Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 2 ஜனவரி, 2020

யாரும் பெண் தராததால் சிறுமியை திருமணம் செய்து கொண்ட 37 வயது நபர்..! நாமக்கல்லில் பரபரப்பு...


 

பெற்றோரிடம் ஆசை வார்த்தைகளை கூறி சிறுமியை அவசர அவசரமாக திருமணம் செய்த பெட்ரோல் பங்க் ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர்.


வயது காரணமாக ஊரில் யாரும் பெண் தராமல் இருந்ததால் 17 வயது சிறுமிக்கு தாலி கட்டி மனைவியாக்க முயன்ற நாமக்கல் நபரின் குடும்பத்தை கூண்டோடு கைது செய்துள்ளது காவல்துறை.

தமிழ்நாட்டில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக குற்றம் இழைக்கப்படாமல் இருக்க காவல்துறை கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சிறார் ஆபாச படங்களை பாத்தாலோ, பகிர்ந்தாலோ, பதிவிறக்கம் செய்தாலோ போக்சோ சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என டிஜிபி ரவி தெரிவித்துள்ளார்.

அந்த குற்றத்தில் முதல் ஆளாக திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் அல்போன்ஸ்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சிறார் ஆபாச படங்களை பார்த்து பகிர்ந்து வந்ததாக தமிழகத்தில் 40 பேர் பட்டியலை மத்திய அரசு போலீசாரிடம் அளித்துள்ளது. அவர்களை பிடிக்கும் நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் பாராமதி வேலூர் பகுதியை சேர்ந்த ஜெயலக்ஷ்மன் (37) அப்பகுதியில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு நீண்ட நாட்களாகவே பெண் பார்த்து வந்துள்ளனர். ஆனால் ஜெயலக்ஷ்மனுக்கு 37 வயதாவதால் எங்கும் பெண் கிடைக்கவில்லை. இதனால் கவலை கொண்ட அவரது தாய் நல்லம்மாள், மகனுக்கு எப்படியாவது திருமணம் செய்துவிட வேண்டும் என்ற நோக்கில் இருந்துள்ளார்.

அப்போது அவர்கள் வசிக்கும் பகுதியில் 17 வயதான சிறுமியின் தாய், தந்தையான பழனிசாமி - லதா அவர்களிடம் சென்று ' உங்களது மகளை என் மகனுக்கு திருமணம் செய்து கொடுங்கள். நாங்கள் நிறைய வரதட்சணை தருகிறோம் என்று கூறியுள்ளார். நல்லம்மாளின் கூற்றை ஆரம்பத்தில் மறுத்த சிறுமியின் பெற்றோர் பின்னர் ஒத்துக்கொண்டனர்.

இதையடுத்து இருவருக்கும் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்தன. சம்பவத்தன்று ஜெயலகஷ்மன் சிறுமிக்கு தாலி கட்டி மனைவியாக்கி கொண்டார். இதனை அறிந்த சிலர் குழந்தை பாதுகாப்பு மையத்துக்கு தகவல் அளித்துள்ளனர். பின்னர் அங்கு விரைந்து வந்த அதிகாரிகள் சட்டப்படி அந்த திருமணத்தை தடை செய்ததோடு ஜெயலக்ஷமன் மற்றும் சிறுமியின் பெற்றோரை போலீசார் உதவியுடன் கைது செய்தனர். அந்நேரத்தில் ஜெயலக்ஷமன் தாய் நல்லம்மாள் தப்பியுள்ளார். அவரை கைது செய்ய போலீசார் தேடி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக