந் தலையென்ப தீய
    செறுவார்க்குஞ் செய்யா விடல்.

    பொருள் :

    தம்மை வருத்துவோர்க்கும் தீய செயல்களைச் செய்யாமலிருப்பதை, எல்லாவற்றிலும் தலையான அறிவு என்று கூறுவர்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக